21.
வேதாவிநாசிநம் நித்யம் ய ஏநம் அஜம் அவ்யயம்
வேதாவிநாசிநம் நித்யம் ய ஏநம் அஜம் அவ்யயம்
கதம் ஸ புருஷ: பார்த கம் காதயதி ஹந்தி கம்
அந்த ஆத்மாவானது அழிக்க முடியாதது, நிரந்தரமானது, பிறப்பில்லாதது, குறைவே இல்லாதது என்பதை அறிந்த ஒருவன் எவ்வாறு கொல்பவன், அல்லது கொல்லப்பட்டவன் ஆவான் அர்ஜுனா!
22.
22.
வாஸாம்ஸி ஜீர்ணாநி யதா விஹாய நவாநி க்ருஹ்ணாதி நரோ(அ)பராணி
ததா சரீராணி விஹாய ஜீர்ணாநி அந்யாநி ஸம்யாதி நவாநி தேஹீ
எப்படி மனிதன் ஒரு பழைய உடையைக் களைந்து புதிய உடையைப் போட்டுக் கொள்கிறானோ, அப்படியே ஆத்மாவும் பழைய உடலைக் களைந்து, புதிய உடலில் நுழைகின்றது.
23.
23.
நைநம் சிந்தந்தி சஸ்த்ராணி நைநம் தஹதி பாவக:
ந சைநம் க்லேத யந்த்யாபோ ந சோஷயதி மாருத:
அந்த ஆத்மாவை ஆயுதத்தால் வெட்ட முடியாது, அக்னியினால் எரிக்க முடியாது, நீரினால் நனைக்க முடியாது, காற்றினால் உலர்த்த முடியாது
24.
24.
அச்சேத்யோ(அ)யம் அதாஹ்யோ(அ)யம் அக்லேத்யோ(அ)சோஷ்ய ஏவ ச
நித்ய: ஸர்வகத: ஸ்தாணுர் அசலோ(அ)யம் ஸநாதந:
இந்தப் பரம்பொருளை வெட்டவோ, எரிக்கவோ, ஈரப்படுதவோ, உலர்த்தவோ முடியாது. அது சாஸ்வதம் ஆனது, அனைத்திலும் ஊடுருவி இருப்பது, நிலையானது, புராதனமானது, அசைக்க முடியாதது
இந்தப் பரம்பொருளை வெட்டவோ, எரிக்கவோ, ஈரப்படுதவோ, உலர்த்தவோ முடியாது. அது சாஸ்வதம் ஆனது, அனைத்திலும் ஊடுருவி இருப்பது, நிலையானது, புராதனமானது, அசைக்க முடியாதது
25.
அவ்யக்தோ(அ)யம் அசிந்த்யோ(அ)யம் அவிகார்யோ(அ)யம் உச்யதே
தஸ்மாத் ஏவம் விதித்வைநம் நாநுசோசிதும் அர்ஹசி
இது எழுதப்படாதது, நினைக்க முடியாதது, மாற்றம் இல்லாதது. அதனால் இது இப்படித் தான் என்று அறிந்த பின்னர் நீ வருந்தக் கூடாதது.
26.
26.
அத சைநம் நித்யஜாதம் நித்யம் வா மந்யஸே ம்ருதம்
ததாபி த்வம் மஹாபாஹோ நைநம் சோசிதும் அர்ஹசி
பெருந்தோள் கொண்டவனே! ஒரு வேளை நீ இதை மீண்டும் மீண்டும் பிறந்து, இறக்கும் ஒன்றாக நினைத்துக் கொண்டாலும் நீ அதற்காக வருத்தப் படக் கூடாது.
27.
27.
ஜாதஸ்ய ஹி த்ருவோ ம்ருத்யுர் த்ருவம் ஜந்ம ம்ருதஸ்ய ச
தஸ்மாத் அபரிஹார்யே(அ)ர்தே ந த்வம் சோசிதும் அர்ஹசி
பிறந்த எல்லாவற்றிற்கும் இறப்பு என்ற ஒன்று நிச்சயமானது. அப்படியே இறந்த ஒன்றிற்கு பிறப்பு என்பதும் நிச்சயமானது. நிச்சயம் ஆன இது குறித்து நீ வருத்தப்படக் கூடாது.
28.
28.
அவ்யக்தாதீநி பூதாநி வ்யக்தம் அத்யாநி பாரத
அவ்யக்த நிதநாந்யேவ தத்ர கா பரிதேவநா
உயிர்கள் ஆரம்பத்தில் விளக்க முடியாததாக உள்ளது. அர்ஜுனா! அவை அவற்றின் நடுப் பிராயத்தில் விளக்க முடிபவை ஆக உள்ளன. மீண்டும் அவற்றின் இறுதியில் விளக்க முடியாதவை ஆகி விடுகின்றன. இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது?
29.
29.
ஆச்சர்யவத் பஷ்யதி கச்சித் ஏநம் ஆச்சர்யவத் வததி ததைவ சாந்ய:
ஆச்சர்யவச்சைநம் அந்ய: ஸ்ருணோதி ஸ்ருத்வா(அ)ப்யேநம் வேத ந சைவ கச்சித்
ஒருவன் இந்த ஆத்மாவை அதிசயமாகப் பார்கிறான், இன்னொருவன் இதை அதிசயமாகப் பேசுகிறான், இன்னொருவன் இதை அதிசயமாகக் கேட்கின்றான். இருந்தும் இதை எல்லாம் கேட்டும், ஒருவனும் இதைப் புரிந்து கொள்வதில்லை.
30.
தேஹீ நித்யம் அவத்யோ(அ)யம் தேஹே ஸர்வஸ்ய பாரத
தஸ்மாத் ஸர்வாணி பூதாநி ந த்வம் சோசிதும் அர்ஹசி
அர்ஜுனா! எல்லோரின் உடலிலும் உள்ளே உறைந்திருக்கும் இந்த ஆத்மாவானது அழிக்க முடியாதது. எனவே எந்த ஒரு படைப்பிற்காகவும் நீ வருத்தப்படக் கூடாது.
விசாரம்
சென்ற வாரம் பார்த்ததைப் போல இதிலும் ஸ்ரீ கிருஷ்ணர் ஆத்மா பற்றிய விளக்கத்தைத் தொடர்கின்றார்.
அர்ஜுனன் கௌரவர் சேனையில் உள்ள ஆச்சார்யர் துரோணர், க்ருபாசாரியார், பீஷ்மர் மற்றும் பிற நண்பர்களை / உறவினர்களை சரீர உடலில் காண்கின்றான். ஸ்ரீ கிருஷ்ணர் அவனது கண்ணோட்டத்தை மாற்றி அந்த சரீர உடல் உள்ளே இருக்கும் ஆத்மாவைக் காண வைக்கின்றார். அந்த ஆத்மாவிற்கு அழிவு என்ற ஒன்று இல்லாத போது அர்ஜுனன் எப்படி அவர்களை அழித்தவன்/கொல்பவன் ஆவான். அதைப் போல அர்ஜுனன் உடல் உள்ளேயும் ஆத்மா இருக்கிறது. அவன் ஒரு வேளை போரில் கொல்லப்பட்டாலும் அவன் எப்படி கொல்லப்பட்டவன் ஆவான்? அவர்களின் உள்ளே இருக்கும் ஆத்மா இன்னொரு உடலினில் செல்லப் போகிறதே? பிறகு ஏது அழிவு?
இதன் மூலம் ஸ்ரீ கிருஷ்ணர் அவன் மனதில் இருக்கும் குற்ற உணர்ச்சியைக் களைய முயற்சிக்கிறார். அர்ஜுனனுக்கு இதில் இருக்கும் சந்தேகங்களைப் போக்கி பின்னர் அவனைப் போருக்குத் தயார் செய்கிறார்.
சென்ற வாரம் பார்த்த விஷயம் - சரீர உடலை ஒரு detatched attachment கொண்டு பார்ப்பது. இந்த சரீர உடல் இந்த ஆத்மாவைத் தாங்கி நிற்கும் ஒரு கருவி/ நிமித்தம் - அவ்வளவு தான். இந்த உடல் நாம் பிறப்பதற்கு முன்பாக என்னவாக இருந்தது? நம்மால் சொல்ல முடியாது. அது பஞ்ச பூதங்களில் ஒன்றாக இருந்திருக்கும். உறுதியாகத் தெரியாது. நாம் சரீர உடலைத் தாங்கி இருக்கும் போது அதற்கு ஒரு உருவம் கிடைக்கிறது. நாம் பாலகனாக, குமாரனாக, மத்திய வயது உடையவனாக, கிழவனாக ஆகும் போது அந்த அந்த நிலைக்கான உடல் இருக்கிறது. அந்தந்த வயதிற்கு ஏற்ற கூன், நரை விழுகிறது. இறந்த பின்னர் இந்த உடல் என்னவாக ஆகிறது? அதுவும் தெரியாது. எரித்தால் ஆறு கைப்பிடி, புதைத்தால் ஆறடி. மீண்டும் பஞ்ச பூதத்தில் கலக்கின்றது. இதைத் தான் 28 ம் ஸ்லோகம் விளக்குகிறது.
இந்த ஆத்மாவை நன்கு அறிந்தவர் என்று யாரும் இல்லை. குருடர்கள் யானையைத் தடவிப் பார்த்து யானை இப்படி இருக்கும், அப்படி இருக்கும் என்று கற்பனையில் இருப்பதைப் போல இருக்கிறோம். இத்தகைய ஆத்மா என்ற ஒன்றை நன்கு உணர்ந்த ஒருவன் அதிசயப் பிறவி. அவ்வளவு கடினமானது. அப்பேர்ப்பட்ட ஒருவனே பிறப்பு குறித்து சந்தோஷிக்காமலும், இறப்பு குறித்து துக்கப்படாமலும் இருப்பான். அவனே ஸ்திதப் பிரக்யன்.
ஸ்லோகங்களை அர்த்தத்துடன் படிக்கும்போது நல்லா புரிஞ்சு ரசிக்க முடியுது. நன்றி
ReplyDeleteவிசாரம் எல்லாம் பலமாத்தான் இருக்கு போலருக்கு!!! :)
ReplyDeleteவாங்கோ மாமி
ReplyDeleteவா தக்குடு! எனக்கு உன்ன மாதிரி ஹாரி பாட்டரும் அபிராமி பட்டரும் னு எல்லாம் எழுத தெரியாது. ஏதோ ஜில் ஜில் ரமாமணி மாதிரி நான் ஒரு ஓரமா வாசிச்சுண்டு இருக்கேன்.
ஹலோ!! நானே ஜில்ஜில் ரமாமணி கோஷ்டில தபேலா வாசிக்கரவர் மாதிரி தான் எழுதிண்டு இருக்கேன். நீங்க வேற நக்கல் அடிக்காதீங்கோ!!
ReplyDeleteசாதுர்மாஸ்ய தரிசனம், பாத பூஜை & பிக்ஷாவந்தனம் எல்லாம் செளக்கியமா ஆச்சு அண்ணா! உங்களைதான் நினைச்சுண்டேன் சிருங்கேரில வச்சு. வேத கிளாஸ் பத்தி சொன்னவுடனே ஆச்சார்யாள் ரொம்ப சந்தோஷபட்டார் & வர்தந்தி உத்ஸவ சால்வை ஒன்னு அனுக்கிரஹம் பண்ணி பூரணமா ஆசிர்வாதம் பண்ணினார்...:))