Sunday, January 23, 2011

Soundarya Lahari 23

த்வயா ஹ்ருத்வா வாமம் வபுர் அபரித்ருப்தேந மனஸா
சரீரார்த்தம் சம்போ: அபரம் அபி சங்கே ஹ்ருதம் அபூத்
யத் ஏதத் த்வத்ரூபம் சகலம் அருணாபம் த்ரிநயனம்      
குசாப்யாம் ஆநம்ரம் குடில சசி சூடால மகுடம்

Your form in my mind is -
in the red colour like that of a rising sun,
adorned with three eyes,
having two heavy busts,
slightly bent wearing a crown with a crescent moon
arises a doubt in me that you were not satisfied by half
the body given by Shiva and You occupied all of His body.

உதிக்கின்ற சூரியனைப் போன்று சிவந்த நிறத்திலும்,
முக்கண்களால் அலங்கரிக்கப்பட்டதும், கனமான இரு மார்புகளை உடையதும்,
சற்றே வளைந்து இருப்பதும்,
பிறைச் சந்திரனைக் கொண்ட கிரீடத்தை அணிந்துள்ளதுமான
என் மனதில் உள்ள உன் உருவமானது , சிவன் உனக்கு அளித்த
பாதி உடலால் திருப்தி அடையாமல் அவனின் முழு உடலையும் அடைந்தாயோ என்னும் சந்தேகத்தை என்னுள்  எழுப்புகின்றது.

1 comment:

  1. அர்த்த நாரித் தத்துவம் என்றாலும் தேவியின் அருளைப் பெறவேண்டுமானால் ஒருமித்த தியானத்துடன் அவளே நினைவாகத் துதிக்கவேண்டும் என்பதே இங்கு சொல்லப் படும். வெளுத்த சிவனின் உடல் பாகம் சக்தியின் உடல் பாகத்தின் சிவப்பு காரணமாக முழு உடலும் சிவந்தே காணப் படுகிறதாம். மேலும் ஈசன் உருவே காணாமல் சக்தியின் உருவையே காண்கிறோம் எனில் ஈசன் சக்தியிடம் ஐக்கியமாகி விடுகிறான். ஆகவே இங்கே ஈசனுக்குத்தனி வடிவம் வேண்டாம் என்றும் சக்தி வழிபாட்டிலேயே சிவ வழிபாடும் சேர்ந்துவிடுகிறது என்ரும் கூறுவார்கள். சக்தி வழிபாட்டில் ஆதிசக்தியே மூலப் பொருள் என்றும் மற்ற சக்திகளூம், மற்ற மூர்த்திகளும் அவளிடமிருந்து தோன்றியதாய்ச் சொல்லுவார்கள்.

    ReplyDelete