Sunday, January 23, 2011

Soundarya Lahari 25

த்ரயாணாம் தேவாநாம் த்ரி குண ஜநிதானாம் தவ சிவே
பவேத் பூஜா பூஜா தவ சரணயோர் யா விரசிதா                    
ததா ஹி த்வத் பாதோத்வஹன மணி பீடஸ்ய நிகடே
ஸ்திதா ஹ்யேதே சச்வந் முகுலித கரோத்தம்ஸ மகுடா:

Oh consort of Shiva!
The worship done at the base of Your feet is the worship done to the holy
Trinity, who were born based on Your properties. This is verily true
oh Mother because the Trinity always stand with folded hands kept on
their crown, near the jeweled plank carrying Your feet.

சிவனின் துணையே!
உனது காலடியில் செய்யப்பட்ட வழிபாடு, உனது குணங்களால்
தோன்றிய புனிதமான மும்முர்த்திகளுக்குச் செய்யப்பட்ட
வழிபாடாகும். இது முற்றிலும் உண்மை தாயே. ஏனென்றால்,
உன் திருவடிகளைத் தாங்கிய, நகைகளால் அலங்கரிக்கப்பட்ட  பதாகையின் அருகே தங்கள் கிரீடத்தின் மேல் (தலைக்கு மேலே)
குவித்தக் கரங்களோடு நிற்கின்றார்கள்.  

2 comments:

  1. முன் ஸ்லோகத்தில் பார்த்தோம். மும்மூர்த்திகளைப் படைக்கிறவளே தேவி தான் என. ஆக மும்மூர்த்திகளையும் வழிபடத் தனித்தனியாகச் செய்யவேண்டியதில்லை. தேவி வழிபாட்டிலேயே அவை அடக்கம் ஆகின்றது. ஸ்ருஷ்டிகர்த்ரீ, ப்ரஹ்மரூபா,, கோப்த்ரீ கோவிந்த ரூபிணீ,
    ஸம்ஹாரிணீ ருத்ர ரூபா, திரோதானகரீ ஈஸ்வரீ,
    ஸதாசிவா அனுக்ரஹதா பஞ்ச க்ருத்ய பராயணா, என லலிதா சஹஸ்ரநாமம் கூறுவதைப் போல் அம்பிகை ஒருத்தியை வழிபட்டால் அனைவரையும் வழிபட்டாற்போல்

    மூலமான ஒரு பரம்பொருளே மூன்று குணங்களோடு கூடிய மாயையாகும் போது அதன் சைதன்யங்கள் முறையே ரஜோகுணத்தில் பிரம்மாவாகவும், சத்துவகுணத்தில் விஷ்ணுவாகவும், தமோ குணத்தில் ருத்ரனாகவும் ஆகின்றது.

    ReplyDelete
  2. மிச்சம் அப்புறமா. ஒவ்வொண்ணும் படிச்சுட்டு, பார்த்து, அப்புறம் சரி பார்த்துட்டு எழுதணும் இல்லையா? :))))))

    ReplyDelete