Monday, January 31, 2011

Soundarya Lahari - Overview

For Saakthas (Devi Upaasakas), one of the important composition is Soundarya Lahari. Written and compiled by Adhi Sankara Bhagavathpada, this explains how to create the different yantras and worship them to attain a specific benefit - ideally anything under the sun in this physical world.

Soundarya Lahari means Waves of Beauty. It consists of two parts
Anandha Lahari - the first 41 stanzas meaning Waves of Happiness and
Soundarya Lahari - the next 59 stanzas meaning Waves of Beauty.

The first part of Anandha Lahari is believed to have been composed by Lord Shiva Himself. It is said Lord Shiva had a collection of poems on Paarvathi. When Adhi Sankara Bhagavathpada visited the divine couple in Kailaya, Lord Shiva gifted this verse to Him. Lord Shiva's vehicle - Nandikeshwara (Bull) was also near by. Nandi had a jealous feeling - 'What is this? I'm with the Lord for ever and now a mere mortal came from earth and got gifted with the Divine Verse. I should not let it' and so he tried to snatch the same. Only a part went with him and those were the latter 59 stanzas. Adhi Sankara was dumbstruck. He lamented to the Lord that he lost almost half of the verses. Then Lord Shiva consoled Adhi Sankara that the latter could fill the lost part Himself. When Adhi Sankara was still clueless as to what He could write, Lord Shiva asked Him to describe the Universal Mother Paarvathi from head to toe (keshaadhi paadhantham). So Adhi Sankara wrote the latter 59 verses of Soundarya Lahari following this logic.

There is also a belief that Lord Ganesha etched this Ananda Lahari in the rocks of Mount Meru. Another belief is Adhi Sankara's Guru Sage Goudapaada read this from Mount Meru and taught this to Adhi Sankara and He later filled the remaining 59 stanzas.



Immaterial of the actual source, let us all read this Soundarya Lahari and enjoy endless waves of Happiness. There are many bhaashyas (commentaries) on this Soundarya Lahari in Sanskrit. My attempt here is to split the words for easy reading in Grantha Tamil script and provide a description of each stanza in English and Tamil. I followed the English version of Soundarya Lahari by Shri. P. R. Ramachander for reference. Any omissions if any are mine and please feel free to reach me if you notice the need for any corrections. The credit and copyright of course goes to Lord Shiva and Adhi Sankara.

Soundarya Lahari 41

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்யபரயா
நவாத்மானம் மந்யே நவரஸ மஹா தாண்டவ நடம்
உபாப்யாம் ஏதாப்யாம் உதய விதிம் உத்திச்ய தயயா
ஸநாதாப்யாம் ஜக்ஞே ஜநக ஜநநீமத் ஜகதிதம்


I pray in your holy wheel of Mooladhara to You - who likes to dance
and calls Yourself as Samaya and the Lord - who performs the great
vigorous dance having all the shades of  navarasas. The world has
got You both as it's parents because You in Your mercy wed one
another to recreate the world, as it was destroyed in the great deluge.


நடனமாட ஆசைப்பட்டு,  சமயமாகத் தன்னை அழைத்துக் கொள்ளும் உன்னையும், நவரசத்தின் எல்லா பரிணாமங்களையும் காட்டி சிறந்த, தீவிர நடனம் புரியும் தலைவனையும் மூலாதாரமாகிய புனிதச் சக்கரத்தில் இருத்தி நான் வணங்குகிறேன். பிரளயக் காலத்தில் அழிந்த இவ்வுலகு மீண்டும் உய்வுற உங்களின் கருணையினால் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டீர்கள். அப்படிப்பட்ட  உங்கள் இருவரையும் இவ்வுலகம் பெற்றோராக கொண்டுள்ளது.

Soundarya Lahari 40

தடித்வந்தம் சக்த்யா திமிர பரி பந்தி ஸ்புரணயா
ஸ்புரந் நா நா ரத்னாபரண பரிணத் தேந்த்ர தனுஷம்
தவ ச்யாமம் மேகம் கமபி மணிபூரைக சரணம்
நிஷேவே வர்ஷந்தம் ஹரமிஹிர தப்தம் த்ரிபுவநம்

I bow before that principle,
which is in Your wheel of Manipooraka,
which as Parashakthi shines like the enemy of darkness,
which is with the streak of lightning,
which is with the shining jewels of precious stones of lightning,
which is black as night,
which is burnt by Rudra like the sun of the deluge,
and which cools down the three worlds like a strange cloud.



மணிபூரக சக்கரத்தில் உள்ளதும்,
பராசக்தியாக ஒளி வீசி இருட்டின் எதிரியாகத் திகழ்வதும்,
மின்னலின் கீற்றைப் போல இருப்பதும்,
மின்னலைப் போன்ற ஒளி வீசும் நவரத்தினக் கற்களைக் கொண்ட நகைகளாக இருப்பதும்,
இரவு நேரத்து கருப்பாகவும்,
பிரளய வெள்ளம் சூரியனால் எரிக்கப்பட்டதைப் போல ருத்ரனால் எரிக்கப்பட்டதும்,
மூவுலகையும் ஒரு மாய மேகத்தால் குளிர்விக்கவும் செய்யும் 
அந்த உருவைத் தலை வணங்குகிறேன்.

Soundarya Lahari 39

தவ ஸ்வாதிஷ்டாநே ஹுதவஹம் அதிஷ்டாய நிரதம்
தமீடே ஸம்வர்த்தம் ஜநநி மஹதீம் தாம் ச ஸமயாம்
யதாலோகே லோகாந் தஹதி மஹஸி க்ரோத கலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: சிசிரம் உபசாரம் ரசயதி


Mother! I think and worship of the fire in Your holy wheel of Swadishtana
and the Rudra shining in that fire - which is like the destroying fire of
deluge and You shining in that fire as Samaya. When the angry look of
Rudra burns the world, Your look drenches it in mercy treating it and
cooling it down.


தாயே! புனிதச் சக்கரத்தில் ஸ்வாதிஷ்டானத்தில் இருக்கும் அக்னியை நான் எண்ணிப் பார்த்து வணங்குகிறேன். பிரளய காலத்தின் அழிக்கும் அக்னியைப் போன்று உள்ள அந்த நெருப்பில், சுடர் வீசும் சிவனையும், அந்நெருப்பில் சமயமாக ஒளி வீசும் உன்னையும் நான் நினைவில் கொண்டு வணங்குகிறேன். சிவனின் கோபப் பார்வையால் இவ்வுலகம் எரிந்த போது, உனது பார்வை அதனை கருணையில் நனைத்து அதனை குளிர்வித்தது.

Soundarya Lahari 38

ஸமுந்மீலத் ஸம்வித் கமல மகரந்தைக ரஸிகம்
பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மாநஸசரம்
யதாலாபாத் அஷ்டாதச குணித வித்யாபரிணதி:
யதாதத்தே தோஷாத் குண மகிலம் அத்ப்ய: பய இவ


I pray before the swan couple - who enjoys only the honey from the fully
open lotus flowers of knowledge, swim in the lake which is the mind of
the great ones and ones who can never be described. All the 18 arts
come from them and they can differentiate the good from the bad like
distinguishing milk from water.


ஞானம் என்னும் முற்றும் மலர்ந்த தாமரை மலர்களில் இருந்து தேனை மட்டுமே சுவைக்கும், மகான்கள் மற்றும் வர்ணிக்க இயலாதவர்களின்  மனம் என்னும் ஏரியில் நீந்தும் அன்னப் பறவை தம்பதிகளாகிய அவர்களை  வணங்குகிறேன். எல்லா 18 கலைகளும் அவர்களிடம் இருந்து தான் தோன்றின. பாலில் இருந்து நீரைப் பிரிப்பதைப் போல, அவர்களால் தீயவற்றிலிருந்து நல்லவற்றைப் பிரிக்க முடியும்.

Soundarya Lahari 37

விசுத்தௌ தே சுத்த ஸ்படிக விசதம் வ்யோம ஜநகம்
சிவம்  ஸேவே தேவீமபி சிவஸமாந  வ்யவஸிதாம்
யயோ: காந்த்யா யாந்த்யா: சசிகிரண ஸாரூப்ய ஸரணே:
விதூ தாந்தர் த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதி


I bow before the Shiva - who is of the pure crystal form in your supremely
pure wheel and who creates the principle of ether and before You my
mother - who has the same line of thought as Him.
I bow  before You both - whose moon like light forever removes the
darkness of ignorance from the mind and which shines like the Chakora
bird, playing in the full moon light.


மிகவும் உயரிய புனிதச் சக்கரத்தில், தூய ஸ்படிகக் கல் போன்று இருக்கும், ஆகாய வெளியை படைத்தவரும் ஆன சிவனின் முன்பும், அவனோடு ஒத்த எண்ணங்களைக் கொண்ட தாயே! உன் முன்பும் நான் தலை வணங்குகிறேன். 
மனதில் அறியாமை என்னும்  இருட்டை நிரந்தரமாகப்  போக்கும்
சந்திர ஒளி போன்றும், பௌர்ணமி  நிலவில்  விளையாடும்  சகோரப்  பறவை  போன்றும்  ஒளி வீசும் உங்கள் இருவர் முன்பும் நான் தலை வணங்குகிறேன்.   

Soundarya Lahari 36

தாவாக்ஞா சக்ரஸ்தம் தபந சசி கோடி த்யுதி தரம்
பரம் சம்பும் வந்தே பரிமிளித பார்ச்வம் பரசிதா
யமாராத்யந் பக்த்யா ரவி சசி சுசீநாம் அவிஷயே
நிராலோகே(அ)லோகே நிவஸதி ஹி பாலோக புவநே


The one who worship Parameshwara - having the luster of billions of
moon and sun, living in your Agna chakra in the holy wheel of order,
surrounded by your two forms on either sides would for ever live in
that world where the rays of sun and moon don't enter, has its own
luster, beyond the sight of the eye and is different from the world we
see.


எண்ணற்ற சந்திரன் மற்றும் சூரியனின் ஒளியை உடைய, உனது புனிதச் சக்கரங்களில் ஆக்ன சக்கரத்தில் வசிக்கும், உனது இரு உருவங்களால் இரு புறமும் சூழப்பட்டு இருக்கும் பரமேஸ்வரனை வணங்குபவர்கள் - சூரியன் மற்றும் சந்திரனின் கிரணங்களால் நுழைய முடியாத, தானாகவே ஒளி வீசும், கண் பார்வைக்கும் அப்பால் உள்ள, நாம் பார்க்கும் இவ்வுலகிலிருந்து வேறுபட்டு இருக்கும் அவ்வுலகில் நிரந்தர வாசம் புரிவார்கள்.

Soundarya Lahari 35

மநஸ் த்வம் வ்யோம த்வம் மருத் அஸி மருத் ஸாரதிர் அஸி
த்வ மாப: த்வம் பூமி:த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்
த்வம் ஏவ ஸ்வாத்மாநம் பரிணமயிதும் விச்வ வபுஷா
சிதாநந்தாகாரம் சிவயுவதி பாவேந பிப்ருஷே


Mother! You are the mind, ether, air, fire, water, earth and the universe.
There is nothing except You in the world. But to make believe your
form as the universe, You take the role of Shiva's wife and appears before
us in the form of ethereal happiness.


தாயே! நீ மனம், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் மற்றும் அண்டமாகத் திகழ்கின்றாய். உன்னைத் தவிர வேறொன்றும் உலகில் இல்லை. என்றாலும் அகிலமே நீ தான் என்பதை நம்ப வைப்பதற்காக, நீ சிவனின் மனைவியாக உருவெடுத்து எங்களின் முன்னே தெய்வீகப் பேரானந்தத்தோடு தோன்றுகிறாய்.


Soundarya Lahari 34

சரீரம் த்வம் சம்போ: சசி மிஹிர வக்ஷோருஹ யுகம்
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மானம் அநகம்
அத: சேஷ: சேஷீத்யயம் உபய ஸாதாரண தயா
ஸ்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ பராநந்த பரயோ:


Oh Supreme Goddess!
In my mind's eye, I see your body having sun and moon as it's busts
as the body of Shiva and His body having no equivalent and having 9
surrounding souls as Your body.
This relation of 'Your body to his' and 'His body to Yours' becomes
the one perfect combination of happiness and it becomes equal in
each of You.


உச்சத்தில் இருக்கும் தேவியே!
என் மனக் கண்ணில், சூரியன் மற்றும் சந்திரனை உனது இரு மார்புகளாக உடைய உனது உடல் சிவனின் உடலாகவும், ஈடு இணை இல்லாத, சுற்றிலும் 9 உயிர்களைக் கொண்டதுமாகிய சிவனின் உடல் உனது உடலாகவும் தோன்றுகிறது.
உனது உடலை அவனுடையதாகவும், அவன் உடலை உன்னுடையதாகவும் சம்பந்தப்படுத்திப் பார்ப்பது முழுமையான ஆனந்தத்தை அளித்து, அந்த ஆனந்தம் உங்கள் இருவருள்ளேயும் சமமாகப் பிரிந்து நிற்கின்றது.

Soundarya Lahari 33

ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதயம் இதம் ஆதௌ தவ மனோ:
நிதாயை கே நித்யே நிரவதி மஹா போக ரஸிகா:
பஜந்தி த்வாம் சிந்தாமணி குண நிபத்தாக்ஷ வலயா:
சிவாக்நௌ  ஜூஹ்வந்த: ஸுரபி க்ருத தாராஹூதி சதை:


Oh Omnipresent Mother!
Those who add seed letter "Iim" of the God of love, "Hrim" of Goddess
Bhuvaneshwari and "Srim" of Goddess Lakshmi - forming the three
lettered triad, wearing the garland of the gem of thoughts, offering
oblations several times to the fire with the pure, scented ghee of the holy
cow - kamadhenu and worshipping You in association with Shiva
will realize the essence of the limitless pleasure of the soul.


எங்கும் நிறைந்திருக்கும் தாயே!
காதல் கடவுள் மன்மதனின் மூல எழுத்தான ஈம், தேவி புவனேஸ்வரியின் மூல எழுத்தான ஹ்ரீம் மற்றும் தேவி லக்ஷ்மியின் மூல எழுத்தான  ஸ்ரீம் - இந்த மூன்றையும் கோர்த்து, எண்ணங்களாகிய இரத்தின மாலையை அணிந்து, தெய்வீகக் காமதேனு பசுவின் நறுமணம் கொண்ட தூய,  புனிதமான  நெய்யினால் அக்னிக்கு சமர்பிக்கப்பட்ட பல ஆஹுதிகளும், சிவனோடு இணைந்திருக்கும் உன்னை வணங்குவதும், மனதிற்கு எல்லையில்லா ஆனந்தத்தின் சாரத்தை அளிக்கும்.



Soundarya Lahari 32

சிவ: சக்தி: காம: க்ஷிதிர் அத ரவிச் சீத கிரண:
ஸ்மரோ ஹம்ஸச் சக்ர: ததனு ச பரா மார ஹரய:
அமீ ஹ்ருல்லேகாபி: திஸ்ருபி: அவஸானேஷு கடிதா:
பஜந்தே வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்


She is the mother of us all.
The seed letter "ka" of my lord Shiva,
The seed letter "aa" of Goddess Shakthi,
The seed letter "ee"of the God of Love - Manmadha,
The seed letter "la"of earth,
The seed letter "ha"of the Sun God,
The seed letter "sa" of the moon with cool rays,
The seed letter "ka"of again the God of love,
The seed letter "ha" of the sky,
The seed letter "la" of Indra,the king of devas,
the seed letter "sa"of Para,
The seed letter "ka" of the God of love,
the sees letter "la"of the lord Vishnu,
Along with Your seed letters "Hrim",
which joins at the end of each of the 3 holy wheels, become the holy word to worship You.

This shloka indirectly gives the most holy Pancha-dasa-akshari  (5+10 = 15 lettered) mantra consisting of 3 parts
ka-aa-ee-la-hrim at the end of the Vagbhava koota,
ha-sa-ka-ha-la-hrim at the end of Kamaraja koota and
sa-ka-la-hrim at the end of Shakthi koota.
These 3 parts are called as Vahni Kundalini, Surya Kundalini and Soma Kundalini respectively.


நம் அனைவருக்கும் தாயானவள் அவள்.
கா என்ற எம் தலைவன் சிவனின் ஆதார எழுத்தும்,
ஆ என்ற தேவி சக்தியின் ஆதார எழுத்தும்,
ஈ என்ற காதல் கடவுள் மன்மதனின் ஆதார எழுத்தும்,
லா என்ற பூமியின் ஆதார எழுத்தும்,
ஹா என்ற  சூரியக் கடவுளின் ஆதார எழுத்தும்,
சா என்ற குளிர் கிரணங்களை உடைய நிலவின் ஆதார எழுத்தும்,
கா என்று மீண்டும் காதல் கடவுள் மன்மதனின் ஆதார எழுத்தும்,
ஹா என்ற ஆகாயத்தின் ஆதார எழுத்தும்,
லா என்ற தேவர்களின் தலைவன் இந்திரனின் ஆதார எழுத்தும்,
சா என்ற பரனின் ஆதார எழுத்தும்,
கா என்ற காதல் கடவுள் மன்மதனின் ஆதார எழுத்தும்,
லா என்ற எம்பெருமான் விஷ்ணுவின் ஆதார எழுத்தும்
உனது ஆதார எழுத்தான ஹ்ரீம் என்பதோடு சேர்ந்து,
மூன்று புனிதச் சக்கரங்கள்   ஒவ்வொன்றின் இறுதியிலும் இணைந்து உன்னை வணங்குவதற்குரிய புனிதச் சொல்லாக ஆகியது.

இந்த ஸ்லோகம் பஞ்சாதசஅக்ஷரி ( பஞ்ச-தச-அக்ஷரி) என்ற 15  அக்ஷர மந்திரத்தைக் குறிக்கின்றது.  இம்மந்திரமானது
கா-ஆ-ஈ-லா-ஹ்ரீம் என்று வாக்பவ கூடத்தின் இறுதியிலும்,
ஹா-சா-கா-ஹா-லா-ஹ்ரீம் என்று காமராஜ கூடத்தின் இறுதியிலும்,
சா-கா-லா-ஹ்ரீம் என்று சக்தி கூடத்தின் இறுதிப்  பகுதியிலும்  உள்ளது.
இப் பகுதிகள் முறையே வஹ்னி குண்டலினி, சூர்ய குண்டலினி மற்றும் சோம குண்டலினி என்று அழைக்கப்படுகின்றன.

Soundarya Lahari 31

சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகலம் அதிஸந்தாய புவனம்
ஸ்திதஸ் தத் தத் ஸித்தி ப்ரஸவ பரதந்த்ரை: பசுபதி:
புன: த்வந்  நிர்பந்தாத் அகில புருஷார்த்தைக கடனா
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதி தலம் அவாதீதர திதம்


Pasupathi - the Lord of all souls created the 64 thantras each of which
led to only one desired power and He started His relaxation. But Mother!
You goaded him to create your thantra called Srividya in this mortal world
that grants to the devotee all powers that gave energies over all the states
in life.


உலகில் உள்ள எல்லா ஆத்மாக்களின் தலைவனான பசுபதி,
64 தந்திராக்களைப்   படைத்து, அவை எல்லாம் ஒரே ஒரு
விருப்பப்பட்ட சக்தியை அளிக்கவல்லதாக்கி   அவன்
ஓய்வெடுக்கத் துவங்கினான். ஆனால் தாயே! உனது
தந்திராவான   ஸ்ரீவித்யாவை - பக்தர்களுக்கு வாழ்வின்
அனைத்து நிலைகளிலும் எல்லாச் சக்தியும், ஊட்டமும்
அளிப்பதை, அழிய வல்ல இவ்வுலகில் படைக்குமாறு
அவனை ஊக்கப்படுத்தினாய்.

Sunday, January 30, 2011

Devi Picture 2 - Raja Rajeshwari



 ஸ்ரீ சக்ர ராஜ சிம்ஹாசனேஸ்வரி  
ஸ்ரீ லலிதாம்பிகையே புவனேஸ்வரி

ஆகம வேத கலா மய ரூபிணி,
அகில சராசர ஜனனி நாராயணி ,
நாக கங்கண நடராஜ மனோஹரி
ஞான வித்யேஸ்வரி, ராஜ ராஜேஸ்வரி!

Soundarya Lahari 30

ஸ்வதேஹோத்பூதாபி: க்ருணிபி: அணிமாத்யாபி: அபித:
நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:
கிமாச்சர்யம் தஸ்ய த்ரி நயன ஸம்ருத்திம்  த்ருணயதோ
மஹா ஸம்வர்தாக்னி: விரசயதி நீராஜன விதிம்


You are of the form of rays, surrounded on all four sides by powerful
angels called Anima. Oh Mother - the one who does not  have a begining
and an end and the one who is most suitable for serving! It is not
surprising to know that the destroying fire of the deluge shows worshipful
Harathi to the one who always considers You as his soul and considers
the three eyed God's wealth as worthless and equivalent to dried grass.


அணிமா என்ற சக்திவாய்ந்த தேவதைகளால் நாலா புறமும்
சூழப்பட்டுள்ள நீ, கிரணங்களின் வடிவில் உள்ளாய். ஆதியும்,
அந்தமும் இல்லாதவளும், போற்றுதற்கு உரியவளுமான
தாயே! உன்னைத்  தன் நெஞ்சில் கொண்டுள்ளவர்களுக்கு, முக்கண்ணனின் செல்வத்தை மதிப்பற்றதாகவும், தர்ப்பைக்கு சமானமாகவும் எண்ணுபவர்களுக்கு பிரளயத்தின் அழிக்கும்
தீயானது வணக்கத்திற்குரிய தீப ஆராதனை செய்வதில் என்ன
ஆச்சர்யம் இருக்க முடியும்?

Soundarya Lahari 29

கிரீடம் வைரிஞ்சம் பரிஹர புர: கைடப பித:
கடோரே கோடீரே ஸ்கலஸி ஜஹி ஜம்பாரி மகுடம்
ப்ரணம்ரேஷ்வேதேஷு ப்ரஸப முபயா தஸ்ய பவனம்
பவஸ்யாப்யுத்தானே தவ பரிஜனோக்தி: விஜயதே


When You get up hurriedly and rush to receive Your Lord coming to your
place, Your divine escorts shout with concern at You -  'Avoid the crown
of Brahma', 'You may hit your feet at the heavy crown of Vishnu - the one
who killed the evil Kaidaba' and 'Avoid the crown of Indra.' 


உனது தலைவன் வரும் போது, நீ அவசரமாக எழுந்து அவனை வரவேற்க விரைகிறாய். அப்பொழுது 'பிரமனின் கிரீடத்தில் இருந்து விலகுங்கள்', 'கொடுங்கோலன் கைடபனைக் கொன்ற விஷ்ணுவின் எடை மிகுந்த கிரீடம், உங்கள் காலில் பட்டு விடும்', 'இந்திரனின் கிரீடத்தில் இருந்து விலகி இருங்கள்' என்று உனது புனித சேவகர்கள் கவலையினால் உன்னை எச்சரிக்கிறார்கள்.

Soundarya Lahari 28

ஸூதாம் அபி ஆஸ்வாத்ய ப்ரதிபய ஜரா ம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதி சதமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம்  கபலிதவத: கால கலநா
ந சம்போ: தந் மூலம் தவ ஜநநி  தாடங்க மஹிமா

Oh my Mother!
Gods like Indra and Brahma, who have drunk too much of divine nectar - 
the one that removes the evil of aging and death do have an end and
disappear. But Your consort Shambu (Shiva) who swallowed the strong
poison will never die because of the greatness of your ear studs.

தாயே!
மூப்படைதல் மற்றும் மரணமடைதல் என்ற இரு கொடுமைகளையும் நீக்கவல்ல புனிதமான அமுதைப் பருகிய இந்திரன் மற்றும் பிரம்மா போன்ற கடவுளர்களுக்கும், இறுதி முடிவு வந்து மறைவார்கள்.  ஆனால் உனது துணையான சாம்பு என்கிற சிவன், உனது காதணியின் மகிமையால் ஆல கால விஷத்தை அருந்தியும் மரணம் அடைய மாட்டான்.

Soundarya Lahari 27

ஜபோ ஜல்ப: சில்பம் ஸகலம் அபி முத்ரா விரசநா
கதி: பராதக்ஷிண்ய க்ரமணம் அசநாத்யாஹுதிவிதி:
ப்ரணாம: ஸம்வேச: ஸூகம் அகிலம் ஆத்மார்ப்பண த்ருசா
ஸபர்யா பர்யாயஸ் தவ பவது யந் மே விலஸிதம்

  • Let all the utterances I do in my soul during any ritual become a chanting of Your name.
  • Let all my movements become Your Mudhras.
  • Let my travel becomes the perambulations around You.
  • Let my act of eating and drinking become a fire sacrifice to You.
  • Let my act of sleeping becomes salutations to You, and
  • Let all my actions of pleasure becomes part of Your worship.

  • நான் எல்லாக் காரியத்திலும், எனது மனதில் உச்சரிக்கும் எந்த ஒரு வார்த்தையும், உனது பெயரின் உச்சரிப்பாக இருக்கட்டும்.
  • எனது எல்லா அசைவுகளும், உனது அபிநயங்களாகட்டும் .
  • எனது பயணங்கள், உன்னைக் சுற்றும் பிரதக்ஷணம் ஆகட்டும்.
  • உண்பது, அருந்துவது போன்ற எனது செயல்கள், உனக்குச் செய்யப்படும் அக்னி அர்ப்பணம்  (ஆஹுதி) ஆகட்டும்.
  • எனது தூக்கம் என்ற செயலானது, உன்னை வாழ்த்தும் வாழத்தாகட்டும்.
  • எனது எல்லாக்  களி செயல்களும், உனக்கு செய்யப்படும் வணக்கத்தின் ஒரு பகுதி ஆகட்டும்.

Soundarya Lahari 26

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிர் ஆப்நோதி விரதிம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரி மாஹேந்த்ரீ விததிர் அபி ஸம்மீலித த்ருசா
மஹா ஸம்ஹாரே(அ)ஸ்மின் விஹரதி ஸதி த்வத் பதிரஸௌ


During the deluge, creator - Brahma, Vishnu, God of death - Yama,
Lord of wealth - Kubera, Indra reach their end and close their eyes
one after another for a wakeless sleep. But You my pure mother at
that time will be playing with your consort - Sadashiva.

   
பிரளய காலத்தில், படைக்கும் கடவுள் பிரம்மா, விஷ்ணு,
காலன் ஆகிய யமன், செல்வத்தின் அதிபதி குபேரன் மற்றும் 
இந்திரன் தங்கள் இறுதிக் காலத்தை அடைந்து,
ஒவ்வொருவராக மீளாத் தூக்கத்திற்காகத் தங்கள் இமைகளை மூடிக் கொள்வார்கள். ஆனால், அச்சமயத்தில்
பவித்ரமான தாயாகிய நீ உனது துணையான சிவனோடு
விளையாடிக் கொண்டிருப்பாய். (மற்றவர்களுக்கெல்லாம்
இறுதிக் காலம் என்ற ஒன்று உண்டு. அனால் உனக்கும்,
சிவனுக்கும் அப்படி ஒன்று இல்லை).

Sunday, January 23, 2011

Temples of North America - Introduction

I am thinking about writing a series on the Hindu Temples of North America aiming to cover the temples in US and Canada. To cover wider audience let me stick to English and may resort to Sanskrit / Tamil where needed if I feel English cannot do justice for the context.
With the spurt in immigration from India to other countries, people try to preserve the culture in the new home by trying to mingle with the people of  the same culture socially and pass on the values back home to the next generation by teaching them the same. An easy way of achieving this is by temples. A temple with the presiding deity of their native land is built by these immigrants and they have a sentimental and pshycological feeling that they are close to their native land.
The path to these temple's constructions wouldnot have been smooth - from monetary constraints to bureaucratic hurdles and local resident's opposition.
Money is the major constraint. This is where the believer's society pitches in for the initial efforts of building the temple and for the upkeep afterwards. Certain contributions could be tax deductible and that could be an inducement for donations.
The next is the bureaucratic hurdles and local resident's opposition. America has a concept called Zoning Law whereby if  a new development comes in an area, it has to be consistent with the area's charecteristic. You cannot bring a business complex in a residential community because it will lead to increase in vehicular traffic causing more commotion and noise pollution in the area. The same gets applicable for building a new temple too. When a plan is conceived for starting a new temple, a local resident's meeting of the area is organized and the residents can veto the project if they have the numbers. Also in addition to building the numbers for support, it is essential to keep the local government in the good books by inviting them to the functions conducted in the temple etc. A lobbying group has to be built for this relationship exercise.
All the existing temples now in North America would have gone through this and are now running offering spiritual solace to the visiting believers. Most of the temples also have  a Community hall to provide platform for devotional, music and dance classes and also a place for concerts of visiting talents  from India and within the country. All the major religious festivals of Hinduism are conducted aplomb based upon the North American calendar (Panchangam in Tamil). This is because the sunrise and sunset times differ between India and North America and may cause the auspicious time of the festival to come the same day or the previous/next day. Some are even conduted the nearby weekend to enable working people to attend the same.
I hope this would be of interest to you. My point in this exercise is - Not everything in western world is fashionable or ultra-modern and there are certain things that are followed devotedly even after leaving the Indian shores.

Soundarya Lahari 25

த்ரயாணாம் தேவாநாம் த்ரி குண ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா                    
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணி பீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வந் முகுலித கரோத்தம்ஸ மகுடா:

Oh consort of Shiva!
The worship done at the base of Your feet is the worship done to the holy
Trinity, who were born based on Your properties. This is verily true
oh Mother because the Trinity always stand with folded hands kept on
their crown, near the jeweled plank carrying Your feet.

சிவனின் துணையே!
உனது காலடியில் செய்யப்பட்ட வழிபாடு, உனது குணங்களால்
தோன்றிய புனிதமான மும்முர்த்திகளுக்குச் செய்யப்பட்ட
வழிபாடாகும். இது முற்றிலும் உண்மை தாயே. ஏனென்றால்,
உன் திருவடிகளைத் தாங்கிய, நகைகளால் அலங்கரிக்கப்பட்ட  பதாகையின் அருகே தங்கள் கிரீடத்தின் மேல் (தலைக்கு மேலே)
குவித்தக் கரங்களோடு நிற்கின்றார்கள்.  

Soundarya Lahari 24

ஜகத்ஸூதே தாதா ஹரிர் அவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வன் ஏதத் ஸ்வம் அபி வபுரீச ஸ்திரயதி         
ஸதா பூர்வ: ஸர்வம் தத் இதம் அனு க்ருஹ்ணாதி ச சிவ:
தவாக்ஞாம் ஆலம்ப்ய க்ஷண சலிதயோ: ப்ரூ லதிகயோ:

Brahma creates the world, Vishnu looks after it and Shiva destroys it.
Easwara makes them and himself disappear. Shiva blesses them all by
your order, given to him through a momentary move of your eyebrows.

பிரம்மா இவ்வுலகைப் படைக்கின்றான், விஷ்ணு இதனைக்
காக்கின்றான், சிவன் இதனை அழிக்கின்றான். ஈஸ்வரன்
அவர்களையும் தன்னையும் மறைய  வைக்கின்றான். உனது
புருவங்களின் சிறு அசைவின் மூலம் கொடுக்கப்பட்ட
ஆணையினால் சிவன் அவர்களுக்கு அருள் புரிகின்றான்.

Soundarya Lahari 23

த்வயா ஹ்ருத்வா வாமம் வபுர் அபரித்ருப்தேந மனஸா
சரீரார்த்தம் சம்போ: அபரம் அபி சங்கே ஹ்ருதம் அபூத்
யத் ஏதத் த்வத்ரூபம் சகலம் அருணாபம் த்ரிநயனம்      
குசாப்யாம் ஆநம்ரம் குடில சசி சூடால மகுடம்

Your form in my mind is -
in the red colour like that of a rising sun,
adorned with three eyes,
having two heavy busts,
slightly bent wearing a crown with a crescent moon
arises a doubt in me that you were not satisfied by half
the body given by Shiva and You occupied all of His body.

உதிக்கின்ற சூரியனைப் போன்று சிவந்த நிறத்திலும்,
முக்கண்களால் அலங்கரிக்கப்பட்டதும், கனமான இரு மார்புகளை உடையதும்,
சற்றே வளைந்து இருப்பதும்,
பிறைச் சந்திரனைக் கொண்ட கிரீடத்தை அணிந்துள்ளதுமான
என் மனதில் உள்ள உன் உருவமானது , சிவன் உனக்கு அளித்த
பாதி உடலால் திருப்தி அடையாமல் அவனின் முழு உடலையும் அடைந்தாயோ என்னும் சந்தேகத்தை என்னுள்  எழுப்புகின்றது.

Soundarya Lahari 22

பவானி த்வம் தாஸே மயி விதர த்ரிஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வம் இதி ய:       
ததைவ த்வம் தஸ்மை திசஸி  நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த ப்ரஹ்மேந்த்ர  ஸ்புட மகுட நீராஜித பதாம்

If anyone has a wish in his mind to pray - 'Oh Bhavani! my mother!
please shower on me a part of your merciful look', then even before
he says 'Oh Bhavani!' You, my Goddess gives him the water falling
from the crowns of  Mukundha, Shiva and Brahma at your feet and
grants him the eternal life in your world.

யாருடைய மனதிலாவது -  ' பவானி!  என் தாயே! உன் கருணா
பார்வையை என் மேல் தயவு செய்து பொழிய வேண்டும்' என வேண்ட நினைத்தால், அவர்கள்  பவானி என்று சொல்லும்
முன்பே என் கடவுளான நீ, முகுந்தன், சிவன் மற்றும்
பிரமன்னின் தலைக் கிரீடத்தில் இருந்து உன் திருவடிகளில்
விழும் நீரினை அளித்து, அவர்களுக்கு உன் உலகில் நிலையான
வாழ்வினை அளிக்கின்றாய்.

Soundarya Lahari 21

தடில் லேகா தன்வீம் தபன சசி வைச்வா நர மயீம்
நிஷண்ணாம் ஷண்ணாம் அப்ய உபரி கமலானாம் தவகலாம்
ஹா பத்மா டவ்யாம் ம்ருதித மல மாயேந மனஸா   
மஹாந்த: பச்யந்த: தததி பரமாநந்த லஹரீம்

Those great souls, who have removed all of the mind's dirt enjoy waves
after waves of supreme happiness when they medidate within their mind
on You- who is of the form of sun and moon, living in the lotus forest
and above the six wheels of lotus.

சூரிய, சந்திர வடிவோடு தாமரை வனத்தில் வசிக்கும்,
தாமரையின் ஆறு சக்கரங்களின் மேலே உள்ள உன்னைத்
தங்கள் மனதில் தியானிக்கும் போது, பரமானந்தத்தின்
அலைகளை ஒவ்வொன்றாக தங்கள் மன அழுக்கை நீக்கிய
சிறந்த ஆத்மாக்கள்  அனுபவிக்கிறார்கள்.

Soundarya Lahari 20

கிரந்தீம் அங்கேப்ய: கிரண நிகுரும்பாம்ருத ரஸம்
ஹ்ருதி  த்வாம் ஆதத்தே ஹிம கர சிலா மூர்த்திம் இவ ய:
ஸ ஸர்ப்பாணாம்  தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ
ஜ்வர ப்லுஷ்டான் த்ரிஷ்ட்யா ஸுகயதி ஸுதா தார ஸிரயா

He who medidates on You - showering nectar from all of your limbs and in
the form resembling a statue carved out of moonstone can put an end to
the snake's pride with a single stare and cure the ones having fever with
his nectar like vision.

அங்கங்களில் இருந்து அமுதைப் பொழிபவளும்,
முத்துச்சிலை போன்ற உருவைக் கொண்டவளும்
ஆன உன்னைக் குறித்துத் தியானிப்பவர்கள், ஒரே
பார்வையால் பாம்பின் ஆணவத்தை அடக்கவும்,
காய்ச்சலில் உள்ளவர்களை தனது அமுதப் பார்வையால் 
குணப்படுத்தவும் முடியும்.

Saturday, January 22, 2011

Soundarya Lahari 19

முகம் பிந்தும் க்ருத்வா குச யுகம் அதஸ்தஸ்ய தத த:
ஹரார்த்தம் த்யாயேத்யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்
ஸ ஸத்ய: ஸம்க்ஷோபம் நயதி வநிதா இத்யதி லகு
த்ரிலோகீ மப்யாசு ப்ரமயதி ரவீந்து  ஸ்தன யுகாம்

Oh Mother - Goddess of all Universe!
He who meditates on You as the crescent of love of our great Lord on the
centre of the holy wheel with your two busts just below and you as the half
of our Lord Shiva not only creates waves of emotion in ladies, but also
charms the world which has moon and sun as its busts.

ஜகத்தின் தாயே! எம் தலைவர் சிவனுடைய காதலின்
உச்சமாகத் திகழ்பவளும், புனிதச் சக்கரத்தின் நடுவில்
திகழ்பவளும், உன் இரு மார்புகளை கீழே உடையவளும்,
சிவனின் பாதியாக விளங்குபவளும் ஆன உன்னைத்
தியானிப்பவர்கள், பெண்களின் மனதில் அதிர்வலைகளை
எழுப்புவதோடு, சூரியன் மற்றும் சந்திரனை ஆதாரமாகக்
கொண்ட இவ்உலகையும் மயக்குவார்கள்.

Soundarya Lahari 18

தனுச்சாயாபி ஸ்தே தருண தரணி ஸ்ரீஸரணிபி:
திவம் ஸர்வாம் உர்வீம் அருணி ம நி மக்னாம் ஸ்மரதி ய:  
பவந்த்யஸ்ய  த்ரஸ்ய த்வன ஹரிண  சாலீன நயனா:
ஹோர்வச்யா வச்யா: கதிகதி ந கீர்வாண கணிகா:

He, who medidates on the luster of your beautiful body, which is blessed
by the rising sun and which dissolves the sky and the world in light purple
hue, makes celestial women having eyes like that of a wild startled deer,
follow him like slaves.



ஒளி வீசும் உனது அழகிய வதனமானது உதிக்கின்ற சூரியனால்
வாழ்த்தப்பட்டதும், ஆகாயத்தையும், உலகையும் மெல்லிய செந்
நிறத்தில் கரைக்க வல்லதுமாகும். இவ் வதனத்தைக் குறித்து தவம்
இருப்பவர்களை, மான் போன்ற மருண்ட விழிகளைக் கொண்ட
ஊர்வசி போன்ற தேவ கன்னியர்கள் அடிமைகள் போல பின்
தொடர்வார்கள்.

Soundarya Lahari 17

ஸவித்ரீபிர் வாசாம் சசி மணி சிலா பங்க ருசிபி:
வசின்யா த்யாபி: த்வாம் ஸஹ ஜனனி ஸஞ்சிந்தயதி ய:     
ஸ கர்த்தா காவ்யானாம் பவதி மஹதாம் பங்கி ருசிபி:
வசோபி: வாக்தேவீ வதன கமலா மோத மதுரை:

Oh, holy mother!
He who worships You - the one who has the great luster got by breaking
the moon stone along with Goddess Vasini - who is the principal source
of words,  becomes the author of great epics which shine like those
written by great people and have the sweet odour of the face of the
Goddess of knowledge -Vidhya.

தாயே! நிலவைப் பிளந்ததைப் போன்று ஒளி வீசும் உன்னையும்,
நாவன்மைக்கு அதிபதியான வசினி தேவியையும் வணங்குபவர்கள், 
மேன்மக்களால் இயற்றப்பட்ட சிறந்த காவியங்களைப் போன்று, ஒளி 
வீசும் கல்விக் கடவுள் சரஸ்வதியின் முகத்தைப் போன்று சுகந்த 
மணம் வீசும் காவியங்களைப் படைப்பார்கள்.


  

Soundarya Lahari 16

கவீந்த்ராணாம் சேத: கமல வந பாலாதப ருசிம்             
பஜந்தே யே ந்த: கதிசித் அருணா மேவ பவதீம்          
விரிஞ்சி பிரேயஸ்யா: தருணதர ச்ருங்கார லஹரீ
கபீராபி: வாக்பி: விதததி ஸதாம் ரஞ்ஜநமமீ

To the lotus forest like mind of the kings of poets of the world, She is like
an early morning purple hue. Because of this, She is called ARUNA - the
purple coloured one. She creates happiness in the holy people's minds
with a tender and passionate wave of words of Saraswathi - Brahma's
consort and these words are royal and youthful.

தாமரை வனம் போன்ற மனதினை உடைய உலகின்
புலவர்கள் இடையே சிறந்தவர்களுக்கு, அவள் ஒரு
அதிகாலை நேரத்து ஊதா நிறத்தவளாக இருக்கின்றாள்.
இதனால் தான் அவளை அருணா - சிவப்பு நிறத்தவள்
என்கிறோம். புனிதர்களின் மனதில் அன்பான, கருணையான வார்த்தைகளின் அலைகளால் ஆனந்தத்தை அளிக்கின்றாள்.
பிரம்மாவின் துணை சரஸ்வதியின் இவ் வார்த்தைகள்
ராஜ கம்பீரத்தோடும், யௌவனத்தோடும் உள்ளன.

Devi Picture 1 - Karpagambal




கற்பக வல்லி நின் பொற்பதங்கள் பிடித்தேன்
நற்கதி அருள்வாய் அம்மா - தேவீ
பற்பலரும் போற்றும் பதி மயிலாபுரியில் 
சிற்பம் நிறைந்த உயர் சிங்கார கோயில் கொண்டாய்


Soundarya Lahari 15

சரத் ஜ்யோத்ஸ்னா சுத்தாம் சசி யுத ஜடா ஜூட மகுடாம்
வர த்ராஸ த்ராண ஸ்படிக கடிகா புஸ்தக கராம்                    
ஸக்ருந் ந த்வா நத்வா கதம் இவ ஸதாம் ஸந்நிதததே              
மது க்ஷீர த்ராக்ஷா மதுரிம துரீணா: பணிதய: 

Your face is like the white autumn moon. Your head has a crown with the crescent
moon and flowing hair. Your hands which shower boons and give protection holds 
the crystal chain of beads and books. A devotee who once medidates on You can
have only those thoughts that are sweetest words rivaling the honey, milk and
grapes.

உனது முகம் வெண்மையான, குளிர்ந்த நிலவைப் போன்று உள்ளது.
உனது சிரத்தில் பிறைச் சந்திரனை உடைய கிரீடமும், அலை
கூந்தலும் உள்ளது. அபய ஹஸ்தம் வழங்கும் உனது கரத்தில் 
மணி மாலையும், புத்தகங்களும் உள்ளது. உன்னை வணங்கும் 
பக்தனின் எண்ணங்களில் தேன், பால் மற்றும் திராட்சையை   ஒத்த       
இனிய சொற்களே இடம் பெற்று இருக்கும்.
                      

Sunday, January 16, 2011

Soundarya Lahari 14

க்ஷிதௌ ஷட் பஞ்சாசத் த்வி ஸமதிக பஞ்சாச துதகே
ஹுதாசே த்வா ஷஷ்டி: சதுர் அதிக பஞ்சாசத் அநிலே
திவி த்விஷ் ஷட்த்ரிம்சத் மனஸி சசது: ஷஷ்டிர் இதி யே               
மயூகா: தேஷாம் அப்யுபரி தவ பாதாம்புஜ யுகம்

Mother! the two feets of yours are far above the
56 rays of the essence of earth of Mooladhara
52 rays of the essence of water of Manipooraka
62 rays of the essence of fire of Swadhistana
54 rays of the essence of air of Anahatha
72 rays of the essence of ether of Vishuddhi and
64 rays if the essence of mind of Agna Chakra.

56 கோணங்கள் கொண்ட பூமியின் சாரமான மூலாதாரம் 
52 கோணங்கள் கொண்ட நீரின் சாரமான மணிபூரகம்
62 கோணங்கள் கொண்ட அக்னியின் சாரமான ஷ்வாதிச்டானம்  
54 கோணங்கள் கொண்ட காற்றின் சாரமான அனாஹதம்
72 கோணங்கள் கொண்ட ஆகாயத்தின் சாரமான விஷுத்தி
64 கோணங்கள் கொண்ட மனதின் சாரமான ஆக்னா சக்ரம்
இவற்றை விட உனது இரு திருவடிகள்  மிக உயர்வில் உள்ளன.

Saturday, January 15, 2011

Soundarya Lahari 13

நரம் வர்ஷீயாம்ஸம் நயன விரஸம் நர்மஸு ஜடம் 
தவா (அ)பாங்கா லோகே பதிதம் அனுதாவந்தி சதச:               
கள த்வேணீ பந்தா: குச கலச  விஸ்ரஸ்த  ஸிசயா      
ஹடாத்  த்ருட்யத் காஞ்ச்ய:  விகளித துகூலா: யுவ தய:            

Hundreds of young women with disheveled hair, upper clothes slipping
away from their chests, the lock of the golden belt getting open due to
the hurry and with sarees slipping away from their shoulders run after
the men who got your sidelong glance even though they are old, bad
looking and not interested in love sports.

உனது கடைக்கண் பார்வை கிடைத்தது என்ற ஒரே
காரணத்தால், அப்பார்வை கிடைத்த ஆண்களின்
பின்னால் - அவர்கள் வயது  முதிர்ந்தவர்களாகவோ, 
அழகற்றவர்களாகவோ,  காதல்  விளையாட்டில்  ஈடுபாடு 
இல்லாதவர்களாகவோ இருந்தும், அவர்களின் பின்னால்
நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் கலைந்த தலை,
மாரிலிருந்து விலகும் மேலாடை, அவசரத்தினால் கழன்று
கொண்ட அவர்களின் ஒட்டியாணம், தோளில் இருந்து
விழும் சேலைத் தலைப்பு - இவற்றை கண்டு கொள்ளாமல் 
ஓடுகிறார்கள்.

Soundarya Lahari 12

த்வதீயம் ஸௌந்தர்யம் துஹின கிரி கன்யே துலயிதும்
கவீந்த்ரா: கல்பந்தே கதம் அபி விரிஞ்சி ப்ரப்ருதய:    
யதாலோகௌத்ஸுக்யாத் அமர லலனா  யாந்தி மனஸா
தபோபி: துஷ்ப்ராபாம் அபி கிரிச ஸாயுஜ்ய  பதவீம்

Oh daughter of the ice mountain! even the creator who leads an array
of great poets fails to describe your sublime beauty. The pretty, heavenly
maidens wishing to see your pure loveliness, try to see you through the
eyes of your Lord - the great Shiva. For this, they do penance to him and 
reach him through their mind.

ஹிமவான் பெற்ற புத்திரியே! ஆனானப்பட்ட பிரம்மாவே,
தன் தலைமையில் பெரிய புலவர்கள் படையோடு  உனது
அழகைப்  போற்ற முயன்றும் முடியவில்லை. அழகிய தேவ
கன்னிகைகள் உனது பவித்ரமான அழகைக் காண விரும்பி,
உனது நாயகன் சிவனின் கண்கள் மூலம் உன்னை காண
முயல்கிறார்கள். இதற்காக அவர்கள் சிவனைக் குறித்து
தவம் இருந்து, அவரை  மனதால் அடைகிறார்கள்.

Soundarya Lahari 11

சதுர்பி: ஸ்ரீ கண்டை: சிவ யுவதிபி: பஞ்சபிர் அபி
ப்ரபின்னாபி: சம்போ:  நவபிர் அபி மூல ப்ரக்ருதிபி:      
சதுச் சத்வாரிம் சத் வஸு தல கலாச்ர த்ரிவலய                              
த்ரி ரேகாபி: ஸார்த்தம் தவ சரண கோணா:  பரிணதா:

With four wheels of our Lord Shiva and with the five different
wheels of yours Mother form the real basis of this world.
Your house of the holy wheel has 4 different parts of 8 and 16 petals,
3 different circles, 3 different lines - making a total of 44 angles.

சிவனின் 4 சக்கரங்களும், தாயே உனது 5 சக்கரங்களுமே
இவ்வுலகின் உண்மையான ஆதாரமாக விளங்குகின்றது.
உனது வீடான புனித சக்கரத்தில், 8 மற்றும் 16 இதழ்களைக்
கொண்ட 4 பகுதிகள், 3  தனி சக்கரங்கள் மற்றும் 3 தனி
கோடுகள் - ஆக மொத்தம் 44 கோணங்கள் உள்ளன. 

Soundarya Lahari 10

ஸூதா தாரா ஸாரை:  சரண யுகளாந்தர்  விகளிதை:
ப்ரபஞ்சம் ஸிஞ்சந்தீ  புனரபி ரஸாம்நாய மஸ:                      
அவாப்ய ஸ்வாம் பூமிம் புஜக நிபம் அத்யுஷ்ட வலயம்                 
ஸ்வம் ஆத்மானம் க்ருத்வா  ஸ்வபிஷி குலகுண்டே குஹரிணி

All the nerves of the body are drenched using the nectar flowing in
between your feet. You descend from the moon with nectar like
rays, reaching back to your place, coiling your body into a ring like
that of a serpent and sleeping in the Mooladhara with a hole in the middle.    

உனது கால்களின் இடையே ஓடும் அமிர்தத்தால், உடலில்
உள்ள எல்லா நரம்புகளும் நனைந்துள்ளன. நிலவிலிருந்து, 
தேன் போன்ற கிரணங்களைப் போன்று நீ இறங்கி வந்து, உனது
இடத்தை அடைந்து, உனது உடலை சர்ப்பத்தைப் போல்
வளைத்து, மூலாதாரத்தின் நடுவில் ஒரு துளை இருப்பது 
போல நீ உறங்குகின்றாய்.

Soundarya Lahari 9

மஹீம்  மூலாதாரே  கமபி மணிபூரே ஹுதவஹம்       
ஸ்திதம் ஸ்வாதிஷ்டானே  ஹ்ருதி மருத மாகாசம் உபரி  
மனோ(அ)பி ப்ரூ மத்யே ஸகலமபி பித்வா குலபதம்
ஸஹஸ்ராரே  பத்மே ஸஹ ரஹஸி பத்யா விஹரசே

Oh,my Goddess! In the thousand petalled lotus,You live in seclusion with
your consort.This lotus can be reached after breaking through the microways of
1. The power of earth in Mooladhara,
2. The power of water in Manipoora,
3. The power of fire in swathishtana,
4. The power of air in heart(Anahatha),and
5. The power of ether in between the eyelids(Agna).

என் தாயே! ஆயிரம் இதழ் கொண்ட தாமரையில், நீ தனிமையில்
உனது துணையுடன் வசிக்கின்றாய். இந்தத் தாமரையை கீழ்கண்ட தளைகளை உடைத்து தான் வர முடியும்:
1. மூலாதாரமான பூமியின் சக்தி
2. மணிபூரகமான  நீரின் சக்தி
3. ஸ்வாதிஷ்டானமான அக்னியின் சக்தி
4. அனாஹதமான (இருதயத்தில்)  காற்றின் சக்தி
5. ஆக்னமான (புருவங்களின் இடையில்)  ஆகாயத்தின் சக்தி.

Soundarya Lahari 8

ஸுதா ஸிந்தோர்  மத்யே ஸூர விடபி வாடீ  பரிவ்ருதே        
மணி த்வீபே நீபோபவனவதி  சிந்தாமணி க்ருஹே              
சிவாகாரே மஞ்சே பரம சிவ  பர்யங்க  நிலயாம்         
பஜந்தி  த்வாம் தன்யா: கதிசன சித் ஆனந்த லஹரீம்

In an island of precious gems located amid a sea of nectar surrounded
by wish giving kalpaga trees, is located a garden of Kadamba trees.There
in the house of the gem of thought, on the holy seat of the lap of the great
God Shiva, She sits like a tide in the sea of happiness of ultimate truth
worshipped only by a few select holy men.

அமிர்தக் கடலின்  மத்தியில், வரங்கள் தரும் கற்பக மரங்கள்
சூழ்ந்த  விலை உயர்ந்த ரத்தினங்களால் நிறைந்த ஒரு தீவில், கடம்ப மரங்களால் ஆன ஒரு நந்தவனம் அமைந்துள்ளது. எண்ணங்களின் ரத்தினமான இல்லத்தில், பரப்ரஹ்மம் ஆன ஆனந்த சமுத்திரத்தின் அலையைப் போல, மிகச்  சில புனிதர்களால் மட்டுமே   வணங்கப்படும் தாய், சிறந்த  கடவுளான  சிவனின் மடி என்ற புனித இருக்கையில் அமர்ந்துள்ளாள்.

Sunday, January 2, 2011

Soundarya Lahari 7

க்வணத் காஞ்சீ தாமா கரி கலப கும்ப ஸ்தன நதா
பரீக்ஷீணா மத்யே பரிணத சரச்சந்திர வதனா
தனுர் பாணான் பாசம் ஸ்ருணிம் அபி ததானா கரதலை:
புரஸ்தாத் ஆஸ்தாம் ந: புரமதிதுர் ஆஹோ புருஷிகா

With a golden belt beautified by tiny tingling bells
You are slightly bent by your breasts which are like
an elephant's two frontal tusks. With a thin beautiful
frame and with a face like an autumn moon, You hold in
your hands a sugarcane bow, flower arrows, a noose and
a goad. You - the one who has the wonderful form of the
ego of the God who burnt the three cities (Shiva)
should please come and appear before us.

ஒலிக்கும் சிறு மணிகளால் அலங்கரிக்கப்பட்ட தங்க ஒட்டியாணம் அணிந்தவளே!
யானையின் இரு தந்தங்களைப் போல உள்ள உன் இரு மார்புகளால் சற்றே வளைந்து இருப்பவளே!
மெல்லிய உடல் வாகோடு, நிலவைப் போன்ற குளிர் முகத்தோடு இருப்பவளே!
கையில் கரும்பு வில்லும், மலர் அம்புகளும், பாச, அங்குசமும் வைத்திருப்பவளே!
மூன்று நகரங்களை எரித்த கடவுளின் (சிவனின்) குணம் தாங்கியவளே!
தயை கூர்ந்து நீ எங்கள் முன் வந்து எங்களுக்கு காட்சி தருவாயாக.

Soundarya Lahari 6

தனு: பௌஷ்பம் மௌர்வீ மது கர மயீ பஞ்ச விசிகா:
வஸந்த: ஸாமந்தோ மலய மருத் ஆயோதன ரத:
ததாப்யேக: சர்வம் ஹிமகிரி ஸுதே காமபி க்ரிபாம்
அபாங்காத்தே லப்த்வா ஜகதிதம் அனங்கோ விஜயதே

Oh Daughter of the Ice Mountain! The God Of Love who does not posess
a physical body and has a flower bow with bow string made of honey bees,
five arrows made only of tender flowers, with spring as an aide and riding
on a chariot of Malaya Mountain's breeze, is able to win all the world alone, with only a sideways glance of your Holy Eyes.

ஹிமவான் பெற்ற புத்திரியே!
மலரினால் செய்த வில்லை உடையவனும், தேனீக்களால்
செய்த வில்லின் நாணைக் கொண்டவனும், ஐந்து பூ
மொட்டுக்களால் ஆன வில்லை உடையவனும், வசந்தத்தை
அமைச்சராகக் கொண்டவனும், மலய மலையின் தென்றலை
தேராகக் கொண்டவனும் ஆன மன்மதனால், தனக்கென உடல்
என்ற ஸ்தூல சரீரம் இல்லாத போதும், உனது கடைக்கண்
பார்வையால் இவ்வுலகை வெல்ல முடிந்தது.