Sunday, June 26, 2011

GIta Mahatmiyam - 1

ஒலி வடிவில் கேட்க 


ஸ்ரீ கணேஷாய நம: கோபால கிருஷ்ணாய நம: 
1.
தாரோ உவாச:
பகவான் பரமேஷான பக்திர் அவ்யபி சாரிணீ
பிராரப்தம் பூஜ்ய மானஸ்ய கதம் பவதி ஹே பிரபோ
பூமி சொன்னது:
பகவானே! உயர்ந்த தலைவனே!
பிராரப்த கர்மா ஆகிய சம்சார ஜீவனத்தில் மூழ்கியுள்ள ஒருவனிடம் எவ்வாறு சலனமற்ற பக்தி தோன்ற முடியும் பிரபுவே?

2.
ஸ்ரீ விஷ்ணுர் உவாச:
பிராரப்தம் பூஜ்ய மானோ ஹி கீதா அப்யாசரதா சதா
ச முக்தா ச ஸுகீ லோகே கர்மணா நோபலிப்யதே
ஸ்ரீ விஷ்ணு சொன்னது:
சம்சார ஜீவனத்தில் ஒருவன் மூழ்கி இருந்தாலும், கீதையை ஒழுங்காக பாராயணம் செய்பவனால் முக்தி அடைய முடியும். அவன் இந்த உலகில் மிகுந்த சந்தோசம் உடையவனாக இருப்பான். எந்த கர்ம வினையும் அவனை அண்டாது.

3.
மகா பாபாதி பாபானி கீதா தியானம் கரோதி சேத்
க்வச்சித் ஸ்பர்ஷம் ந குர்வந்தி நளினி தளம் அம்புவத்
தாமரை இலையை எப்படி நீரினால் கறைப் படுத்த முடியாதோ, அதைப் போல கீதையை ஒழுங்காக பாராயணம் செய்யும் ஒருவனை எந்தப் பாவமும் தீண்டாது. 

4.
கீதாயஹ் புஸ்தகம் யத்ர யத்ர பாட: ப்ரவர்த்ததே
தத்ர சர்வாணி தீர்தாணி பிரயாகாதீணி தத்ர வை
எங்கெல்லாம் கீதை வைக்கப் பட்டுள்ளதோ , எங்கெல்லாம் கீதை படிக்கப் படுகிறதோ, அங்கெல்லாம் பிரயாகை போன்ற எல்லா புண்ணிய தலங்களும் உறையும்.

5.
சர்வே தேவாச்ச ரிஷயோ யோகின: பன்னகாஷ்ச்ச யே
கோபாலா கோபிகா வாபி நாரத் உத்தவ பார்சதை:
எல்லா தேவர்களும், முனிவர்களும், யோகிகளும், தேவ சர்ப்பங்களும், கோபாலர்களும், ஸ்ரீ கிருஷ்ணனின் நண்பர்களும், பக்தைகளுமான கோபிகைகளும், நாரதர், உத்தவர் போன்ற மற்றவரும் குடி இருப்பர்.

6.
சஹாயோ ஜாயதே ஷீக்ரம் யத்ர கீதா ப்ரவர்த்ததே 
யத்ர கீதா விசாரஷ்ச்ச பதனம் பாதனம் ஸ்ருதம் 
தத்ராஹம் நிஷ்சிதம் ப்ரித்வி நிவாசாமி சதைவ ஹி
எங்கெல்லாம் கீதை பாராயணம் செய்யப் படுகிறதோ அங்கெல்லாம் உதவி உடனே கிடைக்கும். பூமியே! எங்கெல்லாம் கீதை கேட்கப்படுகிறதோ, கற்றுக் கொடுக்கப்படுகிறதோ, விவாதிக்கப் படுகிறதோ அங்கெல்லாம் நான் எப்பொழுதும் இருப்பேன்.

7.
கீதாஸ்ரையேஹம் திஷ்தாமி கீதா மே சோட்டமம் க்ரிஹம் 
கீதா ஞானம் உபாஸ்ரித்ய த்ரீன் லோகான் பாலயாம் யஹம்
நான் கீதையில் சரண் அடைகிறேன். கீதையே எனது சிறந்த இருப்பிடம்.கீதையின் ஞானத்தைக் கொண்டே, மூவுலகையும் நான் காக்கின்றேன்.

8.
கீதா மே பரமா வித்யா பிரம்மரூபா ந சம்ஷய:
அர்த்த மாத்ர அக்ஷரா நித்யா ச்வாநிர் வாச்ய பதாத்மிகா 
கீதை என்னுடைய உயர்ந்த கல்வி. அதுவே 
எந்த சந்தேகமும் இல்லாமல் பிரம்மத்தின் ரூபம் ஆகும்,
எப்பொழுதும் நிலைத்திருப்பது, 
பிரணவ மந்திரம் ஆகிய ஓம் என்னும் அரை மாத்திரை சொல் (இலக்கணத்தில் உள்ள அரை மாத்திரை பிரயோகம்), 
பரமாத்மாவின் குறை இல்லாத சிறப்பு. 

9.
சிதானந்தேன கிருஷ்னேன ப்ரோக்தா ஸ்வாமு கதோர்ஜுன
வேத த்ரயீ பர ஆனந்தா தத்வார்த்த ஞான சம்யுதா 
இது எல்லாம் அறிந்த பூஜ்ய கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரால் அவர் வாயால் அர்ஜுனனுக்குச் சொல்லப்பட்டது. இது வேதத்தின் சாரத்தைக் கொண்டுள்ளது. பரம ஆனந்தத்தைத் தரக் கூடியது.
கீதை ஆனது வேதம் மற்றும் உபநிஷத்தின் சாரத்தைக் கொண்டுள்ளது. எனவே இது எல்லா வயதினர்க்கும், எல்லா குணம் உடையவர்களுக்கும் உகந்த பொது மறை ஆகும்.

10.
யோ அஷ்டதசா ஜபேன் நித்யம் நரோ நிஷ்ச்சல மானசா:
ஞான சித்திம் ச லபதே ததோ யாதி பரம் பதம்
எவர் ஒருவர் பகவத் கீதையில் உள்ள பதினெட்டு அத்தியாயங்களையும் தினமும் பவித்ரமான, சலனமற்ற மனதுடன் பாராயணம் செய்கின்றாரோ, அவர் ஞானத்தில் பூர்ணம் அடைந்து பரம பதம் ஆகிய உயர்ந்த நிலையை அடைவார்.

11.
பாடே அசமர்த்த சம்பூர்ணம் தடோர்தம் பாடம் ஆசரேத்
ததா கோதா நஜம் புண்யம் லபதே நாட்ற சம்ஷயா
முழு பாராயணம் செய்ய முடியாவிட்டாலும், பாதி படித்தாலும் அவர் கோ தானம் செய்த பலனை அடைவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை.

No comments:

Post a Comment