Tuesday, March 29, 2011

Soundarya Lahari 84

ச்ருதீநாம் மூர்த்தாநோ தததி தவ யௌ சேகரதயா
மமாப்யேதௌ மாத: சிரஸி தயயா தேஹி சரணௌ
யயோ: பாத்யம் பாத: பசுபதி ஜடா ஜூட தடிநீ
யயோ: லாக்ஷா லக்ஷ்மீ: அருண ஹரி சூடாமணி ருசி:Oh my Mother!
Be pleased to place Your two holy feet:
which are the ornaments of the head of the Upanishads, 
the water which washes Your feet are the river Ganges flowing from Lord Shiva's head
and the lac paint adorning it are the red luster from the crown of Lord Vishnu
on my head with mercy.

என் தாயே!
உனது இரு புனித பாதங்கள் 
உபநிஷத்கள் என்னும் தலைக்கு அணிகலன்களாகவும்,
உன் காலை அலம்பும் நீர், சிவனின் சிரசில் இருந்து வழிந்தோடும் கங்கை நதியாகவும்,
அதை அலங்கரிக்கும் செந்நிறம் விஷ்ணுவின் கிரீடத்தில் உள்ள சிவப்பு கிரணங்களாகவும் உள்ளன.
தயை கூர்ந்து இப்பாதங்களை என் தலையின் மேல் கருணையுடன் வைப்பாயாக. 

Soundarya Lahari 83

பரா ஜேதும் ருத்ரம் த்விகுண சர கர்பௌ கிரிஸுதே
நிஷங்கௌ ஜங்கே தே விஷமவிசிகோ பாடமக்ருத
யதக்ரே த்ருச்யந்தே தச சர பலா: பாதயுகலீ
நகாக்ரச்சத்மாந: ஸுர மகுட சாணைக நிசிதா:Oh daughter of the mountain!
To win over the five arrowed Cupid, Your Lord Rudra had made Your legs into an arrow case with ten arrows. In the end of the case are Your two feet studded with ten of Your nails which are like the ten steel tipped arrows sharpened on the Deva's crowns.


மலைகளின் புத்திரியே!
ஐந்து அம்புகளைக் கொண்ட காமனை வெல்வதற்காக, உன் தலைவன் சிவன் உனது கால்களைப் பத்து அம்புகளைக் கொண்ட அம்புராத்தூணியாக ஆக்கியுள்ளான். இத்தூணியின் இறுதியில் உனது இரு பாதங்களும், அவற்றுக்கு அணி சேர்ப்பதாக உனது பத்து நகங்களும் உள்ளன. அந் நகங்கள், தேவர்களின் கிரீடங்களில் கூர் செய்யப்பட்ட பத்து இரும்பு முனைகளைக் கொண்ட அம்புகளைப் போல் உள்ளன. 

Monday, March 28, 2011

Soundarya Lahari 82

கரீந்த்ராணாம் சுண்டாந் கநக கதலீ காண்டபடலீம்
உபாப்யாம் ஊருப்யாம் உபயமபி நிர்ஜித்ய பவதீ
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதிகடிநாப்யாம் கிரிஸுதே
விதிக்ஞே ஜாநுப்யாம் விபுத கரி கும்ப த்வயமஸிOh daughter of the mountain and one who knows the rules of the Vedas!
Using Your two thighs, You have achieved victory over the trunks of the elephants and the golden stems of a group of banana plants. By the holy round knees of Your's which have become hard due to repeated prostrations to Your Lord, You achieved victory over the frontal tusks of the divine elephant Iravatha.


மலைகளின் புத்திரியே, வேதத்தின் பொருள் அறிந்தவளே!
உனது இரு தொடைகளைக் கொண்டு நீ யானைகளின் துதிக்கைகளையும் வாழை மரத் தோப்பின் பொன்னிற தண்டுகளையும் (ஒப்பு நோக்குவதில்) வென்று விட்டாய். உனது தலைவனை நீ அடிக்கடி நமஸ்கரிப்பதால், இறுகிப் போயுள்ள உனது வட்ட வடிவிலான, புனிதமான இரு கால் மூட்டுகளையும் கொண்டு தெய்வீக யானையான ஐராவதத்தின் இரு தந்தங்களையும் நீ (ஒப்பு நோக்குவதில்) வென்று விட்டாய். 

Soundarya Lahari 81

குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதர பதி: பார்வதி நிஜாத்
நிதம்பாத் ஆச்சித்ய த்வயி ஹரண ரூபேண நிததே
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரயமசேஷாம் வஸுமதீம்
நிதம்ப ப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச


Oh daughter of the mountain!
Himavaan the king of the mountains perhaps readily gave as dowry to You the density and breadth from his bottom, so that Your behinds are broad and dense and those two can therefore hide all of the world and can make the world light.


மலைகளின் புத்திரியே!
பர்வத ராஜனான ஹிமவான் உனது சீதனமாக தனது விஸ்தாரமான அடிப் பகுதிகளை விரும்பிக் கொடுத்தானோ? அதனால் தான் உனது இரு ப்ருஷ்டங்களும் படர்ந்தும் விரிந்தும் இருந்து எல்லா உலகையும் தன்னுள் மறைத்து இவ்வுலகை எடை குறைவானதாக ஆக்கியதோ?

Soundarya Lahari 80

குசௌ ஸத்ய: ஸ்வித்யத் தட கடித கூர்ப்பாஸபிதுரௌ
கஷந்தௌ தோர்மூலே கநக கலசாபௌ கலயதா
தவ த்ராதும் பங்காத் அலமிதி வலக்நம் தநுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீவல்லிபிரிவ Oh my Goddess!
Placed just below Your shoulders by the God of Love - Cupid and tearing Your blouse which is attached to Your body by Your sweat when You think about the greatness of Your Lord, Your breasts resembling golden pots appear to be tied by him securely three times by the three creeper like folds on your belly.

என் தேவியே!
உன் தோள்களுக்கு சற்று கீழே, காதல் கடவுள் காமனால் வைக்கப்பட்டதும், உனது தலைவனின் மகிமையைப் பற்றி நீ எண்ணும் போதெல்லாம் வியர்வையால் உன் உடலோடு ஒட்டி இருக்கும் உன் மேலாடையைக் கிழித்துக் கொண்டு இருக்கும் தங்கப் பானைகளை ஒத்திருக்கும் உனது ஸ்தனங்களை அவனால் மும்முறை இறுக்கிக் கட்டியதைப் போல உன் வயிற்றில் உள்ள கொடி போன்ற மூன்று மடிப்புகள் உள்ளன.