Monday, January 31, 2011

Soundarya Lahari 41

தவாதாரே மூலே ஸஹ ஸமயயா லாஸ்யபரயா
நவாத்மானம் மந்யே நவரஸ மஹா தாண்டவ நடம்
உபாப்யாம் ஏதாப்யாம் உதய விதிம் உத்திச்ய தயயா
ஸநாதாப்யாம் ஜக்ஞே ஜநக ஜநநீமத் ஜகதிதம்


I pray in your holy wheel of Mooladhara to You - who likes to dance
and calls Yourself as Samaya and the Lord - who performs the great
vigorous dance having all the shades of  navarasas. The world has
got You both as it's parents because You in Your mercy wed one
another to recreate the world, as it was destroyed in the great deluge.


நடனமாட ஆசைப்பட்டு,  சமயமாகத் தன்னை அழைத்துக் கொள்ளும் உன்னையும், நவரசத்தின் எல்லா பரிணாமங்களையும் காட்டி சிறந்த, தீவிர நடனம் புரியும் தலைவனையும் மூலாதாரமாகிய புனிதச் சக்கரத்தில் இருத்தி நான் வணங்குகிறேன். பிரளயக் காலத்தில் அழிந்த இவ்வுலகு மீண்டும் உய்வுற உங்களின் கருணையினால் ஒருவரை ஒருவர் திருமணம் செய்து கொண்டீர்கள். அப்படிப்பட்ட  உங்கள் இருவரையும் இவ்வுலகம் பெற்றோராக கொண்டுள்ளது.

1 comment:

  1. நீரில் இருந்தே பூமி, மண் தோன்றியது. அம்பிகை மணிபூரகத்தில் நீருண்ட மேகம் போன்ற சிவனிடம் மின்னல் கொடியாகக் காட்சி அளித்தவள், இங்கே மூலாதாரத்தில் லாஸ்யம் என்னும் அற்புதமான நடனம் செய்கிறாள். சிருஷ்டிக்கு இருப்பிடம் இதுவே. இங்கே தான் அம்பிகை ப்ரக்ருதி ரூபமாக லாஸ்ய நர்த்தனம் செய்து கொண்டு, ஆநந்தபைரவரான ஸதாசிவனைத் தாண்டவம் செய்யும் போது பார்க்கிறாள். சிருஷ்டி ஆரம்பிக்கிறது. உலகம் உற்பத்தி ஆகிறது. அம்பாளும் ஈசனும் ஒருவருக்கொருவர் சமம். அதனாலேயே ஸமயா என்றே அம்பிகை அழைக்கப் படுகிறாள். ரூபம், நாமம், அவஸ்தானம், அநுஷ்டானம், அதிஷ்டானம் ஆகிய ஐந்து சமங்களையும் இங்கே சொல்லுவார்கள். அனைத்து ஆதார சக்கரங்களிலும் அதிஷ்டானசமமும், ஜனக்ஜனனியாக அநுஷ்டான சமமும், லாஸ்ய தாண்டவங்களால் அவஸ்தான சமமும், இருவரின் சிவந்த நிறத்தால் ரூப சமமும், ஒரே மாதிரியான பெயர்களால், பைரவர், பைரவி போன்ற பெயர்களால் நாம சமமும் ஏற்படுகிறது.

    அகுலா ஸமயாந்தஸ்த்தா ஸமயாசார தத்ப்ரா என லலிதா சஹஸ்ரநாமம் கூறும்.

    ReplyDelete