Monday, January 31, 2011

Soundarya Lahari 34

சரீரம் த்வம் சம்போ: சசி மிஹிர வக்ஷோருஹ யுகம்
தவாத்மானம் மன்யே பகவதி நவாத்மானம் அநகம்
அத: சேஷ: சேஷீத்யயம் உபய ஸாதாரண தயா
ஸ்தித: ஸம்பந்தோ வாம் ஸமரஸ பராநந்த பரயோ:


Oh Supreme Goddess!
In my mind's eye, I see your body having sun and moon as it's busts
as the body of Shiva and His body having no equivalent and having 9
surrounding souls as Your body.
This relation of 'Your body to his' and 'His body to Yours' becomes
the one perfect combination of happiness and it becomes equal in
each of You.


உச்சத்தில் இருக்கும் தேவியே!
என் மனக் கண்ணில், சூரியன் மற்றும் சந்திரனை உனது இரு மார்புகளாக உடைய உனது உடல் சிவனின் உடலாகவும், ஈடு இணை இல்லாத, சுற்றிலும் 9 உயிர்களைக் கொண்டதுமாகிய சிவனின் உடல் உனது உடலாகவும் தோன்றுகிறது.
உனது உடலை அவனுடையதாகவும், அவன் உடலை உன்னுடையதாகவும் சம்பந்தப்படுத்திப் பார்ப்பது முழுமையான ஆனந்தத்தை அளித்து, அந்த ஆனந்தம் உங்கள் இருவருள்ளேயும் சமமாகப் பிரிந்து நிற்கின்றது.

1 comment:

  1. ஈசன், அம்பிகை இருவருக்கும் உள்ள சமத்துவத்தைப் பற்றியது இது. சிருஷ்டி, ஸ்திதி போன்றவற்றில் இருவரும் சேர்ந்தே இயங்கினாலும் ஒருவரில் இன்னொருவர் அடங்குவர். அம்பிகை ஈசனிடம் அடங்குவதால் இருவருமே உடைமை,உடையவர் என்ற பாவத்தில் அடங்குகிறார்கள். பூஜையில் சமம், அனுஷ்டானங்களிலும் சமம், இதோடு நிருத்யம் போன்றவற்றிலும் அவஸ்தான சமம், இருவருக்கும் பெயரிலும் சமம், சிவ என்றால் ஈசன், சிவா என்றால் அம்பிகை, பைரவர், பைரவி போன்ற நாமங்களால் நாமத்திலும் சமம், ரூபத்திலும் சிவந்த நிறம், தலையில் பிறை, முக்கண் போன்றவற்றிலும் இருவரும் சமம்.

    பொதுவாக யாகங்கள், யக்ஞங்கள் போன்றவற்றை ஆண்கள் செய்கின்றனர் என்றாலும் திருமணம் ஆகி இருக்கவேண்டும் என்பதோடு மனைவியின் ஒத்துழைப்பும் வேண்டும். அவள் அருகே வந்து நின்றால் தான் யாகமோ, யக்ஞமோ பூரணமாக ஆகும். குடும்ப விஷயங்களில் மட்டுமே பெண்களுக்கு முக்கியத்துவம் என்றில்லாமல் இப்படி எல்லாவற்றிலும் அவர்களுக்கும் உள்ள பங்கை எடுத்துச் சொல்வது இந்த ஸ்லோகம்.

    இதைப் பூரணமாகப் புரிந்து கொண்டு அவரவர் பங்கைச் சரியாக நிறைவேற்றினாலே குடும்பம் ஒற்றுமையாக இருக்கும்.

    ReplyDelete