Saturday, April 9, 2011

Stroudsburg Sharadaambal Temple


In this next edition of Temples of North America series, today we are going to look at Stroudsburg Sri Sharadaambal Temple. This is in the state of Pennsylvania surrounded by the Poconos mountain range having had its Sthaapanam and Kumbabishekam in July 2008. Prior to 2008 this had its presence in a big mansion converted into a temple and moved to it's current location built as per the Agama Shastras. This is modelled on the Sringeri Sharadaambal Temple located in Sringeri, Karnataka, India.

Let us first look at the brief  history of Sringeri and Sharadaambal. Adhi Sankara after attaining sanyaasa was doing Bharath Dharshan and was asked to do a debate with Mandana Mishra by Kumarila Bhatta in Prayaag. So Adhi Sankara proceeded to meet Mandana Mishra who was residing in today's Madhya Pradesh and a follower of Mimaamsa philosophy. Mimaamsa philosophy in layman terms would be following all the rituals strictly as per its prescribed edicts. Mandana Mishra to some is a reincarnation of Brahma and his wife Ubhaya Bharathi (Sarasavaani) of Saraswathi. Whenever there is a debate, there needs to be a judge and Sarasavaani acted as the judge. The term of the debate is the loser has to become the winner's disciple and the subject is Advaita. Adhi Sankara won the debate in 15 days and Mandana Mishra started to leave with Him as his disciple Sureswara. Sarasavaani asked Adhi Sankara to debate with her also. After a long debate she too was won. Sarasavaani said she will join them and will follow them but they should not look back to see if she is following. If they did she will stay there for ever. This way they proceeded southward and reached the banks of Tungabhadra. There are two versions here - one, Sarasavaani when walking in the river sand, her anklet's sounds couldnot be heard. So Adhi Sankara and Sureswara looked back and so Sarasavaani stayed there. Another version is Adhi Sankara saw a cobra a predator for frogs providing shelter to a pregnant frog from the scorching sun. Adhi Sankara decided this is the best place for establishing his mutt as this place is a paradise where predators and preys lived in amity. This place is present day Sringeri and Sarasavaani is Sharadaamba. Adhi Sankara established his Dakshinaamnaaya Mutt here and called as Sharaada Peetam with Sureswara as the first Achaarya. As a side note, Sureswara belongs to Abasthamba Sutra (a division like Gothra and mentioned in Abhivaadaye recital). Smartha marriage rituals are as per the Abasthamba Griha Sutra codified by Sureswara.

ஸ்ருதி ஸ்ம்ருதி புராணம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத் பாதம் சங்கரம் லோக சங்கரம்


Devi Sharadaambal


Once we enter the main entrance of this Sringeri temple of Stroudsburgh, we go through a small passageway where we have two large pictures of Adhi Sankara and Sharadaamba. Straight ahead on entering the main hall we have the three divine sannidhaanams - one for Sharadhaamba with Her vahana of Hamsa bird (அன்னப் பறவை), Adhi Sankara and Chandramouleeswara (Lord Shiva) with His vaahana Nandi. Sharadaamba is in a seated posture with her saree pleats nicely covering her seat. While starting our Pradakshina, we start with the  Panchayatana parikrama. Panchayatana puja is a Smartha sampradaaya started by Adhi Sankara which consists of worshipping five deities - Shiva, Vishnu, Paarvathi, Surya and Ganesha. Shiva is placed in the center with a Shiva Linga to do abishekams and the other four are placed on the four corners of the square. In the Prahaaram, we have the deities of Lord Ganesha with his vaahana mouse, Lord Subramaniar with consorts Valli and Deivaanai and vaahana peacock, Chandikeshwara, Hanumaan, Devi Bhavani facing south (in fact in all temples the non major deity of Devi Paarvathi will be facing south as per the shloka in Lalitha Sahasranaama Dakshina Dakshinaradhya ..), Lord Krishna and Navagrahaas. In all the Sankara mutts the presiding deity of Shiva will be Chandramouleeswara and the Achaaryas do puja this deity daily without fail. There is the Swarna Ratha in an enclosure which is run around the deities indoors on special occassions. Every evenings there is recital of Sri Lalitha Sahasranaama. In the walls of the temple the shlokas from Devi Mahatmiyam are engraved.

Close by is the Temple Kitchen and the old temple. In the old temple walls, we have the pictures denoting the various life stages of Adhi Sankara like His parent's prayer at the Trichur Vadakkumnaathan temple, a crocodile catching hold of Adhi Sankara in the Poorna river and Him pleading His mother to give him permission for Sanyaasa, his pilgrimage and meeting Kumarila Bhat. As per the mutt traditions, food is offered to visitors at noon and evenings.

The present Achaarya of Sringeri mutt is Sri Sri Bharathi Theertha Mahaswamigal. Today April 09th is his Shastyabtapoorthi and his Varadhanthi (Birthday) was celebrated in a grand scale today. Rudra paarayanam, Veda and Upanishad Paarayanam were all recited and Homams were held for his longevity. My prostrations to Pujya Swamiji on this occassion.


Currently this temple is ably managed by Shri. Yegnasubramanian and all anushtaanas and being followed as per the Sringeri temple. The website for this temple is at http://www.svbf.org/home_page.php

Devi Picture 4 - Meenakshiamman


ஜகஜ்ஜனனி சுக பாணி கல்யாணி சுக ஸ்வரூபிணி மதுர வாணி
சொக்கநாதர் மனம் மகிழும் மீனாக்ஷி பாண்டிய குமாரி பவானி
அம்பா சிவ பஞ்சமி பரமேஸ்வரி வேண்டும் வரம் தர இன்னும் 

மனம் இல்லையோ வேத வேதாந்த நாத ஸ்வ ரூபிணி?

Friday, April 8, 2011

Soundarya Lahari 100


ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸ கர நீராஜந விதி:
ஸுதா ஸூதேச் சந்த்ரோ பல ஜலலவைர் அர்க்ய ரசநா
ஸ்வகீயைர் அம்போபி: ஸலில நிதி ஸௌஹித்ய கரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துதிர் இயம்


Oh Goddess who is the source of all the words!
This poem which is made of words which You only made is like :
showing camphor lamp to the sun,
offering as ablution to the moon the water got from the moon stone and
offering water worship to the sea.


எல்லா சொற்களுக்கும் ஆதாரம் ஆன தேவியே!
உன்னால் படைக்கப்பட்ட சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட இப் பாடல்:
சூரியனுக்கே கற்பூர தீப ஆராதனை காட்டுவது போலவும்,
நிலாமணிக் கல்லின் நீரைக் கொண்டு நிலவிற்கே அர்க்கியம் கொடுப்பது போலவும்,
சமுத்திரத்திற்கே ஜல தர்ப்பணம் செய்வது போலவும் உள்ளது.



Soundarya Lahari 99

ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதி ஹரி ஸபத்நோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் சிதிலயதி ரம்யேண வபுஷா
சிரம் ஜீவந்நேவ க்ஷபித பசு பாச வ்யதிகர:
பராநந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்பஜநவாந்


Oh Mother! 
Those who worship You are so learned and rich that even Brahma and Vishnu are jealous of them. They are so handsome that even Rathi - Cupid's wife yearns for them. Those people are unbound from the ties of this birth, enjoys ecstatic happiness and lives for ever. 


என் தாயே!
உன்னை வணங்குபவர்கள் நன்கு கற்றுணர்ந்து, செல்வந்தர்களாக இருப்பதால் பிரம்மாவும், விஷ்ணுவும் கூட அவர்களிடம் பொறாமைப்படுகிறார்கள். மன்மதனின் மனைவி ரதியே ஏங்கும் அளவிற்கு அவர்கள் அழகுடன் திகழ்கிறார்கள். அம்மக்கள் பிறப்புத் தளையில் இருந்து விடுபட்டு, பரமானந்தத்தை அடைந்து, எப்பொழுதும் வாழ்கிறார்கள். 

Soundarya Lahari 98

கதா காலே மாத: கதய கலிதாலக்தக ரஸம்
பிபேயம் வித்யார்த்தீ தவ சரண நிர்நேஜந ஜலம்
ப்ரக்ருத்யா மூகாநாம் அபி ச கவிதா காரணதயா
யதா தத்தே வாணீ முக கமல தாம்பூல ரஸதாம்


Oh my Mother!
When shall I - who begs for knowledge be able to drink the nectar like water flowing from Your feet mixed with the reddish lac applied there? When shall that water attain the goodness of saliva mixed with thaamboola from the mouth of the Goddess of Learning, which made one born as mute into the King of poets?


என் தாயே!
ஞானத்தை யாசிக்கும் நான் எப்பொழுது உன் கால்களில் இருந்து அதன் செங்காவிப் பூச்சோடு கலந்து ஓடும் அமிர்தம் போன்ற நீரைப் பருக முடியும்? எப்பொழுது அந்த நீர் ஊமையாக பிறந்த ஒருவனையும் கவிகளின் தலைவனாக ஆக்கும் கல்விக் கடவுள் வாய் எச்சிலுடன் கலந்த தாம்பூலத்தின் மேன்மையை அடையும்?

Soundarya Lahari 97

கிராம் ஆஹூர் தேவீம் த்ருஹிண க்ருஹிணீம் ஆகமவிதோ
ஹரே: பத்நீம் பத்மாம் ஹர ஸஹசரீம் அத்ரி தநயாம்
துரீயா காபி த்வம் துரதிகம நிஸ்ஸீம மஹிமா
மஹா மாயா விச்வம் ப்ரமயஸி பரப்ரஹ்ம மஹிஷி


Oh Parashakthi who is with the Parabrahma!
Those who have learned the Vedas call You as Brahma's wife Saraswathi or as Vishnu's wife Lakshmi or Shiva's wife Parvathi. You have the fourth name - Maha Maya who gives life to the world and have attained all that is to be attained. 


பரப்ரம்மாவுடன் இருக்கும் பராசக்தியே!
வேதத்தைக் கற்றவர்கள் உன்னை பிரமனின் மனைவி சரஸ்வதி என்றோ, விஷ்ணுவின் மனைவி லக்ஷ்மி என்றோ, சிவனின் மனைவி பார்வதி என்றோ அழைக்கிறார்கள். ஆனால் நான்காவதாக உனது பெயர் மகா மாயா. நீயே உலகிற்கே உயிரை அளிக்கின்றாய். அடைய வேண்டிய எல்லாவற்றையும் அடைந்து விட்டாய். 

Soundarya Lahari 96

கலத்ரம் வைதாத்ரம் கதி கதி பஜந்தே ந கவய:
ச்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தநை:
மஹா தேவம் ஹித்வா தவ ஸதி ஸதீநாம் அசரமே 
குசாப்யாம் ஆஸங்க: குரவக தரோர் அபி அஸுலப:

Many poets reach the Goddess of learning - Saraswathi the wife of the creator Brahma by composing soulful poems. Many who search and attain wealth are called as the Lord of the Goddess of wealth. But You - the first among the chaste women, except Lord Shiva - Your consort, Your breasts have not even touched the holy Kuravaka tree. (Maidens used to embrace this Kurvaka tree in those days).


படைக்கும் கடவுளான பிரமனின் மனைவியான சரஸ்வதியை பல புலவர்கள் மனம் உருக்கும் கவிதைகள் படைத்து நெருங்குகிறார்கள். செல்வத்தை தேடி அடையும் பலர் லக்ஷ்மிக்கே அதிபதி என்று அழைக்கப்படுகிறார்கள். ஆனால் பவித்ரமான பெண்களில் முதன்மையான உன்னை, உனது தலைவனான சிவனைத் தவிர உனது ஸ்தனங்கள் புனிதமான குருவக மரத்தைக் கூட தீண்டியது இல்லை. (அக் காலத்தில் கன்னிப் பெண்கள் குருவக மரத்தை ஆலிங்கனம் செய்வார்கள்.)

Thursday, April 7, 2011

Soundarya Lahari 95

புராராதேர் அந்த: புரம் அஸி ததஸ் த்வச் சரணயோ:
ஸபர்யா மர்யாதா தரல கரணாநாம் அஸுலபா
ததா ஹ்யேதே நீதா: சதமக முகா: ஸித்திம் அதுலாம்
தவ த்வாரோபாந்த ஸ்திதிபி: அணிமாத்யாபி: அமரா:



You are the leading light of the home of Lord Shiva who destroyed the three cities. So coming near You and worshiping at Your feet are not for those with weak mind and have no control of their senses. Perhaps, that is why Indra and other Gods stay outside Your gates and attain Your sweet self by the practice of Siddhis like Anima. 


முப்புரிகளையும் எரித்த சிவனின் இல்லத்தில் நீயே குல விளக்காகத் திகழ்கின்றாய். அதனால் தான் மன முதிர்ச்சி இல்லாதவர்களுக்கும், சுய கட்டுப்பாடு இல்லாதவர்களுக்கும் உன் அருகில் வந்து உன் திருவடிகளை வணங்க இயலாது. அதனால் தானோ என்னவோ இந்திரன் மற்றும் பிற கடவுளர்கள், உன் வீடு வாசலுக்கு வெளியே இருந்து கொண்டு, அணிமா போன்ற சித்திகளால் இனிமையான உன் சாயுஜ்யத்தை அடைகிறார்கள். 

Soundarya Lahari 94

கலங்க: கஸ்தூரி ரஜநி கர பிம்பம் ஜலமயம்
கலாபி: கர்பூரைர் மரகத கரண்டம் நிபிடிதம்
அதஸ் த்வத் போகேந ப்ரதி திநம் இதம் ரிக்த குஹரம்
விதிர் பூயோ பூயோ நிபிடதி நூநம் தவ க்ருதே



The moon that we know is Your jewel box filled with water of incense. The blackness we see in the moon is the musk put for Your use in this box. The crescents we see of the moon is Your emerald canister full of divine camphor. For sure, Brahma the creator refills these daily after Your use so that they are always full.

நாங்கள் அறிந்த நிலவு, வாசனைத் திரவியங்களால் நிரப்பப்பட்ட உனது ஆபரணப் பெட்டியே. நிலவில் நாங்கள் காணும் கரும் புள்ளிகள், இப் பெட்டியில் உன் உபயோகத்திற்காக வைக்கப்பட்டுள்ள புனுகாகும். நிலவில் நாங்கள் காணும் பிறைகள், தெய்வீகக் கற்பூரம் நிரம்பிய உனது மரகதப் பேழை. படைக்கும் கடவுளான பிரம்மா தினமும் உன் உபயோகத்திற்குப் பின் நிரம்பி இருப்பதற்காக இதனை மீண்டும் நிரப்புகிறான் என்பது நிச்சயம்.

Soundarya Lahari 93

அராலா கேசேஷு ப்ரக்ருதி ஸரலா மந்த ஹஸிதே
சிரீஷாபா சித்தே த்ருஷத் உபல சோபா குச தடே
ப்ருசம் தந்வீ மத்யே ப்ரிதுர் உரஸி ஜாரோஹ விஷயே
ஜகத் த்ராதும் சம்போர் ஜயதி கருணா காசித் அருணா 




Her mercy which is beyond the mind and words of Lord Shiva, is for ever victorious in the form of Aruna in order to save this world. That spirit of mercy is in the form of:
curves in Her hair,
natural sweetness in Her smile,
pretty tenderness of a flower in Her mind,
firmness of a ruby stone in Her breasts,
thin seductiveness in Her hips and
voluptuousness in Her breasts and back.


சிவனின் வார்த்தைகளுக்கும், மனதையும் தாண்டிய அவளின் கருணை ஆனது, அருணனைப் போல இவ்வுலகைக் காக்க எப்பொழுதும் வெற்றி பெறக் கூடியதாகவும், உள்ளது. அக் கருணையின் வடிவமானது அவளின்
சுருண்ட கூந்தலிலும்,
இயற்கையான இனிமையுடன் கூடிய புன்னகையிலும்,
அழகிய, மென்மையான மலர் போன்ற மனத்திலும்,
மாணிக்கக் கல்லின் உறுதியுடன் கூடிய மார்பிலும்,
மெல்லிய கவர்ச்சியுடன் கூடிய இடுப்பிலும்,
செழுமையான மார்பிலும், பிருஷ்டத்திலும் உள்ளன.

Wednesday, April 6, 2011

Soundarya Lahari 92

கதாஸ் தே மஞ்சத்வம் த்ருஹிண ஹரி ருத்ரேச்வர ப்ருத:
சிவ: ஸ்வச்சச் சாயா  கடித கபட ப்ரச்சத பட:
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதி பலந ராகாருணதயா
சரீரீ ச்ருங்காரோ ரஸ இவ த்ருசாம் தோக்தி குதுகம்


Brahma, Vishnu, Rudra and Easwara who are the Gods of the world, become the four legs of Your cot so that they are able to serve You always. Sadashiva who is white in colour becomes the bed spread on which You sleep and appears red because he reflects Your colour. To Your eyes which are the personification of the feelings of love, He gives lot of happiness.

உலகுக்கே கடுவுளர்களான பிரம்மா, விஷ்ணு, ருத்ரா மற்றும் ஈஸ்வரா உனக்கு எப்பொழுதும் சேவை செய்ய வசதியாக உனது கட்டிலின் நான்கு கால்களாக ஆனார்கள். வெண் நிறத்தில் உள்ள சதாசிவன் நீ படுத்துறங்கும் படுக்கை விரிப்பாக ஆனான். உனது நிறத்தை அவன் பிரதிபலிப்பதால் அவனும் சிவந்து தோன்ற ஆரம்பித்தான். கருணையே வடிவான உனது கண்களுக்கு அவன் மிகுந்த ஆனந்தத்தை அளிக்கின்றான். 

Soundarya Lahari 91

பத ந்யாஸ க்ரீடா பரிசயம் இவாரப்து மநஸ:
ஸ்கலந்தஸ் தே கேலம் பவந கல ஹம்ஸா ந ஜஹதி
அதஸ் தேஷாம் சிக்ஷாம் ஸுபக மணி மஞ்ஜீர ரணித
ச்சலாத் ஆசக்ஷாணம் சரண கமலம் சாரு சரிதே



The swans in Your house who have a holy life follow You with out any break as if to learn Your gait which is like a celestial play. So Your lotus like feet taking recourse to the musical sound produced by the gems in Your anklets, appears to teach those swans what they wanted.

தெய்வீக வாழ்வு வாழும் உன் இல்லத்தில் உள்ள அன்னப் பறவைகள், தேவ லோகத்து நாடகம் போலத் திகழும் உனது நடையைக் கற்கவோ என்னவோ உன்னை இடைவெளி இல்லாமல் பின் தொடர்கின்றன. உன் கொலுசில் உள்ள மணிகளால் எழும் நாதத்தை உபயோகித்து உன் தாமரை போன்ற பாதங்கள் அப் பறவைகளுக்கு அவை விரும்பியவற்றைச் கற்றுக் கொடுக்கின்றது போல உள்ளது. 

Soundarya Lahari 90

ததாநே தீநேப்ய: ச்ரியம் அநிசம் ஆசா நு ஸத்ருசீம்
அமந்தம் ஸௌந்தர்ய ப்ரகர மகரந்தம் விகிரதி
தவாஸ்மிந் மந்தார ஸ்தபக ஸூபகே யாது சரணே
நிமஜ்ஜந் மஜ்ஜீவ: கரணசரண: ஷட் சரணதாம்


My soul with the six organs is similar to the six legged honey bees which dip at Your holy feet which are as pretty as the celestial tree's flower bunch. They always grant wealth to the poor whenever they wish and showers floral honey without any break.

என் ஆன்மாவில் உள்ள ஆறு அங்கங்களும், தெய்வீக மரத்தின் மலர்க் கொத்தைப் போன்ற அழகுடன் திகழும் உனது பவித்திர பாதங்களில் முங்கும் ஆறு கால்களை உடைய தேனீக்களைப் போன்று உள்ளன. அப் பாதங்கள் ஏழைகள் வேண்டும் போதெல்லாம் செல்வத்தை வழங்கி, இடை விடாமல் மகரந்த தேனைச் சொரிகின்றன.

Soundarya Lahari 89

நகைர் நாக ஸ்த்ரீணாம் கர கமல ஸங்கோச சசிபி:
தரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ
பலாநி ஸ்வ: ஸ்தேப்ய: கிஸலய கராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ச்ரியம் அநி சம் அஹ்னாய தததௌ


 Oh mother who killed Chanda!

Your moon like nails which make the celestial maidens fold their hands in shame for ever tease Your two feet which always give the poor people wealth and happiness quickly unlike the divine trees in heaven - that give all they wish to Gods by their leaf bud like hands. 


சண்டா என்ற அசுரனைக் கொன்ற தாயே!
தேவ கன்னிகைகளை வெட்கத்தில் தங்களின் கைகளை மடக்க வைக்கும் சந்திரனை ஒத்த உன் நகங்கள் எப்பொழுதும் உன் இரு பாதங்களையும் கேலி செய்கின்றன. சொர்க்க லோகத்தில் உள்ள, கடுவுளர்களுக்கு விரும்பியதை எல்லாம் தங்களின் கரங்களைப் போன்ற இலை மொட்டுகளின் மூலம் அளிக்கும் தெய்வீக மரங்களைப் போல அல்லாமல் அப் பாதங்கள் ஏழை மக்களுக்கு செல்வமும், வளமும் உடனே வழங்குகின்றன. 

Tuesday, April 5, 2011

Soundarya Lahari 88

பதம் தே கீரத்தீநாம் பிரபதம் அபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடிந கமடீ கர்பரதுலாம்
கதம் வா பாஹூப்யாம் உபயமந காலே புரபிதா
யதா தாய ந்யஸ்தம் த்ருஷதி தய மாநேந மநஸா


Oh Goddess Devi!
I don't understand how the poets compared the fore side of Your merciful feet - which are the source of fame to Your devotees and are not a source of danger to them to the hard shell of a tortoise. How did He, who destroyed the three cities take them in his hand during Your marriage and placed them on a hard rock? (During the marriage ritual, the groom places the bride's feet over a slab of hard rock wishing their relationship to be as strong as the rock and sights the divine star Arundhathi).


என் தேவியே!
உன் பக்தர்களுக்கு புகழைத் தருமே அன்றி அழிவைத் தராத உன் கருணை மிகு பாதத்தின் மேல் பகுதியை, ஆமையின் கடின ஓட்டோடு ஒப்பிட எப்படித் தான் புலவர்களால் முடிந்ததோ என நான் அறியேன். முப்புரிகளையும் எரித்த உன் தலைவனால் எவ்வாறு தான் உன் பாதங்களைத் தன் கரங்களில் ஏந்தி அம்மிக் கல்லில் வைக்க முடிந்ததோ? (கல்யாணச் சடங்கில் மாப்பிள்ளை, மணப்பெண்ணின் பாதங்களை அம்மிக் கல்லில் வைத்து, தங்களின் உறவும் அதைப் போன்று உறுதியாக இருக்க வேண்டும் என வேண்டி அருந்ததி என்னும் நட்சத்திரத்தைப் பார்ப்பதாக ஐதீகம்.)

Soundarya Lahari 87

ஹிமாநீ ஹந்தவ்யம் ஹிம கிரி நிவாஸைக சதுரௌ
நிசாயாம் நித்ராணாம் நிசி சரம பாகே ச விசதௌ
வரம் லக்ஷ்மீ பாத்ரம் ச்ரியம் அதி  ஸ்ருஜந்தௌ ஸமயிநாம்
ஸரோஜம் த்வத் பாதௌ ஜநநி ஜயதச் சித்ரம் இஹ கிம்


Oh my Mother!
The lotus flower rots in snow, but Your feet are aces in being in snow.
The lotus flower sleeps at night, but Your feet are wakeful night after night.
The lotus makes the Goddess of wealth Lakshmi to live in it, but Your feet gives Lakshmi (wealth) to it's devotees.
So Your two feet always wins over the lotus. What is so surprising in this?


என் தாயே!
தாமரை மலர் பனியில் வாடுகின்றது, ஆனால் உன் பாதங்களோ பனியிலும் மலர்ந்து இருக்கின்றன.
தாமரை மலர் இரவில் உறங்குகின்றது. ஆனால் உன் பாதங்களோ ஒவ்வொரு இரவும் விழித்து இருக்கின்றது.
தாமரை மலர் செல்வத்தின் அதிபதி லக்ஷ்மியை தன்னில் வசிக்கச் செய்கின்றது. ஆனால் உன் பாதங்களோ அதன் பக்தர்களுக்கு லக்ஷ்மியைத் (செல்வத்தைத்) தருகின்றது.
ஆகையால் உன் இரு பாதங்கள் எப்பொழுதும் தாமரையை வெற்றி கொள்கின்றன. இதில் என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

Soundarya Lahari 86

ம்ருஷா க்ருத்வா கோத்ர ஸ்கலநம் அத வைலக்ஷ்ய நமிதம்
லலாடே பர்தாரம் சரணகமலே தாடயதி தே
சிராதந்த: சல்யம் தஹநக்ருதம் உந்மூலிதவதா
துலா கோடி க்வாணை: கிலிகிலிதம் ஈசாந ரிபுணா


In a playful mood after teasing You and Your family and at a loss to subdue Your love tiff when Your consort does prostrations, Your lotus like feet touches His forehead. The God of Love - the enemy of Your Lord and who was burnt by the fire from Your Lord's third eye was keeping enmity over Him like an ever hurting arrow makes sounds like 'kili, kili' from Your belled anklets on the legs.


விளையாட்டாக உன்னையும், உன் குடும்பத்தையும் கேலி செய்த பிறகு, வேறு வழி இல்லாமல் உன் காதல் ஊடலைத் தணிக்க வேண்டி உன்னை நமஸ்கரிக்கும் போது, உனது தாமரையை ஒத்த பாதங்கள் அவரின் முன் நெற்றியில் படுகின்றது. காதல் கடவுளும், உன் தலைவனின் விரோதியும் ஆன மன்மதன், உன் தலைவனின் மூன்றாவது கண்ணின் அக்னியால் எரிக்கப் பட்டதால் அவர் மீது எப்பொழுதும் தைக்கும் அம்பைப் போன்று வன்மம் கொண்டிருந்தான். அவன் கிலி கிலி என்ற ஓசையை உன் கால் கொலுசில் உள்ள மணிகளைப் போன்று எழுப்புகின்றான். 

Soundarya Lahari 85

நமோ வாகம் ப்ரூமோ நயந ரமணீயாய பதயோ:
தவாஸ்மை த்வந்த்வாய  ஸ்புட ருசி ரஸாலக்த கவதே
அஸூயதி அத்யந்தம் யதபி ஹநநாய ஸ்ப்ருஹயதே
பசூநாமீசாந: ப்ரமதவந கங்கேலிதரவே


We tell our salutations to Your two shining feet which are the most beautiful to the eyes and painted by the juice of red cotton. We also know well  that Your consort who is the king of all the animals is jealous of the asoka trees in the garden which is yearning for a kick by Your feet.


செந்நிறப் பருத்திச் சாறால் அலங்கரிக்கப் பட்டதும், கண்களுக்கு அழகாகவும் தோன்றும் ஒளி வீசும் உனது இரு பாதங்களுக்கும் எங்களின் வணக்கங்களை தெரிவிக்கின்றோம். விலங்குகளுக்கெல்லாம் அதிபதி ஆன உன் தலைவன், நந்தவனத்தில் உள்ள அசோக மரங்கள் எல்லாம் உன் காலால் உதை வாங்க ஏங்குவது குறித்து பொறாமைப் படுவதும் எங்கள் எல்லோருக்கும் நன்கு தெரியும்.