Monday, January 31, 2011

Soundarya Lahari 32

சிவ: சக்தி: காம: க்ஷிதிர் அத ரவிச் சீத கிரண:
ஸ்மரோ ஹம்ஸச் சக்ர: ததனு ச பரா மார ஹரய:
அமீ ஹ்ருல்லேகாபி: திஸ்ருபி: அவஸானேஷு கடிதா:
பஜந்தே வர்ணாஸ்தே தவ ஜனனி நாமாவயவதாம்


She is the mother of us all.
The seed letter "ka" of my lord Shiva,
The seed letter "aa" of Goddess Shakthi,
The seed letter "ee"of the God of Love - Manmadha,
The seed letter "la"of earth,
The seed letter "ha"of the Sun God,
The seed letter "sa" of the moon with cool rays,
The seed letter "ka"of again the God of love,
The seed letter "ha" of the sky,
The seed letter "la" of Indra,the king of devas,
the seed letter "sa"of Para,
The seed letter "ka" of the God of love,
the sees letter "la"of the lord Vishnu,
Along with Your seed letters "Hrim",
which joins at the end of each of the 3 holy wheels, become the holy word to worship You.

This shloka indirectly gives the most holy Pancha-dasa-akshari  (5+10 = 15 lettered) mantra consisting of 3 parts
ka-aa-ee-la-hrim at the end of the Vagbhava koota,
ha-sa-ka-ha-la-hrim at the end of Kamaraja koota and
sa-ka-la-hrim at the end of Shakthi koota.
These 3 parts are called as Vahni Kundalini, Surya Kundalini and Soma Kundalini respectively.


நம் அனைவருக்கும் தாயானவள் அவள்.
கா என்ற எம் தலைவன் சிவனின் ஆதார எழுத்தும்,
ஆ என்ற தேவி சக்தியின் ஆதார எழுத்தும்,
ஈ என்ற காதல் கடவுள் மன்மதனின் ஆதார எழுத்தும்,
லா என்ற பூமியின் ஆதார எழுத்தும்,
ஹா என்ற  சூரியக் கடவுளின் ஆதார எழுத்தும்,
சா என்ற குளிர் கிரணங்களை உடைய நிலவின் ஆதார எழுத்தும்,
கா என்று மீண்டும் காதல் கடவுள் மன்மதனின் ஆதார எழுத்தும்,
ஹா என்ற ஆகாயத்தின் ஆதார எழுத்தும்,
லா என்ற தேவர்களின் தலைவன் இந்திரனின் ஆதார எழுத்தும்,
சா என்ற பரனின் ஆதார எழுத்தும்,
கா என்ற காதல் கடவுள் மன்மதனின் ஆதார எழுத்தும்,
லா என்ற எம்பெருமான் விஷ்ணுவின் ஆதார எழுத்தும்
உனது ஆதார எழுத்தான ஹ்ரீம் என்பதோடு சேர்ந்து,
மூன்று புனிதச் சக்கரங்கள்   ஒவ்வொன்றின் இறுதியிலும் இணைந்து உன்னை வணங்குவதற்குரிய புனிதச் சொல்லாக ஆகியது.

இந்த ஸ்லோகம் பஞ்சாதசஅக்ஷரி ( பஞ்ச-தச-அக்ஷரி) என்ற 15  அக்ஷர மந்திரத்தைக் குறிக்கின்றது.  இம்மந்திரமானது
கா-ஆ-ஈ-லா-ஹ்ரீம் என்று வாக்பவ கூடத்தின் இறுதியிலும்,
ஹா-சா-கா-ஹா-லா-ஹ்ரீம் என்று காமராஜ கூடத்தின் இறுதியிலும்,
சா-கா-லா-ஹ்ரீம் என்று சக்தி கூடத்தின் இறுதிப்  பகுதியிலும்  உள்ளது.
இப் பகுதிகள் முறையே வஹ்னி குண்டலினி, சூர்ய குண்டலினி மற்றும் சோம குண்டலினி என்று அழைக்கப்படுகின்றன.

3 comments:

  1. அம்பாளின் ஸ்வரூபமே அக்ஷர ஸ்வரூபம் என்பார்கள். ஐம்பத்தொரு அக்ஷரங்களும் அம்பாளின் ஸ்வரூபமாக அமைந்தது என்பார்கள். இதில் மூலாதாரத்தில் இருந்து கிளம்பும் ஒலியானது அக்னியைப் போல் கிளம்பி அநாஹதத்தை அடைந்து அங்கிருந்து ஆக்ஞையை அடைகிறது. இது யோகத்தின் வரிசைக்கிரமமான சாதனையை மறைமுகமாய்க் குறிப்பிடுவதோடு ஸ்ரீவித்யா மந்திரமான பஞ்சதசாக்ஷரீ மந்திரத்தின் சக்தியையும் மறைமுகமாய்க் கூறுகிறது. குரு மூலமே அறியக்கூடிய ஒன்றாகும்.

    ReplyDelete
  2. இவை வரிசைக்கிரமமாகவே வரவேண்டும் என்பதையும் இந்த ஸ்லோகம் கூறுகிறது. முத்துக்களைக் கோர்ப்பது போல் ஒவ்வொன்றும் ஒன்றின் மேல் ஒன்றாய் வரும். கோர்க்க உதவும் பொன் சரடாகமூலாதாரத்திலிருந்து கிளம்பும் நாத ஒலி விளங்கிக் கடைசியில் நாத பிந்துகலாதி நமோ நம என பிந்துவைப் போய் அடையும்.

    ReplyDelete
  3. இந்த மந்திர சப்தங்களில் இருந்தே பஞ்சபூதங்கள் தோன்றியதாயும் கூறுவார்கள்.. இது ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கூடமாகப் பாவிக்கின்றனர். ஸ்ரீமத்வாக்பவ கூடம் அம்பிகையின் முக மண்டலமாகவும், மத்ய கூடமான காமராஜ கூடம் கழுத்திலிருந்து இடுப்பு வரையிலும், இடுப்புக்குக் கீழே உள்ள பாகம் சக்தி கூடமாயும் பாவிக்கப் படும். லலிதா சஹஸ்ரநாமம் இதை

    ஸ்ரீமத்வாக்பவ-கூடைக-ஸ்வரூப-முக பங்கஜா
    கண்டாத:-கடிபர்யந்த-மத்யகூட-ஸ்வரூபிணி
    சக்திகூடகதாபன்ன-கட்யதோ-பாக-தாரிணீ என்று கூறும். இவை ஒவ்வொன்றாகப் போய்ச் சேரும் இடம் சந்த்ரகலா கூடம் அல்லது ரமாபீஜம் எனப்படும். இப்படி சாதகன் ஒவ்வொரு படியாக முன்னேறுவதே ஸ்ரீவித்யை எனப்படுகிறது. யோக முறையில் ஜாக்ரதம், ஸ்வப்னம், ஸுஷுப்தி, துரீயம் என்று வரும்.

    ReplyDelete