Monday, January 31, 2011

Soundarya Lahari 31

சது: ஷஷ்ட்யா தந்த்ரை: ஸகலம் அதிஸந்தாய புவனம்
ஸ்திதஸ் தத் தத் ஸித்தி ப்ரஸவ பரதந்த்ரை: பசுபதி:
புன: த்வந்  நிர்பந்தாத் அகில புருஷார்த்தைக கடனா
ஸ்வதந்த்ரம் தே தந்த்ரம் க்ஷிதி தலம் அவாதீதர திதம்


Pasupathi - the Lord of all souls created the 64 thantras each of which
led to only one desired power and He started His relaxation. But Mother!
You goaded him to create your thantra called Srividya in this mortal world
that grants to the devotee all powers that gave energies over all the states
in life.


உலகில் உள்ள எல்லா ஆத்மாக்களின் தலைவனான பசுபதி,
64 தந்திராக்களைப்   படைத்து, அவை எல்லாம் ஒரே ஒரு
விருப்பப்பட்ட சக்தியை அளிக்கவல்லதாக்கி   அவன்
ஓய்வெடுக்கத் துவங்கினான். ஆனால் தாயே! உனது
தந்திராவான   ஸ்ரீவித்யாவை - பக்தர்களுக்கு வாழ்வின்
அனைத்து நிலைகளிலும் எல்லாச் சக்தியும், ஊட்டமும்
அளிப்பதை, அழிய வல்ல இவ்வுலகில் படைக்குமாறு
அவனை ஊக்கப்படுத்தினாய்.

1 comment:

  1. எல்லாருமே ஆதிசங்கரர் வந்து தான் சாக்தத்தை ஏற்படுத்தியதா நினைக்கிறாங்க. அப்படி இல்லை, அதுக்கும் முன்னாடியே ஏற்பட்டது. இதிலே சில பிரிவுகள் உண்டு. அது பத்தி அப்புறமா எழுதறேன். இப்போதைக்கு இது வைதீகர்கள் பின்பற்றும் சமய ஆசாரம் எனப்படும் வழிபாட்டு முறையைக் குறிக்கும். இதைத் தவிர கெளல மார்க்கம் என்னும் குண்டலினி யோக வித்யாவும் இருக்கு என்றாலும் பொதுவாய் தென்னாட்டில் சமய மார்க்கமே பின்பற்றப் படுகிறது. அம்பாளே சதுஷ் ஷஷ்டி கலாமயீ என லலிதா சஹஸ்ரநாமாவளியில் அழைக்கப் பட்டாலும், அவளை வழிபட என ஏற்பட்டது ஸ்ரீவித்யை. இதைஅம்பாள் கேட்டுக்கொண்டதற்கிணங்கி ஈசன் ஏற்படுத்தியதாக ஆசார்யாள் வாக்கு.

    ReplyDelete