Monday, January 31, 2011

Soundarya Lahari 33

ஸ்மரம் யோனிம் லக்ஷ்மீம் த்ரிதயம் இதம் ஆதௌ தவ மனோ:
நிதாயை கே நித்யே நிரவதி மஹா போக ரஸிகா:
பஜந்தி த்வாம் சிந்தாமணி குண நிபத்தாக்ஷ வலயா:
சிவாக்நௌ  ஜூஹ்வந்த: ஸுரபி க்ருத தாராஹூதி சதை:


Oh Omnipresent Mother!
Those who add seed letter "Iim" of the God of love, "Hrim" of Goddess
Bhuvaneshwari and "Srim" of Goddess Lakshmi - forming the three
lettered triad, wearing the garland of the gem of thoughts, offering
oblations several times to the fire with the pure, scented ghee of the holy
cow - kamadhenu and worshipping You in association with Shiva
will realize the essence of the limitless pleasure of the soul.


எங்கும் நிறைந்திருக்கும் தாயே!
காதல் கடவுள் மன்மதனின் மூல எழுத்தான ஈம், தேவி புவனேஸ்வரியின் மூல எழுத்தான ஹ்ரீம் மற்றும் தேவி லக்ஷ்மியின் மூல எழுத்தான  ஸ்ரீம் - இந்த மூன்றையும் கோர்த்து, எண்ணங்களாகிய இரத்தின மாலையை அணிந்து, தெய்வீகக் காமதேனு பசுவின் நறுமணம் கொண்ட தூய,  புனிதமான  நெய்யினால் அக்னிக்கு சமர்பிக்கப்பட்ட பல ஆஹுதிகளும், சிவனோடு இணைந்திருக்கும் உன்னை வணங்குவதும், மனதிற்கு எல்லையில்லா ஆனந்தத்தின் சாரத்தை அளிக்கும்.



2 comments:

  1. மூல எழுத்தான ஈம்//

    இங்கே ஈம் என்று வராது ஸ்ரீநி. காமபீஜத்தின் முதலெழுத்து க்லீம் என்று தான் வரும். அடுத்து ஹ்ரீம், பின்னர் ஸ்ரீம் முதல் எழுத்து தப்பாய்ப் போட்டிருக்கீங்க.

    இது சகல செளபாக்கியத்தையும் தரும்னு சொல்வாங்க. இதை ஒரு விதத்தில் காயத்ரி மந்திரத்துடன் ஒப்பிடறாங்க. காயத்ரியாக மாறும் முன்னர் அதை ஸாவித்ரி மந்திரம் னு சொல்வாங்களாம். இதற்கு மூன்று பாதங்கள் இருக்கின்றன இல்லையா? அதன் முன்னர் பூ: புவ: ஸுவ: என்னும் வியாஹ்ருதிகளைச் சேர்த்தே காயத்ரியாக ஆகின்றது என்கின்றனர் பெரியவர்கள். அதைப் போலவே இங்கே பஞ்சதசாக்ஷரி மந்திரத்தின் முன்னர் ஐம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-க்லீம்-ஸெள என்பவற்றைச் சேர்த்தால் செளபாக்கிய பஞ்சதசாக்ஷரி மந்திரம் என்கின்றனர். இது பற்றி இன்னும் சரியாப் படிக்கலை.

    ஆனால் மேலே சொன்ன ஸ்ரீம்-ஹ்ரீம்-க்லீம் என்பனவற்றை ஜபித்தாலே நல்ல பயன் கொடுக்கும்னு படிச்சேன். இது குறித்து ஒரு கதை கூடப் படிச்சேன். தேடிப் பார்த்து எடுக்கிறேன். விஷயமே தெரியாமல் ஒருத்தன் க்லீம் என்னும் மந்திரத்தை ஜபித்தே பயன் பெற்றதைச் சொல்லும் கதை அது.

    ReplyDelete