Sunday, January 30, 2011

Soundarya Lahari 30

ஸ்வதேஹோத்பூதாபி: க்ருணிபி: அணிமாத்யாபி: அபித:
நிஷேவ்யே நித்யே த்வா மஹமிதி ஸதா பாவயதி ய:
கிமாச்சர்யம் தஸ்ய த்ரி நயன ஸம்ருத்திம்  த்ருணயதோ
மஹா ஸம்வர்தாக்னி: விரசயதி நீராஜன விதிம்


You are of the form of rays, surrounded on all four sides by powerful
angels called Anima. Oh Mother - the one who does not  have a begining
and an end and the one who is most suitable for serving! It is not
surprising to know that the destroying fire of the deluge shows worshipful
Harathi to the one who always considers You as his soul and considers
the three eyed God's wealth as worthless and equivalent to dried grass.


அணிமா என்ற சக்திவாய்ந்த தேவதைகளால் நாலா புறமும்
சூழப்பட்டுள்ள நீ, கிரணங்களின் வடிவில் உள்ளாய். ஆதியும்,
அந்தமும் இல்லாதவளும், போற்றுதற்கு உரியவளுமான
தாயே! உன்னைத்  தன் நெஞ்சில் கொண்டுள்ளவர்களுக்கு, முக்கண்ணனின் செல்வத்தை மதிப்பற்றதாகவும், தர்ப்பைக்கு சமானமாகவும் எண்ணுபவர்களுக்கு பிரளயத்தின் அழிக்கும்
தீயானது வணக்கத்திற்குரிய தீப ஆராதனை செய்வதில் என்ன
ஆச்சர்யம் இருக்க முடியும்?

1 comment:

  1. இது கொஞ்சம் யோகம் சம்பந்தப் பட்டது. இதற்கு நேரடியான அர்த்தமாய் சூரிய, சந்திர, அக்னி மூவரையும் மூன்று முக்கியமான நாடிகளாய் நம் உடலில் இருப்பதைக் காட்டும். இடகலை, பிங்கலை, சுக்ஷும்னை ஆகிய மூன்று நாடிகளும் முறையே சூரிய, சந்திர, அக்னியைப் போல் செயல்பட்டு சாதகனுக்கு உதவி செய்கிறது. சிவனோடு இணையும் சக்தியாக சாதகன் மாறித் தன்னில் அவளைக் கண்டு தன் ஆன்மாவாகவே அம்பிகையைப் பாவிக்கிறான். அவனுடன் இணைந்து செயல்படும் சக்தியின் சொரூப சக்தியால் அவனும் சதாசிவனாகவே மதிக்கப் படுகிறான். அவன் கண்களில் மற்றப் புற உலகச் செல்வங்கள் துச்சமாயும், சிவ சாயுஜ்யப் பதவியே பெருமதிப்புக்குரிய செல்வமாகவும் தென்படும். மாபெரும் ஊழித்தீ கூட அவன் எதிரில் அவனுக்குக் காட்டப் படும் ஆரத்தி போலத் தென்படும்.

    ReplyDelete