Sunday, January 23, 2011

Soundarya Lahari 24

ஜகத்ஸூதே தாதா ஹரிர் அவதி ருத்ர: க்ஷபயதே
திரஸ்குர்வன் ஏதத் ஸ்வம் அபி வபுரீச ஸ்திரயதி         
ஸதா பூர்வ: ஸர்வம் தத் இதம் அனு க்ருஹ்ணாதி ச சிவ:
தவாக்ஞாம் ஆலம்ப்ய க்ஷண சலிதயோ: ப்ரூ லதிகயோ:

Brahma creates the world, Vishnu looks after it and Shiva destroys it.
Easwara makes them and himself disappear. Shiva blesses them all by
your order, given to him through a momentary move of your eyebrows.

பிரம்மா இவ்வுலகைப் படைக்கின்றான், விஷ்ணு இதனைக்
காக்கின்றான், சிவன் இதனை அழிக்கின்றான். ஈஸ்வரன்
அவர்களையும் தன்னையும் மறைய  வைக்கின்றான். உனது
புருவங்களின் சிறு அசைவின் மூலம் கொடுக்கப்பட்ட
ஆணையினால் சிவன் அவர்களுக்கு அருள் புரிகின்றான்.

1 comment:

  1. ஐந்தொழில்களையும் செய்ய மூர்த்திகளை தேவி படைக்கிறாள். லலிதா சஹஸ்ரநாமத்தின் ஒரு நாமாவளி பஞ்சக்ருத்ய பாராயணா என்று கூறும். ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அனுகிரஹம் என அனைத்தையும் பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், ஈசானன், ஸதாசிவன் ஆகியோரைக்கொண்டு தேவி நடத்துகிறாள் என்று சாக்தர்கள் கூறுவார்கள்..

    ReplyDelete