Saturday, January 22, 2011

Soundarya Lahari 19

முகம் பிந்தும் க்ருத்வா குச யுகம் அதஸ்தஸ்ய தத த:
ஹரார்த்தம் த்யாயேத்யோ ஹரமஹிஷி தே மன்மதகலாம்
ஸ ஸத்ய: ஸம்க்ஷோபம் நயதி வநிதா இத்யதி லகு
த்ரிலோகீ மப்யாசு ப்ரமயதி ரவீந்து  ஸ்தன யுகாம்

Oh Mother - Goddess of all Universe!
He who meditates on You as the crescent of love of our great Lord on the
centre of the holy wheel with your two busts just below and you as the half
of our Lord Shiva not only creates waves of emotion in ladies, but also
charms the world which has moon and sun as its busts.

ஜகத்தின் தாயே! எம் தலைவர் சிவனுடைய காதலின்
உச்சமாகத் திகழ்பவளும், புனிதச் சக்கரத்தின் நடுவில்
திகழ்பவளும், உன் இரு மார்புகளை கீழே உடையவளும்,
சிவனின் பாதியாக விளங்குபவளும் ஆன உன்னைத்
தியானிப்பவர்கள், பெண்களின் மனதில் அதிர்வலைகளை
எழுப்புவதோடு, சூரியன் மற்றும் சந்திரனை ஆதாரமாகக்
கொண்ட இவ்உலகையும் மயக்குவார்கள்.

2 comments:

  1. இங்கே அம்பாளின் முகத்தை ஸ்ரீசக்கரத்தின் நடுவிலுள்ள பிந்துவோடு ஒப்பிடுகிறார் ஆசாரியாள். சூரியனும், சந்திரனும் அம்பிகையின் மார்புகள் என்கிறார். இந்த உலகுக்கு உயிரூட்ட சூரியனோ, சந்திரனோ இல்லாமல் முடியுமா? கொஞ்சம் யோசிங்க. சூரிய ஒளியில் தான் மழை உற்பத்தி ஆகிறது. பயிர்கள் விளைகின்றன. செடிகள் பூத்து, மலர்ந்து, காய்த்துப் பழுக்கின்றன. சந்திர ஒளியிலோ அமிர்தத்தை விட உயர்ந்த மூலிகைகள் வளர்கின்றன. மேலும் பகல் முழுதும் ஏற்படும் வெப்பத்தைச் சந்திரன் இரவு தன் தண்ணொளியால் சமன் செய்கிறான். ஆகையால் சூரிய, சந்திரர்களாகிய ஸ்தனங்கள் மூலம் இவ்வுலகத்து மாந்தர்கள் அனைவருக்குமே பாலூட்டுகிறாள் அம்பிகை. இங்கே யோநி என்று குறிப்பிட்டிருப்பதும், சாதகன் இவ்வாறு அம்பிகை தியானத்தில் மூழ்கி அவளுடைய அங்கங்களின் தாத்பரியத்தையும் மாத்ருகா அக்ஷர ரூபத்தால் ஆன வடிவங்களின் தத்துவத்தையும் புரிந்து கொண்டால் மீண்டும் பிறவி எடுக்காமல் சாயுஜ்யம் அடைவான் என்பதே!

    ReplyDelete
  2. வெறும் இவ்வுலகக் கண்ணோட்டங்களோடு பார்க்கக் கூடாது இந்த ஸ்லோகங்களை எல்லாம். மேல்பார்வைக்கு இப்படித் தான் அர்த்தம் வரும் என்றாலும் இவ்விதம் அம்பிகையின் தாய்மைத் தன்மை புரிந்தவனுக்கு எந்தப் பெண்ணைக் கண்டாலும் அம்பாள் ஸ்வரூபமாகவே தெரிவாள் என்பதோடு தாயாகவும் நினைப்பான். இங்கே ராமகிருஷ்ண பரமஹம்சர் தன் மனைவியையே தாயாக ஏன் நினைத்தார் என்பதையும் ஞாபகம் வச்சுக்குங்க. புரியும்.

    ReplyDelete