Monday, January 31, 2011

Soundarya Lahari 38

ஸமுந்மீலத் ஸம்வித் கமல மகரந்தைக ரஸிகம்
பஜே ஹம்ஸத்வந்த்வம் கிமபி மஹதாம் மாநஸசரம்
யதாலாபாத் அஷ்டாதச குணித வித்யாபரிணதி:
யதாதத்தே தோஷாத் குண மகிலம் அத்ப்ய: பய இவ


I pray before the swan couple - who enjoys only the honey from the fully
open lotus flowers of knowledge, swim in the lake which is the mind of
the great ones and ones who can never be described. All the 18 arts
come from them and they can differentiate the good from the bad like
distinguishing milk from water.


ஞானம் என்னும் முற்றும் மலர்ந்த தாமரை மலர்களில் இருந்து தேனை மட்டுமே சுவைக்கும், மகான்கள் மற்றும் வர்ணிக்க இயலாதவர்களின்  மனம் என்னும் ஏரியில் நீந்தும் அன்னப் பறவை தம்பதிகளாகிய அவர்களை  வணங்குகிறேன். எல்லா 18 கலைகளும் அவர்களிடம் இருந்து தான் தோன்றின. பாலில் இருந்து நீரைப் பிரிப்பதைப் போல, அவர்களால் தீயவற்றிலிருந்து நல்லவற்றைப் பிரிக்க முடியும்.

2 comments:

  1. அநாஹத சக்கரத்தைக் குறிக்கும். அநாஹதம் வாயுவாகும், ஆகாயத்தில் இருந்து வாயுத் தத்துவம் தோன்றும். இது மனமாகிய தடாகத்தில் ஹம்ஸப் பறவைகளாக நீந்தி விளையாடும் அம்பிகையும், ஈசனும் பேசும் பேச்சுக்களை சாதகன் கேட்பதைக் குறிக்கிறது என்பார்கள். வித்தை கை கூடினால் அநாஹதச் சக்கரத்தில் சப்த மூலமாக ஏற்படும் அம்பிகையின் பிரத்யக்ஷம் புலப்படும் என சாக்தர்களின் கூற்று. இங்கே ஹம்ஸ உருவில் பேசும் பேச்சுக்களையே அஜபா மந்திரம் எனச் சொல்கிறோம். ஹம்ஸ; ஸோஹம் ஸோஹம் ஹம்ஸ்: என்பதே அந்த அஜபா மந்திரம். குரு மூலம் உபதேசம் பெற வேண்டும்.

    இவர்களின் இந்த மானசீக சம்பாஷணைகள் மூலமே பதினெட்டு வித்தைகள் சித்திக்கும். வேதங்கள் 4, சிக்ஷை, கல்பம், வ்யாகரணம், நிருத்தம், சந்தஸ், ஜோதிஷம் ஆகியன ஆறும் சேர்ந்து பத்து ஆகின்றன. அடுத்த எட்டு மீமாம்ஸம், நியாயம், புராணம், தர்ம சாஸ்திரம் முதலிய நான்கும், ஆயுர்வேதம், தநுர்வேதம், காந்தர்வ வேதம், நீதி சாஸ்திரம் ஆகிய நான்கும் ஆகும். இவை பதினெட்டு சித்திகள் என்றும் சொல்வார்கள்.

    ReplyDelete
  2. ரொம்ப நன்றி மாமி உங்களோட விளக்கங்களுக்கு.
    என்னோட மேலோட்டமான பதிவுகளை உங்களின் விளக்கங்கள் மேலும் தெளிவாக்குகின்றன.

    ReplyDelete