Friday, April 8, 2011

Soundarya Lahari 100


ப்ரதீப ஜ்வாலாபிர் திவஸ கர நீராஜந விதி:
ஸுதா ஸூதேச் சந்த்ரோ பல ஜலலவைர் அர்க்ய ரசநா
ஸ்வகீயைர் அம்போபி: ஸலில நிதி ஸௌஹித்ய கரணம்
த்வதீயாபிர் வாக்பிஸ் தவ ஜநநி வாசாம் ஸ்துதிர் இயம்


Oh Goddess who is the source of all the words!
This poem which is made of words which You only made is like :
showing camphor lamp to the sun,
offering as ablution to the moon the water got from the moon stone and
offering water worship to the sea.


எல்லா சொற்களுக்கும் ஆதாரம் ஆன தேவியே!
உன்னால் படைக்கப்பட்ட சொற்களைக் கொண்டு தொடுக்கப்பட்ட இப் பாடல்:
சூரியனுக்கே கற்பூர தீப ஆராதனை காட்டுவது போலவும்,
நிலாமணிக் கல்லின் நீரைக் கொண்டு நிலவிற்கே அர்க்கியம் கொடுப்பது போலவும்,
சமுத்திரத்திற்கே ஜல தர்ப்பணம் செய்வது போலவும் உள்ளது.



2 comments:

  1. அற்புதமான ஒரு சத்காரியம் பண்ணி முடிச்சு இருக்கேள் அண்ணா!! 100 ஸ்லோகத்துக்கும் அர்த்தம் எழுதினதுனால உங்களுக்கும் உங்காத்து மாமி & குழந்தேள் எல்லாருக்கும் அந்த புண்ணியம் போய் சேரும். வாழ்த்துக்கள்!..:)

    ReplyDelete
  2. வரணும் தக்குடு,
    சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் அஸ்து:
    ஒரு ஸ்லோகத்தை பாராயணம் பண்ணிட்டு / சந்த்யாவந்தனம் பண்ணிட்டு காயேன வாசா சொல்லிட்டு இதை சொல்றோம் இல்லையா? கிடைச்ச பலனும் கிருஷ்ணனுக்கே சேரட்டும்.

    ReplyDelete