Sunday, January 30, 2011

Soundarya Lahari 28

ஸூதாம் அபி ஆஸ்வாத்ய ப்ரதிபய ஜரா ம்ருத்யு ஹரிணீம்
விபத்யந்தே விச்வே விதி சதமகாத்யா திவிஷத:
கராலம் யத் க்ஷ்வேலம்  கபலிதவத: கால கலநா
ந சம்போ: தந் மூலம் தவ ஜநநி  தாடங்க மஹிமா

Oh my Mother!
Gods like Indra and Brahma, who have drunk too much of divine nectar - 
the one that removes the evil of aging and death do have an end and
disappear. But Your consort Shambu (Shiva) who swallowed the strong
poison will never die because of the greatness of your ear studs.

தாயே!
மூப்படைதல் மற்றும் மரணமடைதல் என்ற இரு கொடுமைகளையும் நீக்கவல்ல புனிதமான அமுதைப் பருகிய இந்திரன் மற்றும் பிரம்மா போன்ற கடவுளர்களுக்கும், இறுதி முடிவு வந்து மறைவார்கள்.  ஆனால் உனது துணையான சாம்பு என்கிற சிவன், உனது காதணியின் மகிமையால் ஆல கால விஷத்தை அருந்தியும் மரணம் அடைய மாட்டான்.

2 comments:

  1. தாடங்கமே ஸ்ரீசக்கரம் தான், அம்பிகை காதுகளில் அணிந்திருக்கும் தாடங்கம் மகிமை பொருந்தியது. காலனை ஈசன் எரித்தும் அம்பிகை தன் குளிர்பார்வையால் அவனை உயிர்ப்பிக்கிறாள் அல்லவா? அத்தகைய மகிமை பொருந்திய அம்பிகையைத் தன் உடலின் சரிபாதியாய்க் கொண்டிருக்கும் ஈசன் உண்ட விஷத்துக்கும் அம்பிகையே மருந்தாகிறாள். அவள் தாடங்க மகிமையாலேயே காலத்தின் முடிவில்லை. ஏனெனில் அந்தத் தாடங்கங்கள் சூரிய, சந்திரர்கள் ஆவார்கள். காலத்தை நிர்ணயிக்கும் இருவரையும் அடக்கித் தன் காதுகளில் ஆபரணமாய் அணிந்திருக்கிறாள் அன்னை. அது அம்பிகையின் காதுகளை அடைந்ததும் ஸ்ரீசக்ர வடிவாகிறது. அந்த ஸ்ரீசக்கர வடிவைப் பூஜிக்கும் ஆணோ, பெண்ணோ எவரானாலும் அம்பிகையின் பூரண அருளைப் பெறுகின்றனர். இதனாலேயே பெண்கள் காதுகளில் தோடு அணிந்திருக்கவேண்டும் என்பது கூறப்படும்.

    ReplyDelete
  2. வாங்கோ மாமி! சௌக்கியமா?
    மூன்று வாரமாகவே வர முடியவில்லை. மன்னிக்கவும்.
    உங்களோட பதில்கள் ஸ்லோகத்தின் அர்த்தத்தை மேலும் மெருகேற்றுகிறது. நானும் மிச்சம் உள்ள 21 ம் சீக்கிரம் போடுகிறேன்.

    ReplyDelete