Sunday, January 23, 2011

Soundarya Lahari 20

கிரந்தீம் அங்கேப்ய: கிரண நிகுரும்பாம்ருத ரஸம்
ஹ்ருதி  த்வாம் ஆதத்தே ஹிம கர சிலா மூர்த்திம் இவ ய:
ஸ ஸர்ப்பாணாம்  தர்ப்பம் சமயதி சகுந்தாதிப இவ
ஜ்வர ப்லுஷ்டான் த்ரிஷ்ட்யா ஸுகயதி ஸுதா தார ஸிரயா

He who medidates on You - showering nectar from all of your limbs and in
the form resembling a statue carved out of moonstone can put an end to
the snake's pride with a single stare and cure the ones having fever with
his nectar like vision.

அங்கங்களில் இருந்து அமுதைப் பொழிபவளும்,
முத்துச்சிலை போன்ற உருவைக் கொண்டவளும்
ஆன உன்னைக் குறித்துத் தியானிப்பவர்கள், ஒரே
பார்வையால் பாம்பின் ஆணவத்தை அடக்கவும்,
காய்ச்சலில் உள்ளவர்களை தனது அமுதப் பார்வையால் 
குணப்படுத்தவும் முடியும்.

2 comments:

  1. அம்பிகையே அம்ருதேஸ்வரி, அவளே ஒரு மாபெரும் மூலிகை. பார்வை ஒன்றாலேயே பிணிகளைத் தீர்க்கவல்லவள் என்றாலும் அவளால் நமக்குக் கொடுக்கப் பட்ட ஒளஷதங்களையும் நினைக்கவேண்டும். இந்த மந்திரம் கடும் விஷத்தையும் போக்கும் என்று சொல்வாங்க. அதனால் தான் அந்த ஹாலாஹால விஷத்தை உண்ட ஈசனையே தன் அமிர்தக் கரங்களால் தொண்டையில் தடுத்து விஷம் உள்ளே போகாமல் செய்தாள். மேலும் பிறவிப் பெருங்கடலாகிய விஷ சாகரத்திலிருந்து நம்மை அமிர்த சாகரத்துக்குக் கரையேற்றும் தாரா என்பவளும் இவளே.

    இன்னிக்கு இவ்வளவு தான். மிச்சம் அப்புறம். :)

    ReplyDelete