தவ ஸ்வாதிஷ்டாநே ஹுதவஹம் அதிஷ்டாய நிரதம்
தமீடே ஸம்வர்த்தம் ஜநநி மஹதீம் தாம் ச ஸமயாம்
யதாலோகே லோகாந் தஹதி மஹஸி க்ரோத கலிதே
தயார்த்ரா யா த்ருஷ்டி: சிசிரம் உபசாரம் ரசயதி
Mother! I think and worship of the fire in Your holy wheel of Swadishtana
and the Rudra shining in that fire - which is like the destroying fire of
deluge and You shining in that fire as Samaya. When the angry look of
Rudra burns the world, Your look drenches it in mercy treating it and
cooling it down.
தாயே! புனிதச் சக்கரத்தில் ஸ்வாதிஷ்டானத்தில் இருக்கும் அக்னியை நான் எண்ணிப் பார்த்து வணங்குகிறேன். பிரளய காலத்தின் அழிக்கும் அக்னியைப் போன்று உள்ள அந்த நெருப்பில், சுடர் வீசும் சிவனையும், அந்நெருப்பில் சமயமாக ஒளி வீசும் உன்னையும் நான் நினைவில் கொண்டு வணங்குகிறேன். சிவனின் கோபப் பார்வையால் இவ்வுலகம் எரிந்த போது, உனது பார்வை அதனை கருணையில் நனைத்து அதனை குளிர்வித்தது.

சக்கர வரிசைப் படி இப்போ மணிபூரகத்தைத் தான் சொல்லி இருக்கணும், ஆனால் ஆகாயத் தத்துவம், வாயுத் தத்துவம் அதன் பின் அக்னி என்பதால் இங்கே ஸ்வாதிஷ்டானத்தைக் கூறி இருக்கிறார் ஆசாரியர். அக்னி ஸ்தானம் திருவண்ணாமலை. வாயுவில் இருந்து தோன்றிய அக்னியைக் குளிர்விக்கும் சக்தி படைத்தவள் அம்பிகை. இங்கே அம்பிகையை ஸமயா என்றே சாக்தர்கள் வழிபடுகின்றனர். ஸமயா என்னும் தேவியாக உருவெடுத்து மன்மதனைக் கூட எரித்த நெற்றிக்கண்ணில் இருந்து ருத்ர ரூபத்தில் ஈசன் இவ்வுலகங்களைப் பிரளயகால அக்னியாக எரிக்கையில் அம்பிகை எரிந்த உலகிற்குக் குளிர்ச்சியை உண்டு பண்ணுகிறாள். இது மன்மதனை எவ்வாறு கருணையால் அம்பிகை பிழைக்க வைக்கிறாளோ அதற்குச் சமம். அம்பிகையே இங்கே நமக்கெல்லாம் உயிர்ப்பிச்சை கொடுக்கும் சஞ்சீவனி. இதையே லலிதா சஹஸ்ரநாமம், "ஹர நேத்ராக்னி ஸந்தக்த-காமஸஞ்சீவன-ஓஷதி: என்று அம்பிகையின் ஒரு நாமாவளியில் கூறும்.
ReplyDelete