Tuesday, December 28, 2010

Soundarya Lahari 5

ஹரிஸ் த்வாம் ஆராத்ய ப்ரணத ஜன சௌபாக்ய ஜனனீம்
புரா நாரீ பூத்வா புர ரிபும் அபி க்ஷோப மனயத்
ஸ்மரோ(அ)பி த்வாம் நத்வா ரதி நயன லே ஹ்யேன வபுஷா
முனீ நாம் அப்யந்த: ப்ரபவதி ஹி மோஹாய மஹதாம்

Mother! You grant all the good things to those who bow at your feet.
Lord Vishnu disguised as a pretty and lovable woman had moved the mind of Rudra who burnt the cities, by making Him (Shiva) fall in love with Him (Vishnu)has worshipped you.
Manmadha - the God of Love, worshipping you got the special form which in Rathi's eyes was like nectar to drink and made the great sages fall for him in delusion.

தாயே! உன் காலைத் தொழுபவர்களுக்கு நீ நல்லதே அளிக்கின்றாய்.
மோகினி அவதாரத்தில், நகரங்களை எரித்த சிவனையே மயக்கி காதலில் விழ வைத்த விஷ்ணுவே உன்னைத் தொழுதுள்ளார்.
உன்னை வணங்கியதால் காம ராஜன் மன்மதனுக்கு அவன் மனைவி ரதியின் பார்வையில் சிறந்த சரீரம் கிடைத்து, அதை தேனாகப் பருக வைத்தது. தவ ஸ்ரேஷ்டர்களான முனிவர்களை மாயையில் அவனிடம் விழ வைத்தது.

Soundarya Lahari 4

த்வத் அன்ய: பாணிப்யாம் அபய வரதோ தைவதகண:
த்வம் ஏகா நைவாஸி ப்ரகடித வராபீத்யபிநயா
பயாத் த்ராதும் தாதும் பலம் அபி ச வாஞ்சா சமதிகம்
சரண்யே லோகானாம் தவ ஹி சரணாவேவ நிபுநௌ

Oh Mother! You are the refuge to every one in this
world. All other Gods other than you, give refuge
and grant wishes only by their hands. Mother, you
alone never shows to the world in detail the boons
and wishes you can give. This is because your holy
feet is sufficient enough for the devotees to remove
fear for ever and grant boons more than they asked for.

தாயே! நீயே உலகில் உள்ள எல்லோருக்கும் சரணாகதி
அளிப்பவள். உன்னைத் தவிர பிற கடவுளர்கள், தங்கள்
கரங்களால் அபய வரதம்* அளிக்கிறார்கள். நீயோ உலகிற்கு
உனது அபய வரதம் அளிக்கும் மகிமையை வெளிக்
காட்டுவதில்லை - ஏனென்றால், உனது திருபாதங்களே
பக்தர்களின் துயர்களை எப்பொழுதும் நீக்கி அவர்கள்
வேண்டியதை விட அதிகமாக வரம் அளிக்கின்றது.
* அபய - சரண் அளிப்பது; வரதம் - வரம் அளிப்பது

Monday, December 27, 2010

Soundarya Lahari 3

அவித்யானாம் அந்தஸ் திமிர மிஹிர த்வீப நகரீ
ஜடானாம் சைதன்ய ஸ்தபக மகரந்த ஸ்ருதி ஜரீ
தரித்ராணாம் சிந்தாமணி குணநிகா ஜன்ம ஜலதௌ
நிமக்னானாம் தம்ஷ்ட்ரா முர ரிபு வராஹஷ்ய பவதி

Oh Great Goddess!
The dust under your feet is like a city under a rising sun that dispels all darkness from the minds of the poor ignorant souls
For the slow witted ones, this dust is like the honey that flows from the bunch of flowers of vital action
For the poor people, this dust is like the heap of wish giving gems
And for those drowned in this sea of birth it is like Lord Vishnu's teeth who as Varaha brought to surface the Mother Earth.

தாயே! உனது கால் தூசி -
உதிக்கின்ற சூரியன் எவ்வாறு ஒரு நகரத்தின் இருளைப் போக்குகின்றதோ, அது போல அஞ்ஞானத்தில் உழல்பவரின் மன இருளைப் போக்குகின்றது
மந்தமாக உள்ளவர்களுக்கு, அத்யாவசிய செயல்கள் என்ற மலர்களில் இருந்து ஓடும் தேன் போன்றது
ஏழைகளுக்கு, வரமாக ரத்தினக் குவியல்களை அளிப்பது
சம்சார சாகரத்தில் உழல்பவர்களுக்கு, வராக அவதாரத்தில் பூமா தேவியை பாற்கடலின் மேல் கொண்டு வந்த விஷ்ணுப் பெருமானின் பல் போல அபயம் அளிக்க வல்லது.

Soundarya Lahari 2

தநீயாம்சம் பாம்ஸும் தவ சரண பங்கேருஹ பவம்
விரிஞ்சி: சஞ்சின்வன் விரசயதி லோகானவிகலம்
வஹத்யேனம் செளரி: கதம் அபி சஹஸ்ரேந சிரஸாம்
ஹர: சம்ஷுத்யைனம் பஜதி பஸிதோத்தூலன விதிம்

The creator of Universe - Brahma has created this world
by selecting a dust from Your feet.
The thousand headed Adhisesha with great effort somehow
carries a dust of your feet.
The Great Lord Rudra takes this dust, pulverizes it and
uses it as Holy Ash.

அயன் (பிரம்மா) உன் காலடி மண்ணினால் இந்த அகிலத்தைப்
படைத்தான்.
ஆயிரம் தலை உடைய ஆதிசேஷன் பெரும் சிரமத்தோடு உன்
கால் தூசினை சுமந்தான்.
அதிபதியான சிவனோ இத்தூசினைப் பொடித்து திருநீறாக அணிகிறான்

Soundarya Lahari 1

சிவ: சக்த்யா யுக்தோ யதி பவதி சக்த: ப்ரபவிதும்
ந சேதேவம் தேவோ ந கலு குசல: ஸ்பந்திதும் அபி
அதஸ் த்வாம் ஆராத்யாம் ஹரி ஹர விரிஞ்சாதிபிர் அபி
ப்ரணந்தும் ஸ்தோதும் வா கதம் அக்ருத புண்ய: பிரபவதி

Lord Shiva is able to create this world only with the
help of Shakthi (Parvathi). Without Her, He cannot even
move an inch. Likewise how can one who has not done any
good deeds or hasn 't sung your praise be sufficient
(competent) to worship you? - Oh my Goddess, one who is
worshipped by Trinity.

சிவ பெருமானால் இவ்வுலகில் சக்தியின் துணையோடு தான்
காக்கும் தொழிலை செய்ய முடிகிறது. அவள் இல்லையேல்
அவனால் ஒரு அங்குலமும் அசைய / அசைக்க முடியாது.
அது போல வாழ்வில் எந்த ஒரு நற்காரியமும் செய்யாத
ஒருவனால், உன்னை போற்றி பாடாத ஒருவனால் உன்னை
வணங்கும் தகுதியை எவ்வாறு பெற முடியும்?
தாயே நீயே மும்மூர்த்திகளாலும் வணங்கப்படுபவள்.