Sunday, January 23, 2011

Soundarya Lahari 21

தடில் லேகா தன்வீம் தபன சசி வைச்வா நர மயீம்
நிஷண்ணாம் ஷண்ணாம் அப்ய உபரி கமலானாம் தவகலாம்
ஹா பத்மா டவ்யாம் ம்ருதித மல மாயேந மனஸா   
மஹாந்த: பச்யந்த: தததி பரமாநந்த லஹரீம்

Those great souls, who have removed all of the mind's dirt enjoy waves
after waves of supreme happiness when they medidate within their mind
on You- who is of the form of sun and moon, living in the lotus forest
and above the six wheels of lotus.

சூரிய, சந்திர வடிவோடு தாமரை வனத்தில் வசிக்கும்,
தாமரையின் ஆறு சக்கரங்களின் மேலே உள்ள உன்னைத்
தங்கள் மனதில் தியானிக்கும் போது, பரமானந்தத்தின்
அலைகளை ஒவ்வொன்றாக தங்கள் மன அழுக்கை நீக்கிய
சிறந்த ஆத்மாக்கள்  அனுபவிக்கிறார்கள்.

1 comment:

  1. சூரியன், சந்திரன்,அக்னி ஆகிய வடிவங்களில் அம்பிகை பிரகாசிப்பதைச் சொல்கின்றார் இங்கே. அத்தகைய தேஜஸ் நிறைந்திருந்தும் அம்பிகையானவள் மூலாதார சக்கரத்திலிருந்து மேலேறி வந்து ஆக்ஞா சக்கரத்தில் வரும்பொழுது மின்னல் வெட்டுவது போன்ற வேகத்துடனே மேலேஏறி சஹஸ்ராரத்தை அடைந்து நிலை பெறுகிறாள். சூரியனைப் போல் இருளை நீக்கியும், சந்திரனைப் போல் குளிர்ச்சி அடைய வைத்தும், அக்னியைப் போல் மனமாசுக்களைப் பொசுக்கியும் நம்மைப் பக்குவப் படுத்துகிறாள்.

    ReplyDelete