Saturday, January 15, 2011

Soundarya Lahari 13

நரம் வர்ஷீயாம்ஸம் நயன விரஸம் நர்மஸு ஜடம் 
தவா (அ)பாங்கா லோகே பதிதம் அனுதாவந்தி சதச:               
கள த்வேணீ பந்தா: குச கலச  விஸ்ரஸ்த  ஸிசயா      
ஹடாத்  த்ருட்யத் காஞ்ச்ய:  விகளித துகூலா: யுவ தய:            

Hundreds of young women with disheveled hair, upper clothes slipping
away from their chests, the lock of the golden belt getting open due to
the hurry and with sarees slipping away from their shoulders run after
the men who got your sidelong glance even though they are old, bad
looking and not interested in love sports.

உனது கடைக்கண் பார்வை கிடைத்தது என்ற ஒரே
காரணத்தால், அப்பார்வை கிடைத்த ஆண்களின்
பின்னால் - அவர்கள் வயது  முதிர்ந்தவர்களாகவோ, 
அழகற்றவர்களாகவோ,  காதல்  விளையாட்டில்  ஈடுபாடு 
இல்லாதவர்களாகவோ இருந்தும், அவர்களின் பின்னால்
நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் கலைந்த தலை,
மாரிலிருந்து விலகும் மேலாடை, அவசரத்தினால் கழன்று
கொண்ட அவர்களின் ஒட்டியாணம், தோளில் இருந்து
விழும் சேலைத் தலைப்பு - இவற்றை கண்டு கொள்ளாமல் 
ஓடுகிறார்கள்.

3 comments:

  1. வெளிப்படையாக இந்த அர்த்தம் தெரிந்தாலும் உள் அர்த்தம் வேறு. அம்பிகையின் கடைக்கண் கடாக்ஷம் பெற்றவன் அனைத்து சக்திகளையும் ஜெயித்தவன் என்று சொல்லப் படுவான். அதன் உண்மையான பொருளானது, காம, குரோத, மத, மாற்சரியங்களை வெல்வான் என்ற பொருளிலேயே வரும். எவ்வாறு எல்லா நதிகளும் கடலைத் தேடி ஓடி வந்து அடைக்கலம் அடைகின்றனவோ அவ்வாறே அம்பிகையையின் கடைக்கண்பார்வைகளின் கடாக்ஷம் கிடைத்தவனைத் தேடி அனைத்து சக்திகளின் தேவதைகளும் அவனுக்குக் கட்டுப்பட்டு அவனை மேலும் முன்னேற்றுகிறாள். யோகமுறைப்படியும் ஒவ்வொரு ஆதார சக்தியும், அவன் வசப்பட்டு அவன் முன்னேறி மேலே ஆக்ஞா சக்கரத்தையும் கடந்து சஹஸ்ராரத்தில் ஐக்கியம் அடைய உதவும்.
    மூலப் பொருளானது அம்பாளின் கடைக்கண் கடாக்ஷம் கிடைக்கப் பெற்றவனை எத்தகைய சபலத்திற்கும் உட்படாமல் எல்லாவற்றையும் சமமாகப் பார்க்கும் வல்லமை பெறுகின்றான். இதுதான் நம் நாட்டின் முக்கியமான பெண்மையைப் போற்றும் தத்துவமும் ஆகும். எல்லாப் பெண்களையும் தாயாகவோ, சகோதரியாகவோ பார்ப்பது என்ற கோணம். இந்த ஸ்லோகத்தின் main concept இதைத் தான் சொல்கிறது. நன்றி. எல்லாவற்றையும் ஒரே நாளில் போட்டிருக்கீங்க!

    ReplyDelete
  2. மாமி
    வார நடு நாட்களில் வர முடிவதில்லை. அதனால் தான் weekend இல் மொத்தமாக போடுகிறேன்.
    இந்த 13 ஸ்லோகத்துக்கு எழுதற போது கொஞ்சம் நினைச்சுண்டேன் - அர்த்தம் தப்பா போயடக்கூடாதுன்னு. நான் literal ஆ சொன்னதை நீங்க மெருகேற்றியதற்கு நன்றி.

    ReplyDelete
  3. ஓ, அதனால் என்ன? பரவாயில்லை. இது எல்லாரும் படிப்பாங்க இல்லையா? கொஞ்சம் அர்த்தம் மாறினாலும் விரஸமாய்த் தெரியும் என்பதாலேயே விளக்கம் எழுதினேன். மெதுவாப் போடுங்க, மெதுவா பதில் கொடுங்க. உங்க ப்ளாக் என்னோட லிஸ்ட்லே இருக்கு. நானும் மெதுவா வந்து படிக்கிறேன்.

    ReplyDelete