ஒலி வடிவில் கேட்க
12.
12.
த்ரி பாகம் பாடமானஸ்து கங்கா ஸ்நான பலம் லபேத்
ஷடம்சம் ஜபமானஸ்து சோம யாக பலம் லபேத்
மூன்றில் ஒரு பகுதியைப் பாராயணம் செய்யும் ஒருவருக்கு புனித நதியாம் கங்கையில் ஸ்நானம் செய்த பலன் கிட்டும்.
ஆறில் ஒரு பகுதியைப் பாராயணம் செய்பவருக்கு சோம யாகம் செய்த பலன் கிட்டும்.
13.
ஏக அத்தியாயம் து யோ நித்யம் படதே பக்தி சம்யுத:
ருத்ர லோகம் அவாப்நோதி கணோ பூத்வா வசீசிரம்
ஒரு அத்தியாயத்தைப் பரம பக்தியோடும், சிரத்தையோடும் படிப்பவர்கள், ருத்ர லோகத்தை அடைந்து, பரமசிவனின் சேவகனாகிய கணம் என்ற பதவியைப் பெற்று, அங்கே பல்லாண்டு வாழ்வார்கள்.
14.
அத்தியாயம் ஸ்லோக பாடம் வா நித்யம் யஹ் படதே நர:
ஸ யாதி நரதாம் யாவன் மந்வந்திரம் வசுந்தரே
பூமியே! ஒருவர் தினமும் ஒரு அத்தியாயம் படித்தாலோ, அல்லது ஒரு ஸ்லோகம் படித்தாலோ அவர் மந்வந்திரம் காலத்தின் (71 மஹா யுகங்கள் / 3084488000 வருடங்கள் ) இறுதி வரை சரீர உடலுடன் இருப்பார்.
15-16
கீதா யஹ் ஸ்லோக தசகம் சப்த பஞ்ச சதுஸ்தயம்
த்வுத்ரீநேகம் ததர் தம்வா ஷ்லோகாநாம் யஹ் படேன்நர:
சந்திரலோகம் அவாப்னோதி வர்ஷானாம் ஆயுதம் துருவம்
கீதா பாட சமாயுக்தோ ம்ரிதோ மானுஷடாம் வ்ரஜேத்
கீதையின் பத்து, ஏழு, ஐந்து, நான்கு, மூன்று, இரண்டு, ஒன்று அல்லது பாதி ஸ்லோகத்தை உபாசிப்பவர்கள் சந்திர லோகத்தை அடைந்து அங்கே பத்தாயிரம் ஆண்டுகள் வாழ்வார்கள். கீதையை நித்ய பாராயணம் செய்யும் வழக்கம் உடையவர்கள் இறந்த பிறகும் மற்றொரு மானிடப் பிறவி எடுத்து மீண்டும் ஜனிப்பார்கள்.
17.
கீதா அப்யாசம் புன க்ரித்வா லபதே முக்திம் உத்தமாம்
கீதேத் யுச்சார சம்யுக்தோ ம்ரிய மானோ கதிம் லபேத்
கீதையை மீண்டும், மீண்டும் பாராயணம் செய்வதன் மூலம் ஒருவர் மோக்ஷம் அடைகிறார். இறக்கும் தருவாயில் கீதா என்ற வார்த்தையை உச்சரிப்பதால் ஒருவர் மோக்ஷத்தை அடைகிறார்.
18.
கீதார்த்த ஸ்ரவணா சக்தோ மஹா பாப யுடோபி வா
வைகுந்தம் சமவாப்நோதி விஷ்ணுனா சஹ மோடதே
ஒருவர் பாவத்தில் மூழ்கி இருந்தாலும், கீதையின் சாராம்சத்தைக் கேட்பதற்கு
உரிய முயற்சியை எடுப்பவர்கள் வைகுண்டம் சென்று விஷ்ணுவுடன் மகிழ்ந்து இருப்பார்கள்.
19.
கீதார்த்தம் த்யாயதே நித்யம் க்ரித்வா கர்மாணி பூரிஷ:
ஜீவன் முக்தா ஸ விஜ்னேயோ தேஹாந்தே பரமம் பதம்.
கீதையின் பொருளைக் குறித்து தினமும் தியானிப்பவர்கள், பல சத்காரியங்கள் செய்து மரணத்தின் பின்னே சிறந்த கதியை (பரமபதம்) அடைவார்கள். அப்படிப்பட்ட ஒருவரையே உண்மையான ஜீவன் முக்தாவாகக் கருத வேண்டும்.
20.
கீதாம் ஆஸ்ரித்ய பகவோ பூபுஜோ ஜனகாதயா
நிர்தூத கல்மஷா லோகே கீதா யாதாஹ் பரம் பதம்
இவ்வுலகில் கீதையில் சரண் அடைந்த பலர், ஜனகரைப்* போன்ற மன்னர்களும், மற்றவர்களும் உயர்ந்த கதியான பரமபதம் அடைந்து, எல்லாப் பாவங்களில் இருந்தும் தங்களைச் சுத்தப் படுத்திக் கொண்டார்கள்.
(* ஜனகரின் காலம் த்ரேதா யுகம். பகவத் கீதையின் காலமோ த்வாபர யுகம். இங்கே குறிக்கப்படுவது அஷ்டவக்ர கீதை ஆகும். அஷ்டவக்ரர் (உடலில் அஷ்டகோணலுடன் பிறந்தவர்), பாண்டித்தியம் பெற்று, ஜனக மகாராஜாவிற்கு உபதேசம் செய்தார். அது அஷ்ட வக்ர கீதை என்று அழைக்கப் படுகிறது.
21.
கீதா யஹ் படனம் க்ரித்வா மஹாத்மியம் நைவ யஹ் படேத்
வ்ரிதா பாடோ பவேத் தஸ்ய ஷ்ரம ஏவ ஹ்யுதா ஹ்ரிதா:
பகவத் கீதையை பாராயணம் செய்த பின்னர் இந்த மகாத்மியத்தை ஒருவர் படிக்காமல் விட்டால், அதன் பலனை ஒருவர் தொலைக்கின்றார். பாராயணம் செய்த முயற்சி மட்டுமே இருக்கும்.
இது பக்தர்களின் மனதுள் ஒரு பக்தி மற்றும் ஷ்ரத்தையை விதைக்கவே. பகவத் கீதை கடவுளின் வாக்கியம் - வெறும் தத்துவ நூல் அல்ல. எனவே இதைப் பாராயணம் செய்யும் போது தகுந்த பக்தியும், கவனமும் அவசியம்.
22.
ஏதன் மஹாத்மிய சம்யுக்தம் கீதா அப்யாசம் கரோதி யஹ்
ஸ தத் பலம் அவாப்நோதி துர்லபம் கதிம் ஆப்னுயாத்
கீதா மஹாத்மியம் உடன் கீதையைப் பாராயணம் செய்யும் ஒருவர், மேலே குறிப்பிட்டுள்ள பலன்களை அடைந்து, பிற வழிகளில் அடைய முடியாத நற் கதியைப் பெறுவார்.
23.
சுத உவாச:
மஹாத்மியம் ஏதத் கீதாயாஹ் மையா ப்ரோக்தம் சனாதனம்
கீதாந்தே ச படேத்யஸ்து யதுக்தம் தத் பலம் லபேத்
சுதர் சொன்னது:
என்றும் நிலைத்து இருக்கக் கூடிய, என்னால் உரைக்கப்பட்ட இந்த கீதா மஹாத்மியத்தை கீதையைப் பாராயணம் செய்த பின்னர் படிக்க வேண்டும். அதன் மூலம் இதில் குறிப்பிடப்பட்டுள்ள பலன்களை அடையலாம்.
இதி ஸ்ரீ வராஹ புராணே ஸ்ரீ கீதா மஹாத்மியம் சம்பூர்ணம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி:
No comments:
Post a Comment