Monday, January 31, 2011

Soundarya Lahari 37

விசுத்தௌ தே சுத்த ஸ்படிக விசதம் வ்யோம ஜநகம்
சிவம்  ஸேவே தேவீமபி சிவஸமாந  வ்யவஸிதாம்
யயோ: காந்த்யா யாந்த்யா: சசிகிரண ஸாரூப்ய ஸரணே:
விதூ தாந்தர் த்வாந்தா விலஸதி சகோரீவ ஜகதி


I bow before the Shiva - who is of the pure crystal form in your supremely
pure wheel and who creates the principle of ether and before You my
mother - who has the same line of thought as Him.
I bow  before You both - whose moon like light forever removes the
darkness of ignorance from the mind and which shines like the Chakora
bird, playing in the full moon light.


மிகவும் உயரிய புனிதச் சக்கரத்தில், தூய ஸ்படிகக் கல் போன்று இருக்கும், ஆகாய வெளியை படைத்தவரும் ஆன சிவனின் முன்பும், அவனோடு ஒத்த எண்ணங்களைக் கொண்ட தாயே! உன் முன்பும் நான் தலை வணங்குகிறேன். 
மனதில் அறியாமை என்னும்  இருட்டை நிரந்தரமாகப்  போக்கும்
சந்திர ஒளி போன்றும், பௌர்ணமி  நிலவில்  விளையாடும்  சகோரப்  பறவை  போன்றும்  ஒளி வீசும் உங்கள் இருவர் முன்பும் நான் தலை வணங்குகிறேன்.   

1 comment:

  1. முந்தின ஸ்லோகத்தில் ஆக்ஞா சக்கரத்தைக் குறிப்பிட்டிருந்தது அல்லவா? அது ஆன்மாவைக் குறிக்கும். ஆன்மாவிற்கு ஆக்ஞைகள் கிடைக்கும் இடம். நம் நாட்டில் ஆக்ஞா சக்கரத்திற்கான க்ஷேத்திரம் காசி. இங்கே குறிப்பிடுவது அந்த ஆக்ஞா தத்துவத்தில் இருந்து வரும் ஆகாய தத்துவம், விசுத்தி சக்கரம் என்றால் ஆகாயத்தைக் குறிக்கும். இங்கே மனம் என்னும் ஆகாயவெளியைக் குறிக்கிறது. அந்த ஆகாய வெளியை ஜோதிமயமாய்ப் பண்ணிக்கொண்டு பிரகாசிக்கும் அம்பிகையையும், ஈசனையும் ஜோதி மயமாகக் காண்கிறோம் இங்கே. சகல ஜீவன்களுக்கும் ஜீவாதாரமான அம்பிகையும் ஈசனும் மனதிலுள்ள இருட்டை நீக்கி ஒளிமயமாய்ப்பண்ணுகின்றனர். நம் நாட்டில் சிதம்பரம் ஆகாய க்ஷேத்திரம்.

    நம் உடலின் சக்கரங்கள் எழுவது மூலாதாரத்தில் இருந்தே. மூலாதாரத்தில் உறங்கும் குண்டலினியை எழுப்புவது தான் கெளல மார்க்கம் என்னும் சாக்த வழிபாடு. ஆனால் இங்கே தத்துவங்கள் தோன்றியதைக் குறிக்கும் ஸ்லோகங்கள் ஆகையால் முதலில் ஆக்ஞாவில் இருந்து ஆரம்பித்து கீழே செல்கிறோம். அடுத்தும் அப்படித்தான் வரும்.

    ReplyDelete