Monday, February 28, 2011

Soundarya Lahari 79

நிஸர்க க்ஷீணஸ்ய ஸ்தந தட பரேண க்லமஜுஷோ
நமந்மூர்த்தே: நாரீ திலக  சநகை: த்ருட்யத இவ
சிரம் தே மத்யஸ்ய த்ருடித தடிநீ தீர தருணா
ஸமாவஸ்தா ஸ்தேம்நோ பவது குசலம் சைலதநயே



Oh daughter of the mountain who is the greatest among the women!
Long live Your pretty hips which look fragile, are by nature tiny, strained by Your heavy breasts and hence slightly bent and look like the tree standing in the eroded banks of a rushing river.

மலையின் பெண்ணே! பெண்களுள் சிறந்தவளே!
மெல்லியதான, இயற்கையாகவே குறுகிய, உனது கனத்த மார்புகளால் சற்றே வளைந்த, காட்டாறின் அரிக்கப்பட்ட கரைகளில் நிற்கும் மரத்தைப் போல உள்ள உனது அழகிய இடை வாழிய வாழியவே.



Soundarya Lahari 78

ஸ்திரோ கங்காவர்த: ஸ்தந முகுல ரோமா வலிலதா
கலாவாலம் குண்டம் குஸும சர தேஜோ ஹூத புஜ:
ரதேர் லீலாகாரம் கிமபி தவ நாபிர் கிரி ஸுதே
பில த்வாரம் சித்தே: கிரிச நயநாநாம் விஜயதே


Oh daughter of the mountain!
I am not able to make up my mind if Your navel is:
a whirlpool in river Ganga which appears to be stable,
or the root of the climber which is Your hair line stream having two breasts of Yours as the buds,
or the Homa fire where the fire is the light from cupid,
or the playhouse of Rathi, God of Love - Manmadha's wife,
or the opening to the cave in which Shiva's tapas gets fulfilled.

மலைகளின் பெண்ணே!
உனது நாபியானது :
அமைதியாகத் தோன்றும் கங்கை நதியின் சுழலோ,
இரு மார்புகளையும் மொட்டாகக் கொண்ட, நாபியில் இருந்து எழும் ரோம ரேகை என்னும் கொடியின் வேரோ,
மன்மத பாணத்தால் ஏற்றப்பட்ட நெருப்பைக் கொண்ட ஹோம அக்னியோ,
காதல் கடவுள் மன்மதனின் மனைவியாகிய ரதி விளையாடும் இடமோ
எது என நான் அறியேன்.

Soundarya Lahari 77

யதேதத் காலிந்தீ தநு தர தர ங்கா க்ருதி சிவே
க்ருசே மத்யே கிஞ்சிஜ் ஜநநி தவ யத்பாதி ஸுதியாம்
விமர்தாத் அந்யோந்யம்  குசகலசயோ: அந்தர கதம்
தநூ பூதம் வ்யோம  ப்ரவிசதிவ நாபிம் குஹரிணீம்



Oh Mother of the Universe who is Shiva and Shakthi!
In the narrow part of the middle of Your body, the learned men appear to see a line, which is in the shape of a small wave of the Yamuna river, which shines and glitters, appears like the sky, made very thin due to the presence of Your dense colliding breasts and entering Your cave like navel.

சிவனும், சக்தியும் ஆன ஜகத்தின் தாயே!
உனது உடலின் மத்தியாக உள்ள ஒல்லியான பகுதியில், கற்று அறிந்தவர்கள் ஒரு மடிப்பு போல ஒன்றைக் காண்கிறார்கள். இவ்வமைப்பு யமுனை நதியின் சிறிய அலை போலும், ஒளி வீசியும், ஆகாயத்தைப் போலும், உனது அடர்ந்த மார்புகளுடன் ஒப்பு நோக்கும் போது மெல்லியதாகவும், குகையைப் போல உள்ள உனது நாபியுள் நுழைவதைப் போலும் உள்ளது.

Soundarya Lahari 76

ஹர க்ரோத ஜ்வாலாவலிபி: அவலீடேந வபுஷா
கபீரே தே நாபீ ஸரஸி க்ருதஸங்கோ மநஸீஜ:
ஸமுத்தஸ்தௌ தஸ்மாத் அசல தநயே தூமலதிகா
ஜநஸ்தாம் ஜாநீதே தவ ஜநநி ரோமாவலிரிதி


Oh daughter of the king of mountain!
The God of Love Manmadha who is the king of the mind, when being lit by the flame of Shiva's anger immersed himself in Your deep navel which is like a deep pond. From Your navel, a tendril like smoke emanated and Oh Mother! people think think this is the line of hair that climbs from Your navel upwards.

மலைகளின் அரசனானவனின் புத்திரியே!
எண்ணங்களுக்கு அரசனான காமக் கடவுள் மன்மதன் சிவனின் கோபம் என்னும் நெருப்பினால் எரிக்கப்பட்ட பொழுது தன்னை உனது நாபியாகிய ஆழமான குளத்தில் அமிழ்த்திக் கொண்டான், உனது நாபியில் இருந்து மெல்லிய கொடி போல  எழும் புகையை தாயே! மக்கள் உனது நாபியில் இருந்து மேலே எழும் ரோம ரேகையாக எண்ணுகிறார்கள். 

Soundarya Lahari 75

தவ ஸ்தந்யம் மந்யே தரணி தர கன்யே ஹ்ருதயத:
பய: பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ
தயாவத்யா தத்தம் த்ரவிட சிசு: ஆஸ்வாத்ய தவ யத்
கவீநாம் ப்ரௌடாநா மஜநி கமநீய: கவயிதா


Oh daughter of the king of mountains!
In my mind, I feel that the milk that flows from Your breast, is really the Goddess of learning - Saraswathi, in the form of a tidal wave of nectar. This is because, the milk given by You - one full of mercy made the Dravida child Thirugnanasambanda a king among those great poets and his works stole one's mind. 


பர்வத ராஜனின் புத்திரியே!
உனது மார்பில் இருந்து வடியும் பாலானது, உண்மையில் கல்விக் கடவுள் சரஸ்வதி அமுதத்தின் அலை கடலாக உருவெடுத்தது போல உள்ளதாக என் மனதில் நான் எண்ணுகிறேன். ஏனென்றால் கருணை மிகுந்த உன்னால் பாலூட்டப்பட்ட திராவிடக் குழந்தையான திருஞானசம்பந்தர், சிறந்த புலவர்களின் மத்தியில் தலைவனாகத் திகழ்ந்து, தனது காவியங்களால் பிறரின் மனதை திருடினார்.

Soundarya Lahari 74

வஹத்யம்ப ஸ்தம்பேரம தநுஜ  கும்ப ப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தா மணிபி: அமலாம் ஹார லதிகாம்
குசாபோகோ பிம்பாதர ருசிபி: அந்த: சபலிதாம்
ப்ரதாப வ்யாமிச்ராம் புரதமயிது: கீர்த்திமிவ தே


Oh my Mother!
In between Your holy breasts, You wear a glittering chain made of pearls which were recovered from inside the head of Gajasura. They reflect the redness of Your lips resembling the bimba fruit and are colored red inside. You wear the chain with fame as if You were wearing the fame of our Lord Shiva who destroyed the three cities.

என் தாயே!
உனது மார்புகளின் இடையில், கஜாசுரனின் தலையின் உள்ளிருந்து மீட்கப்பட்ட முத்துக்களால் ஆன ஒளி வீசும் ஒரு மாலையை அணிந்துள்ளாய். அவை கோவைப் பழம் போலச் சிவந்திருக்கும் உனது இதழ்களின் செம்மையைப் பிரதிபலித்து உள்ளே செம்மையாக இருக்கின்றன. முப்புரிகளையும் எரித்த சிவனின் கீர்த்தியை அணிந்துள்ளதைப் போன்று நீ இந்த மாலையை பெருமையுடன் அணிந்துள்ளாய்.

Soundarya Lahari 73

அமூ தே வக்ஷோஜௌ அம்ருதரஸ மாணிக்ய குதுபௌ
ந ஸந்தேஹ ஸ்பந்தோ நகபதி பதாகே மநஸி ந:
பிபந்தௌ தௌ யஸ்மாத் அவிதித வதூஸங்க ரஸிகௌ
குமாரா வத்யாபி த்விரதவதந க்ரௌஞ்ச தலநௌ



Oh victory flag of the king of mountains!
We don't have any doubt in our mind that Your two divine breasts are the nectar filled pot made of rubies. This is because, the elephant faced Ganesha and Skanda - the one who killed Crownchasura even today does not know the pleasure of women and remains as a young child.

பர்வத ராஜனுக்கு வெற்றிக் கொடியாகத் திகழ்பவளே!
உனது இரு தெய்வீக மார்புகளும் அமுதம் நிரம்பிய மாணிக்கக் கலசமோ என்பதில் எங்களுக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. ஏனென்றால், ஆனை முகன் பிள்ளையாரும், கிரௌஞ்சாசுரனைக் கொன்ற முருகனும் உன் பாலைக் குடித்தால், பெண் சுகம் அறியாமல் பாலகர்களாகவே இருக்கிறார்கள்.

Soundarya Lahari 72

ஸமம் தேவி ஸ்கந்த த்விப வதந பீதம் ஸ்தநயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்நுத முகம்
யதா லோக்ய ஆசங்கா குலித ஹ்ருதயோ ஹாஸ ஜநக:
ஸ்வ கும்பௌ ஹேரம்ப: பரிம்ருசதி ஹஸ்தேந ஜடிதி



Our Goddess Devi!
Let the two cool breasts of Yours which have nipples that always give out milk and are simultaneously drunk deeply by Skanda and elephant faced Ganesha destroy all of our sorrows. Seeing them Ganesha got confused  and He touched His two breasts to check if they were there and this made You and Shiva laugh.

எங்கள் கடவுளான தேவியே!
எப்பொழுதும் பாலைச் சொரியும் முனைகளைக் கொண்டதும், முருகன் மற்றும் ஆனைமுகம் கொண்ட கணபதியால் ஒரே நேரத்தில் அவை அருந்தப்படுவதும் ஆன உனது இரு மார்புகள் எங்களின் எல்லாப் பிணிகளையும் போக்கட்டும். உனது இரு மார்புகளையும் பார்த்தால் சந்தேகத்தில் தனது இரு மார்புகளும் இருக்கின்றதா என தொட்டுப் பார்த்த விநாயகரைக் கண்டு நீயும், சிவனும் சிரித்தீர்கள். 

Soundarya Lahari 71

நகாநாம் உத்யோதை: நவ நலிந ராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதம் உமே
கயாசித் வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல் லக்ஷ்மீ சரண தல லாக்ஷா ரஸ சணம்



Oh Goddess Uma!
Only You can tell us how we can describe the luster of Your hands and the shining of Your nails which teases the redness of a freshly opened lotus. May be if the red lotus mixes with the liquid resin adorning Goddess Lakshmi's feet, some coincidence can be seen.

உமையே!
அப்பொழுது தான் மலர்ந்த தாமரை மலரை பரிகாசம் செய்வது போல உள்ள உனது ஒளி வீசும் கைகளையும், நகங்களையும் உன்னால் மட்டுமே விளக்க முடியும். ஒரு வேளை செந்தாமரை மலரோடு லக்ஷ்மி தேவியின் காலை அலங்கரிக்கும் திரவப் பூச்சையும் கலந்தால் ஓரளவு ஒப்பு நோக்க முடியும்.
  

Tuesday, February 22, 2011

Soundarya Lahari 70

ம்ருணாலீ ம்ருத்வீநாம் தவ புஜ லதாநாம் சதஸ்ருணாம்
சதுர்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜ பவ: ஸ்தௌதி வதனை:
நகேப்ய: ஸந்த்ரஸ்யந் ப்ரதம மதனாத் அந்தக ரிபோ:
சதுர்ணாம் சீர்ஷாணாம் ஸமம் அபய ஹஸ்தார்ப்பண தியா




Brahma - the God born out of lotus is afraid of the nails of Lord Shiva - the one who killed Andhakaasura because it had clipped one of His heads. Hence Brahma praises with His four faces Your four pretty tender hands resembling the lotus flower stalk so that He can ask for protection for His remaining four heads by the use of Your four merciful hands at the same time.


தாமரை மலரில் இருந்து தோன்றிய பிரம்மன், தனது ஒரு தலையை அது கொய்ததால் அந்தகாசுரனைக் கொன்ற சிவனின் நகத்தைக் கண்டு அஞ்சுகிறார். தனது எஞ்சியுள்ள நான்கு தலைகளையும் உனது நான்கு கருணை மிகு கரங்களால் ஒரே சமயத்தில் காப்பாற்ற முடியும் என்று தனது நான்கு முகங்களால் உனது நான்கு அழகான, மெல்லிய, தாமரை மலர் தண்டு போல இருக்கும் கைகளைப் போற்றுகிறார்.

Soundarya Lahari 69

கலே ரேகாஸ் திஸ்ரோ கதி கமக  கீதைக நிபுணே
விவாஹ வ்யா நத்த ப்ரகுண  குண ஸம்க்யா ப்ரதிபுவ:
விராஜந்தே நாநா வித மதுர ராகா கர புவாம்
த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதி நியம ஸீமாந இவ தே


She who is an expert in Gathi, Gamaka and Geetha (3 major parts of Carnatic music)!
The three lucky lines on your neck reminds one of the number of well tied manifold thread tied during your marriage. It also reminds of the place in your beautiful neck, from where the three musical notes of Shadja, Madhyama and Gandhara originated.


கதி, கமகம் மற்றும் கீதத்தில் (கர்நாடக சங்கீதத்தின் 3 பகுதிகள்) பாண்டித்தியம் பெற்றவளே!
உன் கழுத்தில் உள்ள உள்ள மூன்று அதிர்ஷ்ட ரேகைகள் ஒருவனுக்கு உன் திருமணத்தின் போது உன் கழுத்தில் கட்டப்பட்ட மங்கள நாணை நினைவூட்டுகின்றன. சங்கீதத்தின் மூன்று ஸ்ருதிகளான ஷட்ஜ, மத்யம மற்றும் காந்தார ஸ்ருதிகள் உன் அழகிய கழுத்தில் தோன்றிய இடத்தை அவை நினைவுபடுத்துகின்றன. 

Soundarya Lahari 68

புஜாச்லேஷாந் நித்யம் புர தமயிது: கண்டக வதீ
தவ க்ரீவா தத்தே முக கமலநால ச்ரியம் இயம்
ஸ்வத: ச்வேதா காலாகுரு பஹுள ஜம்பால மலிநா
ம்ருணாலீ லாலித்யம் வஹதி யததோ ஹார லதிகா



By the frequent embrace of Your lord who destroyed the three cities, Your neck appears full of thorns always due to the hairs standing out. Your neck looks like the beautiful stalk  of Your lotus like face, with a chain of white pearls worn below, dulled by the incense and myrrh with the sandal paste applied and is like the tender stalk dirtied by the bed of mud.  


முப்புரிகளையும் எரித்த உனது தலைவன் அடிக்கடி உன்னைத் தழுவுவதால், உனது ரோமங்கள் சிலிர்த்து நிற்கின்றன. அதனால் உனது கழுத்து முற்களால் நிறைந்துள்ளதைப் போல உள்ளது. தாமரை போன்ற உனது முகத்திற்கு அழகிய தண்டாகவும், வெண் முத்துக்களால் ஆன ஒரு மாலையை அதன் கீழே அணிந்து, வாசனைத் திரவியங்களால் கருத்த, சந்தனம் தடவிய, மண் சேற்றில் அழுக்காகிய மெல்லிய தண்டைப் போல உனது கழுத்து உள்ளது.

Soundarya Lahari 67

கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹிந கிரிணா வத்ஸலதயா
கிரீசேன உதஸ்தம் முஹூ: அதர பாநாகுல தயா
கர க்ராஹ்யம் சம்போ: முக முகுர வ்ருந்தம் கிரி ஸுதே
கதம் காரம் ப்ரூம: தவ சுபுகம் ஒளபம்ய ரஹிதம்



Oh daughter of the mountains!
How can we describe the beauty of Your chin, which was caressed with affection by the tip of his fingers by Your father Himavaan. Lord of the mountain - Shiva in a hurry to drink deeply from your lips often lifted Your chin which was so fit to be touched by His fingers, which is incomparable and which is like the handle of the mirror of Your face.

மலைகளின் புத்திரியே!
உனது தந்தை ஹிமவானின் விரல் நுனியால் வருடப்பட்ட உனது தாடையின் சௌந்தர்யத்தை நாங்கள் எவ்வாறு வர்ணிப்போம்? மலைகளின் அரசனான சிவன் உனது இதழ்களை ஆழமாகப் பருகும் அவசரத்தில் தன் விரல்களால் தீண்டத் தகுதியுள்ள, ஒப்பில்லாத, கண்ணாடி போன்ற உன் முகத்திற்குக் கைப்பிடி போன்று திகழும் உனது தாடையைப் பல முறை தொட்டுத் தூக்கியுள்ளான். 



Soundarya Lahari 66

விபஞ்ச்யா காயந்தீ விவிதம் அபதாநம் பசுபதே:
த்வயாரப்தே வக்தும் சலித சிரஸா ஸாதுவசநே
ததீயைர் மாதுர்யைர் அபலபித தந்த்ரீ  கல ரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேந நிப்ருதம்


Oh mother of all!
When you start nodding your head muttering sweetly 'Good! Good!' to Goddess Saraswathi who sings the glory of our lord Shiva to You, to the accompaniment of her Veena, Saraswathi mutes the sound of Veena by a covering cloth so that the strings which throw the sweetest music are not put to shame by your voice filled with sweetness.


அனைவருக்கும் தாயே!
சரஸ்வதி தேவி நமது தலைவர் சிவனைப் பற்றித் தனது வீணையோடு பாடும் போது நீ உனது தலையை ஆட்டி 'நல்லது! நல்லது!' என மதுரமான ஓசையை உதிர்க்கின்றாய். மதுரமான இசை மீட்டும் அதன் தந்திகள் உனது குரலின் இனிமையால் வெட்கி விடக் கூடாது என்பதற்காக, சரஸ்வதி அவ்வீணையை ஒரு துணியைக் கொண்டு மூடுகிறாள்.

Soundarya Lahari 65

ரணே ஜித்வா தைத்யாந் அப ஹ்ருத சிர ஸ்த்ரை: கவசிபி:
நிவ்ருத்தை: சண்டாம்ச த்ரிபுரஹர நிர்மால்ய  விமுகை:
விசாகேந்த்ரோபேந்த்ரை: சசி விசத கற்பூர சகலா
விலீயந்தே மாதஸ் தவ வதந தாம்பூல கபலா:


Oh mother of the world!
The Gods Subramanya, Vishnu and Indra after returning from the war with asuras rested, removed their head gear and the iron jackets and worshipped Lord Shiva. They are not interested in the left over of Shiva which belongs to Him and are only swallowing with great enthusiasm the half chewed betel from Your holy mouth which has the camphor as white as the moon.



ஜகத்தின் தாயே!
சுப்பிரமணியர், விஷ்ணு, இந்திரன் போன்ற கடுவுளர்கள் அசுரர்களுடனான போருக்குப் பின்னால் திரும்பி வந்து, ஓய்வெடுத்து, தங்களின் தலைக் கவசத்தையும், இரும்பு உடற் கவசத்தையும் துறந்து சிவனை வணங்குகிறார்கள். சிவனுக்கு உரிமையான, சிவனின் மீந்திய உணவில் அவர்களுக்கு விருப்பம் இல்லாமல், பெரும் உற்சாகத்தோடு உனது வாயினால் உமிழ்ந்த, நிலவைப் போல வெண்மையான சுண்ணாம்பைக் கொண்ட வெற்றிலையை உண்கிறார்கள். 

Soundarya Lahari 64

அவிச்ராந்தம் பத்யுர் குண கண கதா ம்ரேடந ஜபா
ஜபா புஷ்பச் சாயா தவ ஜநநி ஜிஹ்வா ஜயதி ஸா
யத் அக்ராஸீநாயா: ஸ்படிக த்ருஷத் அச்சச் சவி மயீ
ஸரஸ்வத்யா மூர்த்தி: பரிணமிதி மாணிக்ய வபுஷா


My mother!
Your tongue which is well known, without rest chants and repeats the many goods of Your Consort - Lord Shiva and is red like the hibiscus flower. Because of the colour of Your tongue, Goddess of learning - Saraswathi who sits at the tip of Your tongue turns red like a ruby even though She sparkles like a crystal in white.



என் தாயே!
இடைவெளி இல்லாமல் உனது துணையான சிவனின் புகழை ஓதும், அனைவரும் அறிந்த உனது நாவானது, செம்பருத்திப் பூவைப் போன்று சிவந்துள்ளது. வெண்மையில் மாணிக்கத்தைப் போல ஒளி வீசும் உன் நாவின் நுனியில் அமர்ந்திருக்கும் கல்விக் கடவுள் சரஸ்வதி, உனது நாவின் சிவப்பு நிறத்தால் பவளம் போன்று சிவந்து விட்டாள்.

Soundarya Lahari 63

ஸ்மித ஜ்யோத்ஸ்நா ஜாலம் தவ வதந சந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணம் ஆஸீத் அதி ரஸதயா சஞ்சு ஜடிமா
அதஸ் தே சீதாம்சோ: அம்ருத லஹரீம் ஆம்ல ருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிசி நிசி ப்ருசம் காஞ்சிக தியா



The chakora birds are thinking that their tongues have got numbed because of drinking the sweet nectar like light emanating from your moon like face. For a change, during the night they wanted to taste the sour rice gruel and hence started drinking the white rays of the full moon in the sky.


நிலவைப் போன்ற உனது முகத்தில் இருந்து வரும் அமுதமாகிய ஒளியைப் பருகுவதால் தங்களின் நாக்கு மரத்துப் போய் விட்டதாக சகோரப் பறவைகள் எண்ணுகின்றன. ஒரு மாற்றத்திற்காக அவை இரவினில் உப்புள்ள அரிசிக் கஞ்சியைப் பருக எண்ணி, அதனால் வானில் உள்ள பௌர்ணமி நிலவின் வெண்ணிற கதிர்களைப் பருக ஆரம்பித்தன. 

Soundarya Lahari 62

ப்ரக்ருத்யா ரக்தாயாஸ் தவ ஸுததி தந்த ச்சத ருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருச்யம் ஜனயது பலம் வித்ரும  லதா
ந பிம்பம் தத் பிம்ப ப்ரதிபலந ராகாத் அருணிதம்
துலாம் அத்யாரோடும் கதம் இவ விலஜ்ஜேத கலயா


Oh Goddess having beautiful rows of teeth!
I tried to find an equivalent for Your blood red lips and could only imagine the red coral. The fruits of the red cucurbit hangs it's head in shame on being compared to Your lips since it has tried to imitate it's colour from Your lips and knows it has failed miserably in doing this.


அழகிய பல் வரிசையை உடைய தேவியே!
ரத்தச் சிவப்பான உனது இதழ்களுக்கு இணையாக உள்ள ஒன்றை நான் யோசிக்க முயன்றதில், என்னால் செம் பவளத்தையே நினைக்க முடிந்தது. உனது இதழ்களோடு ஒப்பு நோக்கப் பட்டதில் சிவப்பு பூசணிக் காய்கள் அவமானத்தில் தலை குனிந்தன. உனது இதழின் சிவந்த நிறத்தை ஒத்திருக்க நினைத்து அவை தோல்வி அடைந்ததை அக்காய்கள் அறிந்ததால் அவ்வாறு செய்தன.

Soundarya Lahari 61

அஸௌ நாஸா வம்ச: துஹிந கிரிவம்ச த்வஜபடி
த்வதீயோ நேதீய: பலது பலம் அஸ்மாகம் உசிதம்
வஹத்ய அந்தர் முக்தா: சிசிர கர நிச்வாஸ கலிதம்
ஸம்ருத்யா யத் தாஸாம் பஹிர் அபி ஸ முக்தா மணி தர:


Oh Goddess, who is the flag of the clan of the Himalayas!
Let Your nose which is like a thin bamboo give us the appropriate blessings.
Mother! I feel that you are wearing a rare pearl in your left nostril which is brought out by your breath as your nose is a storehouse of divine and rare pearls.


இமய மலை வம்சத்தின் கொடியாகத் திகழ்பவளே!
மெல்லிய மூங்கிலைப் போல உள்ள உனது மூக்கானது எங்களுக்கு உரிய ஆசிகளை  வழங்கட்டும்.
உனது மூக்கானது புனிதமான, அரிய  முத்துக்களின் உறைவிடமாக இருப்பதால், உன் சுவாசக் காற்றால் வெளியான ஒரு அரிய முத்தை நீ உன் இடது மூக்கில் அணிந்துள்ளாயோ என நான் எண்ணுகிறேன்.

Monday, February 14, 2011

Devi Picture 3 - Abiraami


தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சம் இல்லா
இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே  
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக் கண்களே