Monday, January 31, 2011

Soundarya Lahari 36

தாவாக்ஞா சக்ரஸ்தம் தபந சசி கோடி த்யுதி தரம்
பரம் சம்பும் வந்தே பரிமிளித பார்ச்வம் பரசிதா
யமாராத்யந் பக்த்யா ரவி சசி சுசீநாம் அவிஷயே
நிராலோகே(அ)லோகே நிவஸதி ஹி பாலோக புவநே


The one who worship Parameshwara - having the luster of billions of
moon and sun, living in your Agna chakra in the holy wheel of order,
surrounded by your two forms on either sides would for ever live in
that world where the rays of sun and moon don't enter, has its own
luster, beyond the sight of the eye and is different from the world we
see.


எண்ணற்ற சந்திரன் மற்றும் சூரியனின் ஒளியை உடைய, உனது புனிதச் சக்கரங்களில் ஆக்ன சக்கரத்தில் வசிக்கும், உனது இரு உருவங்களால் இரு புறமும் சூழப்பட்டு இருக்கும் பரமேஸ்வரனை வணங்குபவர்கள் - சூரியன் மற்றும் சந்திரனின் கிரணங்களால் நுழைய முடியாத, தானாகவே ஒளி வீசும், கண் பார்வைக்கும் அப்பால் உள்ள, நாம் பார்க்கும் இவ்வுலகிலிருந்து வேறுபட்டு இருக்கும் அவ்வுலகில் நிரந்தர வாசம் புரிவார்கள்.

1 comment:

  1. ஆக்ஞா சக்கரம் நெற்றியில் உள்ளது. இரு புருவங்களுக்கு மத்தியில் நெற்றியில் உள்ள ஆக்ஞா சக்கரத்தில்தான் ஈசனின் ஆக்ஞை பிரகாசிக்கிறது. அங்கே ஈசன் ஸ்வயம்பிரகாசமாய் ஜோதி ஸ்வரூபமாய்க் காட்சி அளிக்கிறார். ஜீவனின் ஆக்ஞை இங்கே பிரகாசிப்பதால் தான் நெற்றியிலே நம் விதி எழுதி ஒட்டியாச்சு என்று சொல்கிறோமோ என்னமோ!

    இங்கே கோடி சூரியப் பிரகாசமாக ஜ்வலிக்கும் ஈசனை இருபக்கங்களிலிருந்தும் ஸத்குண சக்தியும் நிர்குண சக்தியும் அணைத்தவண்ணம் காட்சி அளிக்கின்றனர். சூரியனின் ஒளியோ, சந்திரனின் பிரகாசமோ, அக்னியின் வெப்பமோ அங்கே தெரியாது. ஏனெனில் அனைத்துக்கும் ஒளியைக் கொடுக்கக் கூடிய ஈசனின் பிரகாசத்துக்கு முன்னே கோடி கோடி மின்னல் ஒளிகளும் தெரியாது. அதைக் கடந்து எவையும் செல்ல மாட்டா.

    ஆகவே யோகத்தில் நெற்றிப் புருவ மத்தியில் ஜோதி ரூபமாக ஈசனை நினைந்து தியானம் செய்யச் சொல்லுவார்கள். இந்த சாயுஜ்யம் கிடைத்தவனுக்கு வேறெதுவும் துச்சம்.

    ReplyDelete