Monday, February 28, 2011

Soundarya Lahari 79

நிஸர்க க்ஷீணஸ்ய ஸ்தந தட பரேண க்லமஜுஷோ
நமந்மூர்த்தே: நாரீ திலக  சநகை: த்ருட்யத இவ
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடிநீ தீர தருணா
ஸமாவஸ்தா ஸ்தேம்நோ பவது குசலம் சைலதநயே



Oh daughter of the mountain who is the greatest among the women!
Long live Your pretty hips which look fragile, are by nature tiny, strained by Your heavy breasts and hence slightly bent and look like the tree standing in the eroded banks of a rushing river.

மலையின் பெண்ணே! பெண்களுள் சிறந்தவளே!
மெல்லியதான, இயற்கையாகவே குறுகிய, உனது கனத்த மார்புகளால் சற்றே வளைந்த, காட்டாறின் அரிக்கப்பட்ட கரைகளில் நிற்கும் மரத்தைப் போல உள்ள உனது அழகிய இடை வாழிய வாழியவே.



Soundarya Lahari 78

ஸ்திரோ கங்காவர்த: ஸ்தந முகுல ரோமா வலிலதா
கலாவாலம் குண்டம் குஸும சர தேஜோ ஹூத புஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரி ஸுதே
பில த்வாரம் சித்தே: கிரிச நயநாநாம் விஜயதே


Oh daughter of the mountain!
I am not able to make up my mind if Your navel is:
a whirlpool in river Ganga which appears to be stable,
or the root of the climber which is Your hair line stream having two breasts of Yours as the buds,
or the Homa fire where the fire is the light from cupid,
or the playhouse of Rathi, God of Love - Manmadha's wife,
or the opening to the cave in which Shiva's tapas gets fulfilled.

மலைகளின் பெண்ணே!
உனது நாபியானது :
அமைதியாகத் தோன்றும் கங்கை நதியின் சுழலோ,
இரு மார்புகளையும் மொட்டாகக் கொண்ட, நாபியில் இருந்து எழும் ரோம ரேகை என்னும் கொடியின் வேரோ,
மன்மத பாணத்தால் ஏற்றப்பட்ட நெருப்பைக் கொண்ட ஹோம அக்னியோ,
காதல் கடவுள் மன்மதனின் மனைவியாகிய ரதி விளையாடும் இடமோ
எது என நான் அறியேன்.

Soundarya Lahari 77

யதேதத் காலிந்தீ தநு தர தர ங்கா க்ருதி சிவே
க்ருசே மத்யே கிஞ்சிஜ் ஜநநி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்தாத் அந்யோந்யம்  குசகலசயோ: அந்தர கதம்
தநூ பூதம் வ்யோம  ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம்



Oh Mother of the Universe who is Shiva and Shakthi!
In the narrow part of the middle of Your body, the learned men appear to see a line, which is in the shape of a small wave of the Yamuna river, which shines and glitters, appears like the sky, made very thin due to the presence of Your dense colliding breasts and entering Your cave like navel.

சிவனும், சக்தியும் ஆன ஜகத்தின் தாயே!
உனது உடலின் மத்தியாக உள்ள ஒல்லியான பகுதியில், கற்று அறிந்தவர்கள் ஒரு மடிப்பு போல ஒன்றைக் காண்கிறார்கள். இவ்வமைப்பு யமுனை நதியின் சிறிய அலை போலும், ஒளி வீசியும், ஆகாயத்தைப் போலும், உனது அடர்ந்த மார்புகளுடன் ஒப்பு நோக்கும் போது மெல்லியதாகவும், குகையைப் போல உள்ள உனது நாபியுள் நுழைவதைப் போலும் உள்ளது.

Soundarya Lahari 76

ஹர க்ரோத ஜ்வாலாவலிபி: அவலீடேந வபுஷா
கபீரே தே நாபீ ஸரஸி க்ருதஸங்கோ மநஸீஜ:
ஸமுத்தஸ்தௌ தஸ்மாத் அசல தநயே தூமலதிகா
ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவலிரிதி


Oh daughter of the king of mountain!
The God of Love Manmadha who is the king of the mind, when being lit by the flame of Shiva's anger immersed himself in Your deep navel which is like a deep pond. From Your navel, a tendril like smoke emanated and Oh Mother! people think think this is the line of hair that climbs from Your navel upwards.

மலைகளின் அரசனானவனின் புத்திரியே!
எண்ணங்களுக்கு அரசனான காமக் கடவுள் மன்மதன் சிவனின் கோபம் என்னும் நெருப்பினால் எரிக்கப்பட்ட பொழுது தன்னை உனது நாபியாகிய ஆழமான குளத்தில் அமிழ்த்திக் கொண்டான், உனது நாபியில் இருந்து மெல்லிய கொடி போல  எழும் புகையை தாயே! மக்கள் உனது நாபியில் இருந்து மேலே எழும் ரோம ரேகையாக எண்ணுகிறார்கள். 

Soundarya Lahari 75

தவ ஸ்தந்யம் மந்யே தரணி தர கன்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிட சிசு: ஆஸ்வாத்ய தவ யத்
கவீநாம் ப்ரௌடாநா மஜநி கமநீய: கவயிதா


Oh daughter of the king of mountains!
In my mind, I feel that the milk that flows from Your breast, is really the Goddess of learning - Saraswathi, in the form of a tidal wave of nectar. This is because, the milk given by You - one full of mercy made the Dravida child Thirugnanasambanda a king among those great poets and his works stole one's mind. 


பர்வத ராஜனின் புத்திரியே!
உனது மார்பில் இருந்து வடியும் பாலானது, உண்மையில் கல்விக் கடவுள் சரஸ்வதி அமுதத்தின் அலை கடலாக உருவெடுத்தது போல உள்ளதாக என் மனதில் நான் எண்ணுகிறேன். ஏனென்றால் கருணை மிகுந்த உன்னால் பாலூட்டப்பட்ட திராவிடக் குழந்தையான திருஞானசம்பந்தர், சிறந்த புலவர்களின் மத்தியில் தலைவனாகத் திகழ்ந்து, தனது காவியங்களால் பிறரின் மனதை திருடினார்.

Soundarya Lahari 74

வஹத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ  கும்ப ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தா மணிபி: அமலாம் ஹார லதிகாம்
குசாபோகோ பிம்பாதர ருசிபி: அந்த: சபலிதாம்
ப்ரதாப வ்யாமிச்ராம் புரதமயிது: கீர்த்திமிவ தே


Oh my Mother!
In between Your holy breasts, You wear a glittering chain made of pearls which were recovered from inside the head of Gajasura. They reflect the redness of Your lips resembling the bimba fruit and are colored red inside. You wear the chain with fame as if You were wearing the fame of our Lord Shiva who destroyed the three cities.

என் தாயே!
உனது மார்புகளின் இடையில், கஜாசுரனின் தலையின் உள்ளிருந்து மீட்கப்பட்ட முத்துக்களால் ஆன ஒளி வீசும் ஒரு மாலையை அணிந்துள்ளாய். அவை கோவைப் பழம் போலச் சிவந்திருக்கும் உனது இதழ்களின் செம்மையைப் பிரதிபலித்து உள்ளே செம்மையாக இருக்கின்றன. முப்புரிகளையும் எரித்த சிவனின் கீர்த்தியை அணிந்துள்ளதைப் போன்று நீ இந்த மாலையை பெருமையுடன் அணிந்துள்ளாய்.

Soundarya Lahari 73

அமூ தே வக்ஷோஜௌ அம்ருதரஸ மாணிக்ய குதுபௌ
ந ஸந்தேஹ ஸ்பந்தோ நகபதி பதாகே மநஸி ந:
பிபந்தௌ தௌ யஸ்மாத் அவிதித வதூஸங்க ரஸிகௌ
குமாரா வத்யாபி த்விரதவதந க்ரௌஞ்ச தலநௌ



Oh victory flag of the king of mountains!
We don't have any doubt in our mind that Your two divine breasts are the nectar filled pot made of rubies. This is because, the elephant faced Ganesha and Skanda - the one who killed Crownchasura even today does not know the pleasure of women and remains as a young child.

பர்வத ராஜனுக்கு வெற்றிக் கொடியாகத் திகழ்பவளே!
உனது இரு தெய்வீக மார்புகளும் அமுதம் நிரம்பிய மாணிக்கக் கலசமோ என்பதில் எங்களுக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால், ஆனை முகன் பிள்ளையாரும், கிரௌஞ்சாசுரனைக் கொன்ற முருகனும் உன் பாலைக் குடித்தால், பெண் சுகம் அறியாமல் பாலகர்களாகவே இருக்கிறார்கள்.

Soundarya Lahari 72

ஸமம் தேவி ஸ்கந்த த்விப வதந பீதம் ஸ்தநயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுத முகம்
யதா லோக்ய ஆசங்கா குலித ஹ்ருதயோ ஹாஸ ஜநக:
ஸ்வ கும்பௌ ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேந ஜடிதி



Our Goddess Devi!
Let the two cool breasts of Yours which have nipples that always give out milk and are simultaneously drunk deeply by Skanda and elephant faced Ganesha destroy all of our sorrows. Seeing them Ganesha got confused  and He touched His two breasts to check if they were there and this made You and Shiva laugh.

எங்கள் கடவுளான தேவியே!
எப்பொழுதும் பாலைச் சொரியும் முனைகளைக் கொண்டதும், முருகன் மற்றும் ஆனைமுகம் கொண்ட கணபதியால் ஒரே நேரத்தில் அவை அருந்தப்படுவதும் ஆன உனது இரு மார்புகள் எங்களின் எல்லாப் பிணிகளையும் போக்கட்டும். உனது இரு மார்புகளையும் பார்த்தால் சந்தேகத்தில் தனது இரு மார்புகளும் இருக்கின்றதா என தொட்டுப் பார்த்த விநாயகரைக் கண்டு நீயும், சிவனும் சிரித்தீர்கள். 

Soundarya Lahari 71

நகாநாம் உத்யோதை: நவ நலிந ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதம் உமே
கயாசித் வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல் லக்ஷ்மீ சரண தல லாக்ஷா ரஸ சணம்



Oh Goddess Uma!
Only You can tell us how we can describe the luster of Your hands and the shining of Your nails which teases the redness of a freshly opened lotus. May be if the red lotus mixes with the liquid resin adorning Goddess Lakshmi's feet, some coincidence can be seen.

உமையே!
அப்பொழுது தான் மலர்ந்த தாமரை மலரை பரிகாசம் செய்வது போல உள்ள உனது ஒளி வீசும் கைகளையும், நகங்களையும் உன்னால் மட்டுமே விளக்க முடியும். ஒரு வேளை செந்தாமரை மலரோடு லக்ஷ்மி தேவியின் காலை அலங்கரிக்கும் திரவப் பூச்சையும் கலந்தால் ஓரளவு ஒப்பு நோக்க முடியும்.
  

Tuesday, February 22, 2011

Soundarya Lahari 70

ம்ருணாலீ ம்ருத்வீநாம் தவ புஜ லதாநாம் சதஸ்ருணாம்
சதுர்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜ பவ: ஸ்தௌதி வதனை:
நகேப்ய: ஸந்த்ரஸ்யந் ப்ரதம மதனாத் அந்தக ரிபோ:
சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸமம் அபய ஹஸ்தார்ப்பண தியா




Brahma - the God born out of lotus is afraid of the nails of Lord Shiva - the one who killed Andhakaasura because it had clipped one of His heads. Hence Brahma praises with His four faces Your four pretty tender hands resembling the lotus flower stalk so that He can ask for protection for His remaining four heads by the use of Your four merciful hands at the same time.


தாமரை மலரில் இருந்து தோன்றிய பிரம்மன், தனது ஒரு தலையை அது கொய்ததால் அந்தகாசுரனைக் கொன்ற சிவனின் நகத்தைக் கண்டு அஞ்சுகிறார். தனது எஞ்சியுள்ள நான்கு தலைகளையும் உனது நான்கு கருணை மிகு கரங்களால் ஒரே சமயத்தில் காப்பாற்ற முடியும் என்று தனது நான்கு முகங்களால் உனது நான்கு அழகான, மெல்லிய, தாமரை மலர் தண்டு போல இருக்கும் கைகளைப் போற்றுகிறார்.

Soundarya Lahari 69

கலே ரேகாஸ் திஸ்ரோ கதி கமக  கீதைக நிபுணே
விவாஹ வ்யா நத்த ப்ரகுண  குண ஸம்க்யா ப்ரதிபுவ:
விராஜந்தே நாநா வித மதுர ராகா கர புவாம்
த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி நியம ஸீமாந இவ தே


She who is an expert in Gathi, Gamaka and Geetha (3 major parts of Carnatic music)!
The three lucky lines on your neck reminds one of the number of well tied manifold thread tied during your marriage. It also reminds of the place in your beautiful neck, from where the three musical notes of Shadja, Madhyama and Gandhara originated.


கதி, கமகம் மற்றும் கீதத்தில் (கர்நாடக சங்கீதத்தின் 3 பகுதிகள்) பாண்டித்தியம் பெற்றவளே!
உன் கழுத்தில் உள்ள உள்ள மூன்று அதிர்ஷ்ட ரேகைகள் ஒருவனுக்கு உன் திருமணத்தின் போது உன் கழுத்தில் கட்டப்பட்ட மங்கள நாணை நினைவூட்டுகின்றன. சங்கீதத்தின் மூன்று ஸ்ருதிகளான ஷட்ஜ, மத்யம மற்றும் காந்தார ஸ்ருதிகள் உன் அழகிய கழுத்தில் தோன்றிய இடத்தை அவை நினைவுபடுத்துகின்றன. 

Soundarya Lahari 68

புஜாச்லேஷாந் நித்யம் புர தமயிது: கண்டக வதீ
தவ க்ரீவா தத்தே முக கமலநால ச்ரியம் இயம்
ஸ்வத: ச்வேதா காலாகுரு பஹுள ஜம்பால மலிநா
ம்ருணாலீ லாலித்யம் வஹதி யததோ ஹார லதிகா



By the frequent embrace of Your lord who destroyed the three cities, Your neck appears full of thorns always due to the hairs standing out. Your neck looks like the beautiful stalk  of Your lotus like face, with a chain of white pearls worn below, dulled by the incense and myrrh with the sandal paste applied and is like the tender stalk dirtied by the bed of mud.  


முப்புரிகளையும் எரித்த உனது தலைவன் அடிக்கடி உன்னைத் தழுவுவதால், உனது ரோமங்கள் சிலிர்த்து நிற்கின்றன. அதனால் உனது கழுத்து முற்களால் நிறைந்துள்ளதைப் போல உள்ளது. தாமரை போன்ற உனது முகத்திற்கு அழகிய தண்டாகவும், வெண் முத்துக்களால் ஆன ஒரு மாலையை அதன் கீழே அணிந்து, வாசனைத் திரவியங்களால் கருத்த, சந்தனம் தடவிய, மண் சேற்றில் அழுக்காகிய மெல்லிய தண்டைப் போல உனது கழுத்து உள்ளது.

Soundarya Lahari 67

கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிந கிரிணா வத்ஸலதயா
கிரீசேன உதஸ்தம் முஹூ: அதர பாநாகுல தயா
கர க்ராஹ்யம் சம்போ: முக முகுர வ்ருந்தம் கிரி ஸுதே
கதம் காரம் ப்ரூம: தவ சுபுகம் ஒளபம்ய ரஹிதம்



Oh daughter of the mountains!
How can we describe the beauty of Your chin, which was caressed with affection by the tip of his fingers by Your father Himavaan. Lord of the mountain - Shiva in a hurry to drink deeply from your lips often lifted Your chin which was so fit to be touched by His fingers, which is incomparable and which is like the handle of the mirror of Your face.

மலைகளின் புத்திரியே!
உனது தந்தை ஹிமவானின் விரல் நுனியால் வருடப்பட்ட உனது தாடையின் சௌந்தர்யத்தை நாங்கள் எவ்வாறு வர்ணிப்போம்? மலைகளின் அரசனான சிவன் உனது இதழ்களை ஆழமாகப் பருகும் அவசரத்தில் தன் விரல்களால் தீண்டத் தகுதியுள்ள, ஒப்பில்லாத, கண்ணாடி போன்ற உன் முகத்திற்குக் கைப்பிடி போன்று திகழும் உனது தாடையைப் பல முறை தொட்டுத் தூக்கியுள்ளான். 



Soundarya Lahari 66

விபஞ்ச்யா காயந்தீ விவிதம் அபதாநம் பசுபதே:
த்வயாரப்தே வக்தும் சலித சிரஸா ஸாதுவசநே
ததீயைர் மாதுர்யைர் அபலபித தந்த்ரீ  கல ரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேந நிப்ருதம்


Oh mother of all!
When you start nodding your head muttering sweetly 'Good! Good!' to Goddess Saraswathi who sings the glory of our lord Shiva to You, to the accompaniment of her Veena, Saraswathi mutes the sound of Veena by a covering cloth so that the strings which throw the sweetest music are not put to shame by your voice filled with sweetness.


அனைவருக்கும் தாயே!
சரஸ்வதி தேவி நமது தலைவர் சிவனைப் பற்றித் தனது வீணையோடு பாடும் போது நீ உனது தலையை ஆட்டி 'நல்லது! நல்லது!' என மதுரமான ஓசையை உதிர்க்கின்றாய். மதுரமான இசை மீட்டும் அதன் தந்திகள் உனது குரலின் இனிமையால் வெட்கி விடக் கூடாது என்பதற்காக, சரஸ்வதி அவ்வீணையை ஒரு துணியைக் கொண்டு மூடுகிறாள்.

Soundarya Lahari 65

ரணே ஜித்வா தைத்யாந் அப ஹ்ருத சிர ஸ்த்ரை: கவசிபி:
நிவ்ருத்தை: சண்டாம்ச த்ரிபுரஹர நிர்மால்ய  விமுகை:
விசாகேந்த்ரோபேந்த்ரை: சசி விசத கற்பூர சகலா
விலீயந்தே மாதஸ் தவ வதந தாம்பூல கபலா:


Oh mother of the world!
The Gods Subramanya, Vishnu and Indra after returning from the war with asuras rested, removed their head gear and the iron jackets and worshipped Lord Shiva. They are not interested in the left over of Shiva which belongs to Him and are only swallowing with great enthusiasm the half chewed betel from Your holy mouth which has the camphor as white as the moon.



ஜகத்தின் தாயே!
சுப்பிரமணியர், விஷ்ணு, இந்திரன் போன்ற கடுவுளர்கள் அசுரர்களுடனான போருக்குப் பின்னால் திரும்பி வந்து, ஓய்வெடுத்து, தங்களின் தலைக் கவசத்தையும், இரும்பு உடற் கவசத்தையும் துறந்து சிவனை வணங்குகிறார்கள். சிவனுக்கு உரிமையான, சிவனின் மீந்திய உணவில் அவர்களுக்கு விருப்பம் இல்லாமல், பெரும் உற்சாகத்தோடு உனது வாயினால் உமிழ்ந்த, நிலவைப் போல வெண்மையான சுண்ணாம்பைக் கொண்ட வெற்றிலையை உண்கிறார்கள். 

Soundarya Lahari 64

அவிச்ராந்தம் பத்யுர் குண கண கதா ம்ரேடந ஜபா
ஜபா புஷ்பச் சாயா தவ ஜநநி ஜிஹ்வா ஜயதி ஸா
யத் அக்ராஸீநாயா: ஸ்படிக த்ருஷத் அச்சச் சவி மயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமிதி மாணிக்ய வபுஷா


My mother!
Your tongue which is well known, without rest chants and repeats the many goods of Your Consort - Lord Shiva and is red like the hibiscus flower. Because of the colour of Your tongue, Goddess of learning - Saraswathi who sits at the tip of Your tongue turns red like a ruby even though She sparkles like a crystal in white.



என் தாயே!
இடைவெளி இல்லாமல் உனது துணையான சிவனின் புகழை ஓதும், அனைவரும் அறிந்த உனது நாவானது, செம்பருத்திப் பூவைப் போன்று சிவந்துள்ளது. வெண்மையில் மாணிக்கத்தைப் போல ஒளி வீசும் உன் நாவின் நுனியில் அமர்ந்திருக்கும் கல்விக் கடவுள் சரஸ்வதி, உனது நாவின் சிவப்பு நிறத்தால் பவளம் போன்று சிவந்து விட்டாள்.

Soundarya Lahari 63

ஸ்மித ஜ்யோத்ஸ்நா ஜாலம் தவ வதந சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணம் ஆஸீத் அதி ரஸதயா சஞ்சு ஜடிமா
அதஸ் தே சீதாம்சோ: அம்ருத லஹரீம் ஆம்ல ருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்சிக தியா



The chakora birds are thinking that their tongues have got numbed because of drinking the sweet nectar like light emanating from your moon like face. For a change, during the night they wanted to taste the sour rice gruel and hence started drinking the white rays of the full moon in the sky.


நிலவைப் போன்ற உனது முகத்தில் இருந்து வரும் அமுதமாகிய ஒளியைப் பருகுவதால் தங்களின் நாக்கு மரத்துப் போய் விட்டதாக சகோரப் பறவைகள் எண்ணுகின்றன. ஒரு மாற்றத்திற்காக அவை இரவினில் உப்புள்ள அரிசிக் கஞ்சியைப் பருக எண்ணி, அதனால் வானில் உள்ள பௌர்ணமி நிலவின் வெண்ணிற கதிர்களைப் பருக ஆரம்பித்தன. 

Soundarya Lahari 62

ப்ரக்ருத்யா ரக்தாயாஸ் தவ ஸுததி தந்த ச்சத ருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜனயது பலம் வித்ரும  லதா
ந பிம்பம் தத் பிம்ப ப்ரதிபலந ராகாத் அருணிதம்
துலாம் அத்யாரோடும் கதம் இவ விலஜ்ஜேத கலயா


Oh Goddess having beautiful rows of teeth!
I tried to find an equivalent for Your blood red lips and could only imagine the red coral. The fruits of the red cucurbit hangs it's head in shame on being compared to Your lips since it has tried to imitate it's colour from Your lips and knows it has failed miserably in doing this.


அழகிய பல் வரிசையை உடைய தேவியே!
ரத்தச் சிவப்பான உனது இதழ்களுக்கு இணையாக உள்ள ஒன்றை நான் யோசிக்க முயன்றதில், என்னால் செம் பவளத்தையே நினைக்க முடிந்தது. உனது இதழ்களோடு ஒப்பு நோக்கப் பட்டதில் சிவப்பு பூசணிக் காய்கள் அவமானத்தில் தலை குனிந்தன. உனது இதழின் சிவந்த நிறத்தை ஒத்திருக்க நினைத்து அவை தோல்வி அடைந்ததை அக்காய்கள் அறிந்ததால் அவ்வாறு செய்தன.

Soundarya Lahari 61

அஸௌ நாஸா வம்ச: துஹிந கிரிவம்ச த்வஜபடி
த்வதீயோ நேதீய: பலது பலம் அஸ்மாகம் உசிதம்
வஹத்ய அந்தர் முக்தா: சிசிர கர நிச்வாஸ கலிதம்
ஸம்ருத்யா யத் தாஸாம் பஹிர் அபி ஸ முக்தா மணி தர:


Oh Goddess, who is the flag of the clan of the Himalayas!
Let Your nose which is like a thin bamboo give us the appropriate blessings.
Mother! I feel that you are wearing a rare pearl in your left nostril which is brought out by your breath as your nose is a storehouse of divine and rare pearls.


இமய மலை வம்சத்தின் கொடியாகத் திகழ்பவளே!
மெல்லிய மூங்கிலைப் போல உள்ள உனது மூக்கானது எங்களுக்கு உரிய ஆசிகளை  வழங்கட்டும்.
உனது மூக்கானது புனிதமான, அரிய  முத்துக்களின் உறைவிடமாக இருப்பதால், உன் சுவாசக் காற்றால் வெளியான ஒரு அரிய முத்தை நீ உன் இடது மூக்கில் அணிந்துள்ளாயோ என நான் எண்ணுகிறேன்.

Monday, February 14, 2011

Devi Picture 3 - Abiraami


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே  
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே


Soundarya Lahari 60

ஸரஸ்வத்யா: ஸூக்தீ: அம்ருத லஹரீ கௌச லஹரீ:
பிபந்த்யா: சர்வாணி ச்ரவண சுலுக் ஆப்யாம் அவிரலம்
சமத்கார ச்லாகா சலித சிரஸ: குண்டல கணோ
ஜணத்காரை ஸ் தாரை: ப்ரதி வசநம் ஆசஷ்ட இவ தே


Oh Goddess who is the consort of Lord Shiva!
Your sweet voice which is similar to the continuous waves of nectar fills the ears of Saraswathi without any interruption. She shakes her head to and fro hearing this and the sound made by her ear studs look as if they applaud your words.


சிவனின் துணையான தேவியே!
ஒன்றன் பின் ஒன்றாக வரும் அமுத அலைகளைப் போன்ற மதுரமான உனது குரல், தடங்கல் ஏதும்  இல்லாமல்  சரஸ்வதியின்  காதுகளை  நிரப்புகின்றது. தனது தலையை இரு புறமும்  ஆட்டும்  அவளால்  ஆடும்  அவள் காதணிகளின் ஓசையானது, உனது வார்த்தைகளுக்கு கரவொலி எழுப்புவதைப் போன்றுள்ளது.

Soundarya Lahari 59

ஸ்புரத் கண்டாபோக ப்ரதிபலித தாடங்க யுகலம்
சதுச் சக்ரம் மந்யே தவ முகம் இதம் மன்மத ரதம்
யம் ஆருஹ்ய த்ருஹ்யதி அவநி ரதம் அர்கேந்து சரணம்
மஹாவீரோ மார: ப்ரமத பதயே ஸஜ்ஜிதவதே


I feel that Your face with the pair of ear studs, along with the ones reflected in Your two mirror liked cheeks, is God of Love Manmadha's four wheeled chariot. It is probable that he thought  because he rode in this chariot he can win over Lord Shiva who was riding in the chariot of earth with the sun and moon as His wheels.


உனது இரு காதணிகளும், கண்ணாடி போன்ற உனது கன்னங்களில் பிரதிபலிக்கும் அதன் பிம்பங்களும், காதல் கடவுள் மன்மதனின் ரதத்தின் நான்கு சக்கரங்களோ என நான் எண்ணுகிறேன். ஒரு வேளை தான் இப்படிப்பட்ட ரதத்தை ஒட்டுவதால் தன்னால் சூரியனையும், சந்திரனையும் சக்கரங்களாக உடைய பூமித் தேரில்  உள்ள சிவ பெருமானையே வென்று விடலாம் என அவன் எண்ணினான் போலும்.

Soundarya Lahari 58

அராலம் தே பாளீ யுகளம் அக ராஜந்ய தநயே
ந கேஷாம் ஆதத்தே குஸும சர கோதண்ட குதுகம்
திரச்சீநோ யத்ர ச்ரவண பதம் உல்லங்க்ய விலஸந்
அபாங்க வ்யாஸங்கோ திசதி சர ஸந்தாந திஷணாம் 


Oh Goddess - the daughter of the king of mountains!
Everyone believes that the two arched joint between Your eyes and the ears are the flower bows of the God of Love - Manmadha. The side glances of Your eyes, piercing through these places makes every one wonder as if the arrows have been sent through Your ears.



ஹிமவான் பெற்ற புத்திரியான தேவியே!
உனது கண்களுக்கும் காதுகளுக்கும் இடையே உள்ள மேடான பகுதி, காதல் கடவுள் மன்மதனின் மலர் வில்லோ என எல்லோரும் எண்ணுகிறார்கள். இவற்றைத் தாண்டி வரும் உனது கண்களின் கடைக்கண் பார்வைகள், உனது காதுகளின் மூலமாக எய்யப்பட்ட அம்புகளோ என எல்லோரையும் ஆச்சர்யப்பட வைக்கின்றது.  

Soundarya Lahari 57

த்ருசா த்ராகீயஸ்யா தர தலித நீலோத் பல ருசா
தவீயாம்ஸம் தீநம் ஸ்நபய  க்ருபயா மாம் அபி சிவே
அநேநாயம் தந்யோ பவதி ந ச தே ஹாநிர் இயதா
வநே வா ஹர்ம்யே வா ஸம கர நிபாதோ  ஹிமகர:


Oh the consort of Lord Shiva!
Please shower me with Your merciful look from Your eyes which are very long and have the luster of a slightly opened divinely looking blue lotus flower. By this look, I will become rich with all the riches that are known. And You have nothing to lose in this because does not the moon shines in both the forest and great palace alike.


சிவனின் துணையே!
நீண்டு இருப்பதும், சற்றே திறந்த புனிதமாகத் தோன்றும் நீலத் தாமரை மலர் போன்று இருப்பதும் ஆன உனது கண்களில் இருந்து கருணா பார்வையை வீசி என்னைக் குளிப்பாட்ட வேண்டும். இப் பார்வையால் நான் தெரிந்த எல்லாச் செல்வங்களையும் பெற்றவனாவேன். நிலவானது காட்டிலும், பெரிய அரண்மனையிலும் ஒன்று போல ஒளி வீசுவதைப் போல உனக்கு இதனால் எந்த ஒரு நஷ்டமும் இல்லை.

Soundarya Lahari 56

தவாபர்ணே கர்ணே   ஜப நயந பைசுந்ய சகிதா
நிலீயந்தே தோயே நியதம் அநிமேஷா: சபரிகா:
இயம் ச ஸ்ரீர் பத்தச் சத புட கவாடம் குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே நிசி ச விகடய்ய ப்ரவிசதி


Oh one who has no source!
It is for sure that the black female fish in the stream are scared to shut their eyes as they fear thay Your long eyes resembling all of them would murmur bad about them to Your ears which are near by. It is also definite that Goddess Mahalakshmi enters the blooming blue lily flowers before your eyes close at night and reenter in the morning when they are open.


ஆதி இல்லாதவளே
ஓடையில் உள்ள கரிய பெண் மீனானது தான் கண்ணை மூடினால், அவர்களை ஒத்திருக்கும் உனது நீண்ட கண்கள் அருகில் உள்ள உனது நீண்ட காதுகளில் தன்னைப்  பற்றி முணுமுணுக்கும் என்று அஞ்சி தனது கண்களை மூடவில்லை. இது நிச்சயம்.
மகாலட்சுமி தாயார் நீ இரவு கண்களை மூடும் முன்னால் பூத்துள்ள நீல லில்லி மலர்களின் உட்புகுந்து காலையில் உனது கண்கள் திறந்த பின்னால் மீண்டும் வருகின்றாள். இதுவும் நிச்சயம்.

Soundarya Lahari 55

நிமேஷோந்மேஷாப்யாம்  ப்ரலயம் உதயம் யாதி ஜகதீ
தவேத்ய ஆஹு: ஸந்தோ தரணி தர ராஜந்ய தநயே
த்வத் உந் மேஷாஜ் ஜாதம் ஜகத் இதம் அசேஷம் ப்ரலயத:
பரி த்ராதும் சங்கே பரிஹ்ருத நிமேஷாஸ் தவ த்ருச:


Oh daughter of the ice mountain!
The learned sages say that this world of ours is created and destroyed when You open and close Your compassionate eyes. I believe my mother that You never shut Your eyes so that this world You created will never ever face deluge.



ஹிமவான் பெற்ற புத்திரியே!
எங்களின் இந்த உலகமானது நீ உனது கருணைமிகு கண்களை திறக்கும் போதும், மூடும் போதும் தோன்றி, அழிவதாக கற்றுணர்ந்த முனிவர்கள் கூறுகிறார்கள். இந்த உலகம் பிரளயத்தைச் சந்திக்க கூடாது என்பதற்காக நீ உனது கண்களை மூடுவதே இல்லை என நான் நம்புகிறேன்.

Soundarya Lahari 54

பவித்ரீ கர்தும் ந: பசுபதி பராதீந ஹ்ருதயே
தயா மித்ரைர் நேத்ரை: அருண தவல ச்யாம ருசிபி:
நத: சோணோ கங்கா தபந தநயேதி த்ருவமமும்
த்ரயாணாம் தீர்த்தானாம் உபநயஸி ஸம்பேதம் அநகம்


Oh one whose heart is owned by Lord Shiva!
Your eyes which are the companions of mercy are colored in red, white and black and these resemble the holy rivers - Sonabhadra which is red, Ganga which is white and Yamuna - the daughter of Sun which is black. The confluence of these sacred rivers removes all the sins of the world. We are certainly sure that in order to make us - the ones seeing You as holy, You made the three rivers meet and join.


சிவனுக்குச் சொந்தமான இதயத்தைக் கொண்டவளே!
கருணைக்கு இணையான உனது கண்கள் சிவப்பு, வெள்ளை
மற்றும் கருப்பு நிறங்களில் உள்ளது. அவை புனித ஆறுகளான -செந்நிறத்தை உடைய சோனபத்ரா, வெண்மையான கங்கை மற்றும் கரு நிறத்தில் உள்ள சூரியனின் புத்திரியான யமுனையை ஒத்திருக்கின்றன. பவித்ரமான இந்த ஆறுகளின் சங்கமம் உலகில் உள்ள
எல்லாப் பாவங்களையும் போக்குகின்றன. உன்னைக் காணும் எங்களையெல்லாம் புனிதமாக்கவே நீ இந்த மூன்று ஆறுகளையும் சந்திக்க வைத்து சங்கமிக்க வைத்தாய் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

Soundarya Lahari 53

விபக்த த்ரைவர்ண்யம் வ்யதிகரித லீலாஞ்ஜநதயா
விபாதி த்வந் நேத்ர த்ரிதயம் இதம் ஈசாந தயிதே
புந: ஸ்ரஷ்டும் தேவாந் த்ருஹிண  ஹரி ருத்ராந் உபரதாந்
ரஜ: ஸத்வம் பிப்ரத் தம இதி குணாநாம் த்ரயம் இவ


Oh beloved of Lord Shiva!
Those three eyes of Your's are colored in three hues by the eyeshades You are wearing to enhance Your beauty. You don the three qualities of satvam, rajas and thamas as if to recreate the holy trinity of Vishnu, Brahma and Rudra after they became one with You during the final deluge.


சிவனுக்குப் பிரியமானவளே!
உனது அழகைக் கூட்டுவதற்காக நீ அணிந்த கண் பூச்சு உனது முக்கண்களில், மூன்று நிறங்களில் ஒளிர்கின்றது.
இறுதிப் பிரளய காலத்தில் உன்னோடு ஒன்றாகக்  கலந்த புனித மும்முர்த்திகளான விஷ்ணு, பிரம்மா மற்றும் சிவனை மீண்டும் உயிர்பிக்கவே நீ சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் என்ற முக்குணங்களை நீ தரித்துள்ளாய்.  

New York Flushing Ganesha Temple


குள்ளக் குள்ளனே, குண்டு வயிறனே,
வெள்ளைப் பிள்ளையாரே, விநாயக மூர்த்தியே!
ஐந்து கரத்தனை, யானை முகத்தனை,
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை,
நந்தி மகன்தனை, ஞானக் கொழுந்தினை,
புந்தியில் வைத்து அடி போற்றுவனே

Welcome to the Temples of North America series. In Hindu belief, it is believed Lord Ganesha as obstacle remover. So any act will begin with a worship to Him. Being the first temple in this series, let us also start with a Ganesha temple. I have a special corner in my mind for this temple as this is the first temple I visited in the North American continent and of course the first outside the Indian shores 14 years back. A lot of growth has happened on this temple since then.

A church site was bought in the seventies for the purpose of building a Hindu Temple in the Flushing area of Queens borough in New York city. Located in the eastern suburbs of the city, it was the idea of one gentleman Sri. C. V. Narasimhan IFS. A Nehruvian era diplomat settled in New York post retirement, he had served in the United Nations headquarters as Under Secretary General - a Number 2 designation in the World Organization. He along with like minded people did the initial spadework for the temple. For fundraising a concert by Smt. M. S. Subbhulakshmi was organised in the summer of 1977. The temple got consecrated on July 4th 1977 - the same day as the Independence Day of USA. It would be interesting to note most of the US temple's anniversary would be around July 4th of each year. Utharaayana period where sun will be near the Northern Hemisphere runs between January 14 - July 14 of each year. If possible, most of the auspicious events will be scheduled during this period. With the North American winter ending only by end of March and being breezy for the next few weeks, temperature consistently stays near 50F only since May. Concrete can be poured only then and buildings can only set during this warmer times. Hence most of the temples will finish the final touches and get ready by beginning of July and get consecrated in the next 14 days. Also warmer climes lead to more people assembling and can be a memorable occassion for socializing.

The name of the presiding deity is Maha Vallabha Ganapathi. Lord Ganesha is the first son of Lord Shiva and Devi Paarvathi, having an elephant head and a human body with a pot belly. In Tamil He is called as முழு முதற் கடவுள் meaning all living beings originated from him, like all Vedhic Mantras originated from the Pranava Manthra Om.

The temple now has an east facing entrance located in Holly Avenue. There is a Raja Gopuram and a covered hallway leading to the temple having 16 pillars. There are 16 forms of Ganapathi (Shodasha  meaning 6 + 10) each in a pillar on either side of the hallway. Just before the steps is the DwajaSthamba (flag pole). Let us do our Namaskaarams here and enter the temple.

Once you enter the main door, the direct view you have is the idol of Lord Ganesha with His vehicle Mooshika (mouse) in front. The tusk of the deity is turned to the right and hence a வலம் புரி விநாயகர்.  The Moolavar deity is about 8 feet tall in black stone sculpted from India. An Utsavar deity is also kept outside the sannidhi for use during processions. There are 4 more additional sannidhis separately inside the building for Lord Shiva, Lord Subramanya and consorts, Lord Venkateshwara and Goddess Mahalakshmi. Each one of the deities is sculpted in blackstone enabling Abhishekams to be performed. With the current expansion projects, lot of spaces have been created for keeping the Panchaloha idols of differnet Gods and Goddesses - Devi Saraswathi, Rama/Lakshmana/Seetha/Hanuman, Radha / Krishna, Ayyappa, Agastya and his wife Lopamudra, Lord Chandrasekhara / Anandhavalli, Devi Kamaakshi, Durga, Nataraja / Parvathi and Manichavasagar, Muruga with Valli / Deivanai and Arunagirunathar, Swarna Bhairavar and Lord Renganathar. There is a section for Navagrahas too. Atma Linga has also been placed in one end -  a white stoned Linga to which Ganga Jal can be poured as Abisheka by devotees.

This temple is open mornings and evenings during weekdays and between 8am to 9pm on weekends and holidays. Every Sunday around 11am, Abhishekam is performed to Lord Ganesha - a full fledged Shodasha Upachaaram including milk, honey, curd, sandal paste, vibhoothi, dhoopam and deepam etc to the accompaniment of Vedhic chanting of Sri Rudram, Chamakam, Purusha Suktham, Narayana Suktham, Durga Suktham, Sri Suktham and Ganapathi Upanishad. This will continue till 12:30pm or so and after Alankaaram - a Maha Arathi is performed followed by Prasadham. Similarly at 7pm each day, Daily Arathi is performed along with the chanting of 'Jaya Jagadheesa Hare' song. According to the Nakshatra associated with each deity and/or as per the weekly schedule other deities too have pujas. The major function associated is the Ganesh Chathurthi celebration in August/September of each year which will be a Nava Dhina (9 Day) Mahotsava - beginning the friday before the week of Sukla Paksha Chathurthi of the month Aavani to the sunday following that. That sunday, a Ratha Yatra (Temple Procession) is done taking the Ganesha idol in a silver ratha around the 4 streets of Flushing area (ala the 4 maada veedhis procession in India). The function ends with the visarjana (dissolution) of the idol in water. During the Ayyappa Mandala period (months of Kaarthigai and Margazhi), every Saturday there is a bhajan by dedicated devotees. None of the major functions are missed under the watchful eyes of the President - Dr. Uma Mysorekar a medical doctor by profession.

The url of the temple is
 http://www.nyganeshtemple.org/Home.aspx

Monday, February 7, 2011

Soundarya Lahari 52

கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ     
புராம் பேத்து: சித்த ப்ரசம ரஸ வித்ராவண பலே
இமே நேத்ரே கோத்ரா தர பதி குலோத்தம் ஸ கலிகே
தவ ஆகர்ணாக்ருஷ்ட ஸ்மர சர விலாஸம் கலயத:


Oh flower bud who is the head gear for the king of mountains!
You are wearing black eye brows above your eyes which resemble eagle's feathers. You are determined to destroy peace from the mind of the person who destroyed the three cities. Your two eyes elongated till your ears to act as the arrows of the God of Love


மலைகளின் அரசனுக்கு தலைக் கவசமாகத் திகழும் மலர் மொட்டே!
கழுகின் இறகுகளைப் ஒத்த கரிய புருவங்களை நீ உன் கண்ணின் மேலே அணிந்துள்ளாய். மூன்று நகரங்களை அழித்தவனின் மனதில் உள்ள அமைதியை அழிக்க நீ உறுதி பூண்டுள்ளாய். காதல் கடவுள் மன்மதனின் அம்பாகத் திகழும் படி உனது இரு கண்களும் உனது காதுகள் வரை நீண்டுள்ளன.

Soundarya Lahari 51

சிவே ச்ருங்காரார்த்ரா தத் இதர ஜநே குத்ஸன பரா
ஸரோஷா கங்காயாம் கிரிச சரிதே விஸ்மயவதீ
ஹராஹிப்யோ பீதா ஸரஸி ருஹ ஸௌபாக்ய ஜநநீ
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜநநி த்ருஷ்டி: ஸகருணா


Oh Mother of all universe!
The look from your eyes is
  • kind and filled with love when looking at your Lord
  • filled with hatred when looking at all other men
  • filled with anger when looking at Ganga the other woman of your Lord
  • filled with wonder when hearing the stories of your Lord
  • filled with fear when seeing the snakes worn by your Lord
  • filled with red colour of valour like that of a beautiful lotus flower
  • filled with joy when seeing your friends and
  • filled with mercy when seeing me

அகில உலகங்களுக்கும் தாயானவளே!
உனது கண் பார்வை
  • உனது தலைவனைப் பார்க்கும் போது  அன்பினாலும், காதலினாலும் நிறைந்துள்ளது
  • பிற ஆண்களைப் பார்க்கும் போது வெறுப்பால் நிறைந்துள்ளது
  • உனது தலைவனின் மற்றொரு பாகமான கங்கையைக் காணும் போது சினத்தால் நிறைந்துள்ளது
  • உனது தலைவனைப் பற்றிய கதைகளைக் கேட்கும் போது ஆச்சர்யத்தில் நிறைந்துள்ளது
  • உனது தலைவன் அணிந்துள்ள பாம்புகளைப் பார்க்கும் போது அச்சத்தால் நிறைந்துள்ளது
  • அழகிய தாமரை மலரைப் போல வீரத்தால் சிவந்துள்ளது
  • தோழிகளைக் காணும்  போது இன்பத்தால் நிறைந்துள்ளது
  • என்னைக் காணும் போது கருணையால் நிறைந்துள்ளது.

Soundarya Lahari 50

கவீநாம் ஸந்தர்ப ஸ்தபக மகரந்தைக ரஸிகம்
கடாக்ஷ வ்யாக்ஷேப ப்ரமர கலபௌ கர்ண யுகலம்
அமுஞ்சந்தௌ த்ருஷ்ட்வா தவ நவ ரஸாஸ்வாத தரலௌ
அஸூயா ஸம்ஸர்காத் அலிக நயநம் கிஞ்சித் அருணம்


Oh Goddess!
Your two long eyes are like the two little bees which want to drink the honey and they extend to the ends under the pretense of side glances to your two ears which is bent upon drinking the honey from the flower bouquet of poems presented by your devotees. This makes your third eye light purple, due to jealousy and envy.


தாயே!
நீண்டிருக்கும் உனது இரு கண்கள், தேனை அருந்த விரும்பும்
இரு சிறிய தேனீக்களைப் போல உள்ளன. கடைக்கண் பார்வை பார்க்கும்  சாக்கில், அவை பக்தர்களால் தொடுக்கப்பட்ட பாடல்கள் என்ற மலர் மாலையின் தேனை அருந்த விரும்பும் இரு காதுகள் வரை நீளுகின்றன. இவை  உனது மூன்றாவது கண்ணை பொறாமையால் சற்றே சிவக்க வைத்துள்ளது.

Soundarya Lahari 49

விசாலா கல்யாணீ ஸ்புட ருசி: அயோத்யா குவலயை:
க்ருபா தாரா தாரா கிமபி மதுரா ஆ போகவதிகா
அவந்தீ த்ருஷ்டிஸ் தே பஹு நகர விஸ்தார விஜயா
த்ருவம் தத்தந் நாம வ்யவஹரண யோக்யா விஜயதே


Oh Goddess!
The look from your eyes is all pervading, doing good to all and sparkling everywhere, a beauty that is unchallenged even by blue lily flowers, a source of rain of mercy, sweetness personified, long and beautiful, capable of saving devotees, is in the several cities as its victory, can be called by several names according to the aspect one sees.


தாயே!
உனது கண் பார்வை எல்லாவற்றையும் ஊடுருவ வல்லது, எல்லோருக்கும் நன்மையே செய்வது, எங்கும் ஒளி வீசுவது, நீல லில்லி மலர்கள் கூட அழகில் போட்டியிட முடியாதது, கருணை என்னும் மழையின் ஆதாரமாக விளங்குவது, இனிமைக்கு ஒப்பானது, நீண்டும், அழகாகவும் உள்ளது, பக்தர்களை காக்க வல்லது, அனேக நகரங்களில் வெற்றிக்காகத் திகழ்வது, எந்தக் கோணத்தில் பார்க்கிறோமோ அதன்படி அநேகப் பெயர்களில் அழைக்க வல்லது.

Soundarya Lahari 48

அஹ: ஸூதே ஸவ்யம் தவ நயநம் அர்காத்மகதயா
த்ரியாமம் வாமம் தே ஸ்ருஜதி ரஜநீ நாயகதயா
திருதீயா தே த்ருஷ்டி: தர தலித ஹேமாம்புஜ ருசி:
ஸமாதத்தே ஸந்த்யாம் திவஸ நிசயோ: அந்தர சரீம்


Right eye of yours is like the sun and it creates the day.
Left eye of yours is like the moon is like the moon and it creates the night.
Middle eye of yours is like a golden lotus bud, slightly opening into
a flower and it creates the sunrise and sunset. 


உனது வலது கண் சூரியனைப் போல உள்ளது - அது பகலைப் படைக்கின்றது.
உனது இடது கண் நிலவைப் போல உள்ளது - அது இரவைப் படைக்கின்றது.
உனது மூன்றாவது கண் சற்றே இதழ் விரியும் தங்கத் தாமரை மொட்டைப் போல உள்ளது - அது சந்த்யா காலத்தைப் படைக்கின்றது.

Soundarya Lahari 47

ப்ருவௌ புக்நே கிஞ்சித் புவந  பய பங்க வ்ய ஸநிநி
த்வதீயே நேத்ராப்யாம் மதுகர ருசிப்யாம் த்ருத குணம்
தனுர் மந்யே ஸவ்யேதர கர க்ருஹீதம் ரதிபதே:
ப்ரகோஷ்டே முஷ்டௌ ச ஸ்தகயதி  நிகூடாந்தரம் உமே


Oh Goddess Uma - the one who removes fear from the world!
Your slightly bent eye brow appears as if tied by a group of honey bees forming a string. This resembles God of Love's bow held by his left hand who by holding so got his nose hidden by his wrist and folded fingers.


உலகிலுள்ள அச்சத்தை எல்லாம் நீக்கும் உமையே!
சற்றே வளைந்த உன் கண் புருவம் தேனீக்களால் கட்டப்பட்ட ஒரு சரத்தைப் போல் உள்ளது. காதல் கடவுள் இடது கையில் பிடித்துள்ள அம்பினால், அவனது மூக்கு அவனின்  மணிக்கட்டினாலும், மடக்கிய கை விரல்களாலும் மறைக்கப்பட்டது. உனது புருவம் அந்த அம்பினைப் போல உள்ளது.

Soundarya Lahari 46

லலாடம் லாவண்ய த்யுதி விமலம் ஆபாதி தவ யத்
த்விதீயம் தந் மந்யே மகுட கடிதம் சந்த்ர சகலம்
விபர்யாஸ ந்யாஸாத் உபயம்  அபி ஸம்பூய ச மித:
ஸூதாலேப ஸ்யூதி: பரிணமதி ராகா ஹிமகர:


Oh mother!
I have a doubt that your forehead which shines with the beauty of the moon, is nothing but a half moon imprisoned by your glorious crown. This is because, if the half moon of your forehead is joined with the inverted half moon of your crown, it would give the nectar like luster of a full moon day's moon.


தாயே!
நிலவைப் போன்ற ஒளி வீசும் உனது நெற்றி, உனது சீரிய கிரீடத்தினால்  சிறை பிடிக்கப்பட்ட பாதி சந்திரனோ என்ற சந்தேகம் என்னுள் உள்ளது. இது ஏனென்றால் உனது நெற்றியில் உள்ள பாதி சந்திரனும், கிரீடத்தில்  உள்ள பாதி சந்திரனும் ஒன்று சேர்ந்தால் அது அமுதைப் பொழியும் பௌர்ணமி நிலவைப் போல ஒளி வீசுகின்றது.

Soundarya Lahari 45

அராலை: ஸ்வாபாவ்யாத் அலிகலப ஸஸ்ரீபி: அலகை:
பரீதம் தே வக்த்ரம் பரிஹஸதி பங்கேருஹ ருசிம்
தர ஸ்மேரே யஸ்மிந் தசந ருசி கிஞ்ஜல்க  ருசிரே
ஸுகந்தௌ மாத்யந்தி ஸ்மர தஹந சக்ஷூ: மதுலிஹ:


Your golden thread like hairs which surround Your golden face are slightly curled by nature and shines like a young honey bee. Your face which makes fun of the beauty of the lotus is decorated with a slightly parted smile showing the tiers of Your teeth which looks like a sweetly scented white bud. This face mesmerises the God's eyes who burnt the God of Love.


உனது பொன் முகத்தைச் சூழ்ந்துள்ள தங்க இழைகளைப் போன்ற உனது முடிகள் இயற்கையிலேயே சற்றே சுருண்டு, இளைய  தேனீயைப் போன்று ஒளி வீசுகின்றது. தாமரை மலரின் அழகையே கேலிக்குரியதாக்கும் உன் முகம், குறு நகையால் அலங்கரிக்கப்பட்டு நறு மணம் வீசும் வெள்ளை மொட்டுக்களைப் போன்ற உனது பற்களின் அடுக்குகளைக் காட்டுகின்றது. இந்த முகமானது காதல் கடவுளை எரித்த கடவுளையே மயக்குகின்றது.

Soundarya Lahari 44

தனோது க்ஷேமம் நஸ் தவ வதன ஸௌந்தர்ய லஹரீ
பரீவாஹ: ஸ்ரோத: ஸரணிரிவ  ஸீமந்த ஸரணி:
வஹந்தீ ஸிந்தூரம் ப்ரபல கபரீ பார திமிர
த்விஷாம் ப்ருந்தை: பந்தீ க்ருதம் இவ  நவீனார்க கிரணம்



Oh Mother!
The line parting your hairs looks like a canal through which the rushing waves of your beauty overflows. It imprisons the vermillion resembling a rising sun on both sides. By using Your hair, which is dark like the enemy soldier's army, protect us and give us peace.


தாயே!
உனது தலை வகிடு, உனது அழகு என்னும் விரையும் அலைகள் தளும்புகின்ற ஒரு கால்வாயைப் போன்று உள்ளது. உதிக்கின்ற சூரியனைப் போன்ற நிறத்தில் உள்ள குங்குமத்தை, அந்தக் கால்வாய் தன் இரு கரைகளின் உள்ளே கொண்டுள்ளது. எதிரிகளின் சேனையைப் போன்று கருமையாக உள்ள உனது தலை முடி எங்களைக் காத்து எங்களுக்கு அமைதியை அளிக்கட்டும்.



Soundarya Lahari 43

துநோ து த்வாந்தம் நஸ் துலித தலீதேந்தீவர வநம்  
கந ஸ்நிக்த ச்லக்ஷ்ணம் சிகுர நிகுரும்பம் தவ சிவே
யதீயம் ஸௌரப்யம் ஸஹஜம் உபலப்தும் ஸூமநஸோ
வஸந்த்யஸ்மிந் மந்யே வல மதந வாடீ விடபிநாம்


Oh Goddess - the consort of Lord Shiva!
Your head is like the forest of fully blossomed blue lotus flowers, which is soft, dense and shines with luster. Let all the darkness of our mind be destroyed by the crowning glory of Your head.
Oh my Mother!
I believe that all the pretty flowers of Lord Indra's garden are forever in Your head, to get the natural aroma of Your hair.


சிவனின் துணையான சக்தியே!
உனது சிரமானது, முற்றும் மலர்ந்த நீலத்தாமரை மலர்களால் ஆன ஒரு வனமாக, அவை  மென்மையாக, அடர்த்தியாக, ஒளி வீசுகின்றதாக இருக்கின்றது. உனது சிரத்தின் ஒளி வீசும் கீர்த்தியில், எங்களின் எல்லா மன இருட்டும் தொலையட்டும். 
என் தாயே!
இந்திரனின் தோட்டத்தில் உள்ள எல்லா அழகிய மலர்களும், உனது முடிகளின் இயற்கையான நறுமணத்தைப் பெற வேண்டி உன் தலையில் குடி கொண்டுள்ளதாக நான் எண்ணுகிறேன்.

Soundarya Lahari 42

கதைர் மாணிக்யத்வம் ககந மணிபி: ஸாந்த்ரகடிதம்
கிரீடம் தே ஹைமம் ஹிமகிரி ஸுதே கீர்தயதி ய:
ஸ நீடே யச்சாயாச் சுரண சபலம் சந்த்ர சகலம்
தநு: சௌநாஸீரம் கிம் இதி ந நிபத்நாதி திஷணாம் 


Oh daughter of the Ice Mountain!
A person who chooses to describe Your crown decorated with shining jewels which are actually the transformed form of twelve sacred suns arranged closely to one another, will see the crescent in Your crown and in the dazzling brightness of those jewels, he will think of it as a rainbow when in reality it is Lord Indra's bow.


ஹிமவான் பெற்ற புத்திரியே!
உனது கிரீடமானது, 12 புனிதமான சூரியன்களின் மாறுபட்ட வடிவமாகவும் அவை ஒன்றுக்கொன்று நெருக்கமாக வைக்கப்பட்டுளதைப் போன்றும் உள்ளன. ஒளி வீசும் அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட அக் கிரீடத்தை வர்ணிக்க எண்ணுபவன், அக் கிரீடத்தின் பிறையைக் காண்பான். அந்த நகைகளின் ஒளி வெள்ளத்தில், உண்மையில் இந்திரனின் அம்பான அதை அவன் வானவில்லாக எண்ணிக் கொள்வான்.