Wednesday, June 8, 2011

Sri Aaditya Hrudaya Stotram 2

11-20 ஸ்லோகங்களை ஒலி வடிவில் கேட்க:

11.
ஹரிதஸ்வ: ஸஹஸ்ரார்ச்சி: ஸப்த ஸப்திர் மரீசிமாந்   
திமிரோந் மததன் சம்பு: த்வஷ்டா மார்த்தண்ட அம்ஷுமான் 
உடையவர், இருளை அகற்றுபவர், மங்களத்தின் ஆதாரம், பக்தர்களின் துயரைப் போக்குபவர்,  பிரபஞ்சம் ஆகிய அண்டத்திற்கு உயிர் ஊட்டுபவர்.

12.
ஹிரண்ய கர்ப்ப: சிசிர: ஸ்தபநோ பாஸ்கரோ ரவி:
அக்நிகர்ப்போ (அ)திதே: புத்ர: சங்க: ஷிஷிர நாசந:

அவரே தலைவர். அவரே ஹிரண்யகர்பன், ஷிஷிரஸ்தபன், பாஸ்கரன், ரவி என்றும் அறியப்படுகிறார். அவர் தன்னுள்ளே அக்னியைக் கொண்டுள்ளார். அதிதியின் புத்திரர் ஆன அவர், குளிரை போக்குபவர். 


13.
வ்யோமநாதஸ் தமோபேதீ ருக் யஜுஸ் ஸாம பாரக:
கந வ்ருஷ்டிர் அபாம் மித்ர: விந்த்யவீதீ ப்லவகம் அ:
அவரே சொர்கத்தின் தலைவர், இருளை நீக்குபவர், ரிக், யஜுர் மற்றும் சாம வேதத்தில் தேர்ந்தவர், கன மழையினை பெய்விப்பவர், நீரின் நண்பர், தனது தனி பாதையில் வேகமாக சஞ்சரிப்பவர்.

14.
ஆதபீ மண்டலீ ம்ருத்யு: பிங்கள: ஸர்வதாபந:         
கவிர் விஸ்வோ மஹா தேஜா ரக்த: ஸர்வ பவோத்பவ:
அவர் ஒளி வட்டத்தால் அலங்கரிக்கப்பட்டவர். அவரே காலன், பிங்களன், அனைத்தையும் அழிப்பவர், எங்கும் நிறைந்திருப்பவர், எல்லாம் ஆனவர், சிறந்த புத்திசாலி, தேஜஸ் உடையவர், எல்லா உயிரிங்களுக்கும் ஆதாரம் ஆனவர்.


15.
நக்ஷத்ர  க்ரஹதா ராணாம் அதிபோ விஸ்வ பாவந:
தேஜஸாமபி தேஜஸ்வீ த்வாதஷாத்மந் நமோ(அ)ஸ்து தே
அனைத்து கிரஹங்களையும், நட்சத்திரங்களையும் இயக்குபவர், அனைவரையும் படைப்பவர், சிறந்தவர்களிடையே ஒளி வீசுபவர். பன்னிரண்டு வடிவில் (ஒரு ஆண்டின் பன்னிரண்டு மாதங்கள் என்ற உருவில்) தோன்றுபவரே, கடவுளே! உங்களுக்கு எங்களின் வணக்கங்கள். 


16.
நம: பூர்வாய கிரயே பஷ்சிமா யாத்ரயே நம:
ஜ்யோதிர் கணாநாம் பதயே திநாதி பதயே நம:  
கிழக்கு மலைத்தொடராகவும், மேற்கு மலைத்தொடராகவும் தோன்றும் உங்களுக்கு எங்களின் வணக்கங்கள். சிறந்தவர்களின் தலைவராகவும், பகலின் அதிபதியாகவும் உள்ள உங்களுக்கு வணக்கங்கள். 

17.
ஜயாய ஜய பத்ராய ஹர்யஸ்ரவாய நமோ நம:
நமோ நம: ஸஹஸ்ராம்ஷோ ஆதித்யாய நமோ நம:

வெற்றியை அளிப்பவரே! உங்களுக்கு வணக்கங்கள்.
வெற்றி மூலம் கிடைத்த மகிழ்ச்சியே! உங்களுக்கு வணக்கங்கள்.
பச்சைக் குதிரைகளை உங்களின் ரதத்தில் பூட்டிய தேவரே, அதிதியின் புத்திரரே, ஆயிரம் கிரணங்களை உடையவரே! உங்களுக்கு வணக்கங்கள்.

18.
நம உக்ராய வீராய ஸாரங்காய நமோ நம:
நம: பத்ம ப்ரபோதாய மார்த்தாண்டாய நமோ நம:                    

புலன்களை அடக்குபவரே, வீரரே! உங்களுக்கு வணக்கங்கள்.
பிரணவ மந்திரமாகிய 'ஓம்' குறிப்பிடும் உங்களுக்கு வணக்கங்கள்.
தாமரையை மலரச் செய்பவரே! உங்களுக்கு வணக்கங்கள்.
மார்தாண்டவராகிய (உக்ரமானவர்) உங்களுக்கு வணக்கங்கள்.

19.
ப்ரஹ்மேஷாநா அச்யுதேஷாய ஸூர்யாய ஆதித்ய வர்ச்சஸே
பாஸ்வதே ஸர்வ பக்ஷாய ரௌத்ராய வபுஷே நம:                          

பிரமன், சிவன் மற்றும் அச்சுதனின் தலைவரே! உங்களுக்கு வணக்கங்கள்.
சூரியக் கடவுளாக சூரிய வெளியில் உறையும் ஆன்மீக விளக்கே! உங்களுக்கு வணக்கங்கள்.
ஒளி வீசுபவரே, அனைத்தையும் உள் வாங்குபவரே, ருத்ரனாகத் தோன்றி அறியாமையை விரட்டுபவரே! உங்களுக்கு வணக்கங்கள். 

20.
தமோக்நாய ஹிமக்நாய ஸத்ருக்நாய அமிதாத்மநே
க்ருதக்ந ஹனாய தேவாய ஜ்யோதிஷாம் பதயே நம:      
இருளை விரட்டுபவரே, குளிரை போக்குபவரே, எதிரிகளை அழிப்பவரே, எல்லை இல்லாதவரே, நன்றி மறந்தவர்களை அழிப்பவரே, எல்லா ஒளிக்கும் அதிபதியே! உங்களுக்கு வணக்கங்கள். 

3 comments:

  1. 11 முதல் 20 வரை ஸ்லோகங்கள் விளக்கங்களுடனும், ஒலி வடிவுடனும் கொடுத்துள்ளதற்கு, நன்றிகள்.

    ReplyDelete
  2. இந்த இரண்டாம் பகுதியும் நன்கு கேட்க முடிந்தது. நன்றி.

    ReplyDelete