1-10 ஸ்லோகங்களை ஒலி வடிவில் கேட்க
ததோ யுத்த பரிஷ்ராந்தம் ஸமரே சிந்தயா ஸ்திதம்
ராவணம் சாக்ரதோ த்ருஷ்ட்வா யுத்தாய ஸமுபஸ்திதம்
தேவையான ஆயத்தங்களுடன் யுத்தத்திற்குத் தயாராக தன் முன்னே நிற்கும் ராவணனைக் கண்டு, போரில் எப்படி வெல்வது என்ற எண்ணங்களினால் மூழ்கடிக்கப் பட்டு, சண்டையினால் களைப்புற்று நின்று கொண்டிருக்கும் ஸ்ரீ ராமனைப் பார்த்து
தேவையான ஆயத்தங்களுடன் யுத்தத்திற்குத் தயாராக தன் முன்னே நிற்கும் ராவணனைக் கண்டு, போரில் எப்படி வெல்வது என்ற எண்ணங்களினால் மூழ்கடிக்கப் பட்டு, சண்டையினால் களைப்புற்று நின்று கொண்டிருக்கும் ஸ்ரீ ராமனைப் பார்த்து
2.
தைவ தைச்ச ஸமாகம்ய த்ரஷ்டும் அப்யாகதோ ரணம்
உபாகம்யா பிரவீத் ராமம் அகஸ்த்யோ பகவாந் ருஷி:
பிற தேவர்களுடன் யுத்தத்தைக் காண வந்திருந்த பூஜ்ய மகரிஷி அகஸ்த்யர், ஸ்ரீ ராமனை நெருங்கி இவ்வாறு கூறினார்
பிற தேவர்களுடன் யுத்தத்தைக் காண வந்திருந்த பூஜ்ய மகரிஷி அகஸ்த்யர், ஸ்ரீ ராமனை நெருங்கி இவ்வாறு கூறினார்
3.
ராம ராம மஹாபாஹோ ஸ்ருணு குஹ்யம் ஸநாதனம்
யேந ஸர்வாந் ரீந் வத்ஸ ஸமரே விஜயிஷ்யஸி
ராமா, சிறந்த வீரனான, பெருந் தோள்களை உடைய ஸ்ரீ ராமா! எக்காலத்திற்கும் ரகசியமான ஒன்றை நீ கேட்பாயாக. இதன் மூலம் என் குழந்தாய்! யுத்த களத்தில் எல்லா எதிரிகளையும் உன்னால் வெல்ல முடியும்.
4.
ஆதித்ய ஹ்ருதயம் புண்யம் ஸர்வ சத்ரு விநாசனம்
ஜயா வஹம் ஜபேந் நித்யம் அக்ஷயம் பரமம் சிவம்
இதன் பெயர் ஆதித்ய ஹ்ருதயம். இது பவித்திரமானது, எதிரிகளை அழிக்க வல்லது, வெற்றியை அளிக்கவல்லது, காலா காலத்திற்கும் நிலைத்து இருப்பது மற்றும் ஆசீர்வதிக்கப் பட்டது. ஒருவர் இதை கண்டிப்பாக பாராயணம் செய்ய வேண்டும்.
5.
5.
ஸர்வ மங்கள மாங்கல்யம் ஸர்வ பாப ப்ரநாசனம்
சிந்தா சோக ப்ரஷமணம் ஆயுர் வர்தநம் உத்தமம்
இது வரங்களிலேயே சிறந்த வரமாகவும், எல்லா பாவங்களையும் போக்க வல்ல சிறந்த சாதனமாகவும், மனதில் உள்ள துயரையும், கிலேசத்தையும் போக்க வல்லதும், நீண்ட ஆயுளை அளிக்க வல்லதும் ஆகும்.
6.
6.
ரஷ்மி மந்தம் ஸமுத்யந்தம் தேவாஸுர நமஸ்க்ருதம்
பூஜயஸ்வ விவஸ்வந்தம் பாஸ்கரம் புவனேஸ்வரம்
உலகிற்கெல்லாம் அதிபதியாகவும், கிரணங்களை சூடியவரும், தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப்படுபவரும், இவ்வுலகை பிரகாசிக்க வைப்பவரும் ஆன உதிக்கின்ற சூரியக் கடவுளை நீ வணங்குவாயாக.
7.
ஸர்வ தேவாத் மகோ ஹ்யேஷ: தேஜஸ்வீ ரஷ்மி பாவந:
ஏஷ தேவா ஸுரகணாந் லோகாந் பாதி கபஸ்திபி:
எல்லா கடவுளர்களையும் அவர் தன்னுள்ளே கொண்டுள்ளார். அவர் பிரகாசமாகவும், எல்லா தேவர்கள், அசுரர்கள் மற்றும் அவர்களின் உலகை தனது கிரணங்களால் படைத்தும், காத்தும் வருகிறார்.
8.
ஏஷ ப்ரஹ்மா ச விஷ்ணுஷ் ச சிவ: ஸ்கந்த: பிரஜாபதி:
மஹேந்த்ரோ தநத: காலோ யமஸ் ஸோமோ ஹ்யாபாம் பதி:
அவரே பிரமன் , விஷ்ணு, சிவன், ஸ்கந்தன், படைக்கும் பிரஜாபதி, மகேந்திரன், செல்வத்தின் அதிபதி குபேரன், காலன், யமன், சோமன் மற்றும் வருணன்.
9.
பிதரோ வஸவஸ் ஸாத்யா ஹ்யா ஸிவநௌ மருதோ மநு:
வாயுர் வஹ்நி: ப்ரஜா ப்ராண ருது கர்தா ப்ரபாகர:
அவரே பித்ரு, அஷ்ட வசுக்கள் , பன்னிரண்டு சந்தியைகள், இரண்டு அஷ்வினிகள், மனு, வாயு, அக்னி, ஜகத்தின் உயிர் மூச்சு, ருதுக்களின் (காலங்களின்) காரணி, ஒளியின் இருப்பிடம்.
10.
ஆதித்ய: ஸவிதா ஸூர்ய: கக: பூஷா கபஸ்திமாந்
ஸுவர்ண ஸத்ருஷோ பாநு: விஷ்வரேதா திவாகர:
அவர் ஆதிதியின் புதல்வர், எல்லோரையும் படைப்பவர், சூரியக் கடவுள், சொர்கங்களில் பயணிப்பவர், அனைவரையும் போஷிப்பவர், கிரணங்களை உடையவர், பொன்னிறத்தில் உள்ளவர், புத்திக்கூர்மை உள்ளவர், ஜகதிற்கே ஆதாரம் ஆனவர், பகலை உருவாக்குபவர்.
ஸ்லோகங்களை எழுதி ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் பிறகு அர்த்தமும் எழுதியிருப்பது சிறப்பாக உள்ளது.
ReplyDeleteதொடரட்டும்.
நன்றிகள்.
பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள்.
நன்றி vgk சார். தொடர்ந்து வாங்கோ.
ReplyDeleteஆஹா! ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் அர்த்தமா? கலக்கல்தான் அப்போ! தொடர்ந்து படிக்க நாங்கள் தயார்...:)
ReplyDeleteதக்குடு
ReplyDeleteதவறு ஏதாவது இருந்தால் நீ தான் திருத்தனும் :)
முதல் பகுதி நன்கு கேட்க முடிகிறது. நன்றி.
ReplyDelete