Monday, January 31, 2011

Soundarya Lahari 35

மநஸ் த்வம் வ்யோம த்வம் மருத் அஸி மருத் ஸாரதிர் அஸி
த்வ மாப: த்வம் பூமி:த்வயி பரிணதாயாம் ந ஹி பரம்
த்வம் ஏவ ஸ்வாத்மாநம் பரிணமயிதும் விச்வ வபுஷா
சிதாநந்தாகாரம் சிவயுவதி பாவேந பிப்ருஷே


Mother! You are the mind, ether, air, fire, water, earth and the universe.
There is nothing except You in the world. But to make believe your
form as the universe, You take the role of Shiva's wife and appears before
us in the form of ethereal happiness.


தாயே! நீ மனம், ஆகாயம், காற்று, நெருப்பு, நீர், நிலம் மற்றும் அண்டமாகத் திகழ்கின்றாய். உன்னைத் தவிர வேறொன்றும் உலகில் இல்லை. என்றாலும் அகிலமே நீ தான் என்பதை நம்ப வைப்பதற்காக, நீ சிவனின் மனைவியாக உருவெடுத்து எங்களின் முன்னே தெய்வீகப் பேரானந்தத்தோடு தோன்றுகிறாய்.


1 comment:

  1. அம்பிகையே அனைத்துமாக இருக்கிறாள். நம் உடலின் ஒவ்வொரு ஆதாரத்திலும் ஒவ்வொரு சக்தியாக விளங்குவதும் அவளே. நம்முடைய ஆக்ஞா சக்கரத்தில் மனமாக விளங்குவதும் அவளே. விசுத்தி சக்கரத்தில் ஆகாசமாகவும், அநாஹதத்தில் வாயுவாகவும், ஸ்வாதிஷ்டானத்தில் அக்னியாகவும்,, மணிபூரகத்தில் நீராகவும், மூலாதாரத்தில் பூமியாகவும் இருப்பவள் அம்பிகையே.

    ஒரு சிலரின் கருத்துப்படி மூலாதாரத்தில் உறங்கிக்கொண்டிருக்கும் அம்பிகையை எழுப்பி சஹஸ்ராரத்தின் சிவத்துடன் சேர்ப்பதையே யோகம் என்பார்கள். அதற்கு நிறையப் பயிற்சி வேண்டும். கிட்டத்தட்ட சாக்தமும் அதையே சொன்னாலும் இதில் வழிபாடுகள் உண்டு. ப்ரபஞ்ச வடிவாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் அம்பிகை இங்கே நம்முடைய வழிபாடுகளுக்காகப் பரமசிவனின் பத்னி என்னும் உருவெடுத்து நம் முன்னே தோன்றுகிறாள்.

    அபிராமி பட்டர் இதையே,

    பாரும், புனலும், கனலும், வெங்காலும், படர் விசும்பும்
    ஊரும் உருகு சுவை ஒளி ஊறொலி ஒன்றுபடச்
    சேரும் தலைவி சிவகாம சுந்தரி திருவடிக்கே
    சாருந் தவமுடையார் படையாத தனமில்லையே!
    என்று கூறுவார்.

    ReplyDelete