Sunday, January 30, 2011

Soundarya Lahari 26

விரிஞ்சி: பஞ்சத்வம் வ்ரஜதி ஹரிர் ஆப்நோதி விரதிம்
விநாசம் கீனாசோ பஜதி தனதோ யாதி நிதனம்
விதந்த்ரி மாஹேந்த்ரீ விததிர் அபி ஸம்மீலித த்ருசா
மஹா ஸம்ஹாரே(அ)ஸ்மின் விஹரதி ஸதி த்வத் பதிரஸௌ


During the deluge, creator - Brahma, Vishnu, God of death - Yama,
Lord of wealth - Kubera, Indra reach their end and close their eyes
one after another for a wakeless sleep. But You my pure mother at
that time will be playing with your consort - Sadashiva.

   
பிரளய காலத்தில், படைக்கும் கடவுள் பிரம்மா, விஷ்ணு,
காலன் ஆகிய யமன், செல்வத்தின் அதிபதி குபேரன் மற்றும் 
இந்திரன் தங்கள் இறுதிக் காலத்தை அடைந்து,
ஒவ்வொருவராக மீளாத் தூக்கத்திற்காகத் தங்கள் இமைகளை மூடிக் கொள்வார்கள். ஆனால், அச்சமயத்தில்
பவித்ரமான தாயாகிய நீ உனது துணையான சிவனோடு
விளையாடிக் கொண்டிருப்பாய். (மற்றவர்களுக்கெல்லாம்
இறுதிக் காலம் என்ற ஒன்று உண்டு. அனால் உனக்கும்,
சிவனுக்கும் அப்படி ஒன்று இல்லை).

1 comment:

  1. மஹேஷ்வர-மஹாகல்ப-மஹாதாண்டவ சாக்ஷிணீ! அன்னையின் ஆயிரம் நாமங்களில் ஒன்று. அப்படித் தான் இங்கே ஸ்லோகத்தின் பொருளும் வருது. அனைத்து உயிர்களும் ஒடுங்கிக் கடைசியில் எஞ்சி இருப்பது சிவமும், சக்தியுமே ஆகும். அந்த ஊழித் தாண்டவத்தின் ஒரே சாக்ஷி அம்பிகை மட்டுமே.

    ReplyDelete