Thursday, June 9, 2011

Sri Aaditya Hrudaya Stotram 3


21-31 ஸ்லோகங்களை ஒலி வடிவில் கேட்க

21.
தப்த சாமீ கராபாய ஹரயே விஸ்வ கர்மணே
நமஸ்தமோ அபிநிக்நாய ருசயே லோக ஸாக்ஷிணே
தூய தங்கத்தின் ஜொலிப்பைக் கொண்டவரே, அறியாமையை விரட்டுபவரே, ஜகத்தைப் படைத்தவரே, இருட்டை விரட்டுபவரே, மேன்மையின் உறைவிடமே, உலகிற்கே சாட்சி ஆனவரே! உங்களுக்கு வணக்கங்கள்.


22.
நாஷயத்யேஷ வை பூதம் ததேவ ஸ்ருஜதி ப்ரபு:
பாயத்யேஷ தபத்யேஷ வர்ஷத்யேஷ கபஸ்திபி:
ராமா! மேலே சொன்ன கடவுள் மட்டுமே எல்லாவற்றையும் உண்மையில் அழித்தும், படைத்தும், படைத்தவற்றைக் காத்தும் வருகிறார். அவரே தனது கிரணங்கள் மூலம் வெப்பத்தை அளித்து மழையை அனுப்புகிறார்.

23.
ஏஷ ஸுப்தேஷு ஜாகர்தி பூதேஷு பரி நிஷ்ட்டித:                                
ஏஷ ஏவா அக்நிஹோத்ரம் ச பலம் சைவா அக்நிஹோத்ரிணாம்  
எல்லா உயிர்களிலும் வீற்றிருக்கும் அவர், அவர்களை உள்ளிருந்து இயக்குகிறார். அவ் உயிர்கள் உறங்கினாலும், அவர் விழிப்புடன் உள்ளார். அவரே புனித அக்னியில் இடப்படும் அர்க்கியம் ஆகவும் (அக்னிஹோத்ரம்), அச் செயலை செய்வதால், செய்பவர்களுக்கு கிடைக்கும் பலனாகவும் உள்ளார்.

24.
வேதாச்ச க்ருதவச் சைவ க்ரதூநாம் பலமேவ ச 
யாநி க்ருத்யாநி லோகேஷு சர்வ ஏஷ ரவி: ப்ரபு:   
அவரே வேதங்கள் ஆகத் திகழ்கிறார். அவரே தியாகங்கள் ஆகவும், அத் தியாகங்கள் மூலம் கிடைக்கும் பலனாகவும் திகழ்கிறார். எல்லா உயிர் இனங்களிலும் காணப்படும் எல்லாச் செயல்களிலும் சூரியக் கடவுள் ஆன அவரே செயல்படுத்துபவர் ஆக உள்ளார்.

பலஸ்ருதி - பாராயணம் செய்வதால் அடையும் பலன்கள்

25.
ஏனம் ஆபத்ஸு க்ருச்ரேஷு காந்தாரேஷு பயேஷு ச
கீர்தயந் புருஷ: கஷ்சித் ந ஆவஸீ ததி ராகவ
சூரிய பகவானின் மேன்மையை பாடும் எந்த ஒருவரும், எப்படிப்பட்ட பெரும் துயரிலும், வழி தொலைந்தாலும், கஷ்ட காலத்திலும், எந்த துக்கமும் அடைய மாட்டார்கள்.

26.
பூஜயச்வைநம் ஏகாக்ரோ தேவதேவம் ஜகத்பதிம்
ஏதத் த்ரி குணிதம் ஜப்த்வா யுத்தேஷு விஜயிஷ்யஸி
தேவர்களுக்கெல்லாம் தேவராகத் திகழும் ஜகத்தின் அதிபதியை, மனதை ஒருமுகப் படுத்தி வணங்குவதன் மூலம், இம் மந்திரங்களை மூன்று முறை பாராயணம் செய்வதன் மூலம், ஒருவர் யுத்தங்களில் வெல்ல முடியும்.

27.
அஸ்மின் க்ஷணே மஹாபாஹோ ராவணம் த்வம் வதிஷ்யஸி 
ஏவமுக்த்வா ததா (அ)கஸ்த்யோ ஜகாம் ச யதாகதம் 
பலசாலியான ராமா! இந்த நொடியில் உன்னால் ராவணனைக் கொல்ல முடியும். இவ்வாறு சொன்ன அகஸ்த்ய மகரிஷி, தான் வந்த வழியே திரும்பிச் சென்றார்.


28.
ஏதத் ஸ்ருத்வா மஹா தேஜா: நஷ்ட ஷோகோ (அ)பவத் ததா 
தாரயா மாஸ ஸுப்ரீதோ ராகவ: ப்ரியதாத்மவான் 
இந்த அறிவுரையைக் கேட்ட அளவிட முடியாத பலத்தைக் கொண்டவனும், அடங்கிய மனமும் கொண்ட ஸ்ரீ ராமன், தனது மனத் துயர் உடனே நீங்கப் பெற்றான். மிகவும் மகிழ்ச்சி அடைந்த அவன் இந்த ஆதித்ய ஹ்ருதயம் பாராயணத்தை தனது மனதில் இருத்திக் கொண்டான்.


29.
ஆதித்யம் ப்ரேக்ஷ்ய ஜப்த்வா து பரம் ஹர்ஷம் அவாப்தவான் 
த்ரிராசம்ய ஷுசிர் பூத்வா தநுர் ஆதாய வீர்யவான்
பகவத் நாமாவை உச்சரித்து நீரினால் ஆசமனம் செய்த பின்னர் சுத்தி அடைந்து சூரியனை உற்று நோக்கி, இந்த மந்திரத்தை மீண்டும் பாராயணம் செய்து பலசாலியான ஸ்ரீ ராமன், கையில் தனது அம்பை ஏந்தி மிகுந்த சந்தோசமாக உணர்ந்தான். 


30.
ராவணம் ப்ரேக்ஷ்ய ஹ்ருஷ்டாத்மா யுத்தாய ஸமுபாகதம் 
ஸர்வ யத்நேந மஹதா வதே தஸ்ய த்ருதோ(அ)பவத் 

தனது கண்களை ராவணன் மீது செலுத்திய ஸ்ரீ ராமன், மனதில் மகிழ்ச்சியுடன் யுத்த களத்தில் முன்னேறி, ராவணனை வெற்றி கொள்ளும் உறுதியோடு, ஒருமுகப் பட்ட முயற்சியோடு நின்றான். 

31.
அத ரவி ரவதாந்  நிரீக்ஷ்ய ராமம் 
         உதிதமநா: பரமம் ப்ரஹ்ருஷ்யமாண:
நிஷிசர பதி ஸம்க்ஷயம் விதித்வா 
         ஸுரகணம் மத்யகதோ வசஸ் த்வரேதி

ஸ்ரீ ராமன் அவ்வாறு ராவணனை அழிப்பதில் உறுதியோடு, மன சஞ்சலம் ஏதும் இன்றி நிற்பதை மனதில் மகிழ்வோடு நேரில் கண்ட இருட்டைப் போக்கும் சூரிய பகவான், பிற கடவுளர்களின் மத்தியில் நின்று கொண்டு 'ஆகட்டும் சீக்கிரம்' என்று உரைத்தார். 

இதி ஆதித்யஹ்ருதயம் மந்த்ரஸ்ய 

இதுவே ஆதித்ய ஹ்ருதயம் மந்திரம் ஆகும்.












8 comments:

  1. 11 முதல் 20 வரை ஸ்லோகங்கள் இன்னும் தாங்கள் வெளியிடவில்லை என்று நினைக்கிறேன். சரியா?

    ReplyDelete
  2. இல்லையே போட்டிருக்கிறேனே vgk சார்.
    நேற்று ஜூன் 8 போட்டுள்ளேன். தயவு செய்து refresh செய்து கொள்ளவும்.
    http://srinivasgopalan.blogspot.com/2011/06/sri-aaditya-hrudaya-stotram-2.html
    ஒலி வடிவம் சரியாக உள்ளதா என்று கூறவும். ஒரு சோதனை முயற்சி.

    ReplyDelete
  3. 11 முதல் 20 வரை ஸ்லோகங்கள் விளக்கங்களுடனும், ஒலி வடிவுடனும் கொடுத்துள்ளதற்கு, நன்றிகள்.
    இப்போது தான் கவனித்தேன். அதற்குள் அவசரப்பட்டு போன பின்னூட்டம் கொடுத்து விட்டேன்.

    21 முதல் 31 வரை முழுவதுமாக ஸ்லோகங்கள் விளக்கங்களுடனும், ஒலி வடிவுடனும் கொடுத்துள்ளதற்கு, நன்றிகள்.

    ReplyDelete
  4. ஒலி வடிவம் இயங்குகிறதா, கேட்க முடிகிறதா என்று சரிபார்த்து நாளைக்கு சொல்கிறேன். இப்போது நள்ளிரவு நேரம் ஆதலால் தூங்கும் ஒரு சிலருக்கு Disturbance ஆகிவிடும். நன்றி சார்.

    ReplyDelete
  5. நேற்று தாங்கள் வெளியிட்ட பார்ட்-2 என் டேஷ் போர்டில் ஏனோ அப்டேட் ஆகவில்லை. OK Sir,
    No Problem at all now. Thank you Sir.

    ReplyDelete
  6. இந்த மூன்றாவது பகுதியும் நன்கு கேட்க முடிந்தது.
    மிக்க நன்றி.

    ReplyDelete